தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் தொழுகை முறை
1. நிய்யத் வைத்தல்
தொழுகை செல்லுபடியாக நிய்யத் ஒரு நிபந்தனையாகும். தான் தொழுவது மஃரிபா, இஷாவா அல்லது வேறு தொழுகையா என்பதை அறிந்த நிலையில் அல்லாஹ்வுக்காக தொழுவதாக மனதால் எண்ணுவதே நிய்யத்தாகும். அதனை வாயினால் மொழிவது மார்க்கத்தில் இல்லாதொன்றாகும். மறாக உள்ளத்தால் எண்ணுவதே இங்கு வேண்டப்பட்டுள்ளது. அதனை வாயினால் மொழிவது தவறாகும். ஏனெனில் நபியவர்களோ, நபித்தோழர்களோ அவ்வாறு மொழிந்ததாக எவ்வித ஆதாரமுமில்லை.
தொழுகைக்காக நின்ற நிலையில் அல்லாஹு அக்பர் என்று தக்பீரதுல் இஹ்ராம் (ஆரம்ப தக்பீர்) சொல்ல வேண்டும். தக்பீர்ச் சொல்லும் போது தனது இரு கைகளையும் கிப்லாத் திசையை நோக்கி, விரல்களை விரித்தவாறு தனது தோள்புயம் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும்.
தக்பீரின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் என்ற இந்த வார்த்தை மூலமன்றி தக்பீர் செல்லுபடியாக மாட்டாது. அதன் அர்த்தம் அல்லாஹ்வைப் புகழ்ந்து பெருமைப்படுத்துவதாகும். அவன்தான் அனைத்தையும் விட மிகப் பெரியவன். உலகிலுள்ள இன்பங்கள், ஆசைகள் அனைத்தையும் விட அல்லாஹ்தான் மிகப் பெரியவன். எனவே தொழுகையில் அவையனைத்தையும் ஒரு புறம்எறிந்து விட்டு எமது உள்ளத்தாலும், உள்ளுணர்வினாலும் பணிந்தவர்களாக உயர்த்தியான, மிகப்பெரியவனான அந்த அல்லாஹ்வை நாம் முன்னோக்குகின்றோம்.
3. பின் தனது வலது கையை இடது கையின் மணிக்கட்டின் புறப்பகுதியில் படுமாறு வைத்து, நெஞ்சின் மீது நிலை முழுவதும் வைக்க வேண்டும்.
4. நபியவர்களின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் துஆக்களில் ஒன்றின் மூலம் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும் : "ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலாஇலாஹ கைருக".
5. "அஊது பில்லாஹி மினஷ் ஷைதானிர் ரஜீம்" என்று கூற வேண்டும். இது தான் இஸ்திஆதா எனப்படும் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடும் முறையாகும்.
6. "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று கூற வேண்டும். இதன் அர்த்தம் அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு பரகத் தேடியவனாக ஆரம்பிக்கின்றேன் என்பதாகும்.
7. ஸூரா பாத்திஹா ஓத வேண்டும். அல்குர்ஆனில் மிக மகத்தான அத்தியாயம் ஸூரா பாத்திஹாவாகும்
இவ்வத்தியாயத்தை நபியவர்களுக்கு அருளியதை அல்லாஹ் பேருபகாரமாகக் கூறிக்காட்டுகின்றான் : "நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான அல்குர்ஆனையும் தந்தோம்". (ஹிஜ்ர் : 87). திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்பது ஸூரா பாத்திஹாவையே குறிக்கின்றது. தினமும் மக்கள் பல தடவைகள் இவ்வேழு வசனங்களையும் ஓதுவதாலேயே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனைக் கற்பது முஸ்லிமுக்குக் கடமையாகும். தனித்துத் தொழுபவர் மீதும், இமாம் சத்தமிட்டு ஓதாத கூட்டுத் தொழுகைகளில் பின்பற்றித் தொழுபவர் மீதும் இதை ஓதுவது பிரதான கடமையாகும்.
ஸூரா பாத்திஹா
8. ஸூரா பாத்திஹா ஓதி முடிந்ததன்பின், அல்லது இமாம் ஓதுவதைக் கேட்ட பின் ஆமீன் எனக் கூறுவது ஸுன்னாவாகும். அதன் அர்த்தம் இறைவா நீ பதிலளிப்பாயாக என்பதாகும்.
9. ஸூரா பாத்திஹா ஓதியதன் பின் முதலிரு ரக்அத்களிலும் வேறொரு ஸூராவையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும். மூன்றாம், நான்காம் ரக்அத்களில் ஸூரா பாத்திஹாவுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும்.
ஸூரா பாத்திஹாவும், பிற ஸூராக்களும் பஜ்ர், மற்றும் மஃரிப், இஷாவின் முதலிரு ரக்அத்களில் சத்தமிட்டு ஓத வேண்டும். ளுஹர், அஸர் தொழுகைகளில் இரகசியமாக ஓதுதல் வேண்டும். தொழுகையின் ஏனைய திக்ருகளை இரகசியமாகவே ஓத வேண்டும்,
10. தனது இரு கைகளையும் தோள் புயத்தளவிற்கு அல்லது அதை விட சற்று உயர்த்தி தக்பீர் சொல்லியவராக ருகூஃ செய்ய வேண்டும். முதல் தக்பீரைப் போன்று இரு உள்ளங்கைகளையும் கிப்லாத் திசையை நோக்கி வைக்க வேண்டும்.
11. தனது விரல்களை பிரித்தவண்ணம் தனது இருகைகளையும் முட்டுக்காலில் வைத்து, தலையும் முதுகும் சமமாக கிப்லாத் திசையை நோக்கி இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஸுப்ஹான ரப்பியல் அழீம் என்று கூறிக்கொள்வார். மேற்கண்ட தஸ்பீஹை மூன்று தடவைகள் கூறுவது ஸுன்னாவாகும். ஒரு முறை கூறுவதுதான் அவசியமாகும். இந்த ருகூஃ அல்லாஹ்வைப் புகழ்ந்து மகத்துவப்படுத்துவதற்குரிய இடமாகும்.
ஸுப்ஹான ரப்பியல் அழீம் என்பதன் அர்த்தம் மகத்தான அல்லாஹ்வை அனைத்து வித குறைகளை விட்டும் தூய்மைப்புத்துவதாகும். அல்லாஹ்வுக்குக் கீழ்பபடிந்த நிலையில் குனிநதவனாக இதனை நான் கூறுகின்றேன்.
இருகைகளையும் கிப்லாத் திசையை நோக்கியவாறு தோள்புயம் அல்லது காதளவிற்கு உயர்த்தி, இமாமாக அல்லது தனித்துத் தொழுபவராக இருந்தால் "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு" என்று நடுநிலையி்ல் கூற வேண்டும். பின் அனைவரும் "ரப்பனா வலகல்ஹம்து" என்று கூற வேண்டும்.
அதனுடன் மேலதிகமாக பின்வரும் திக்ரையும் சேர்த்துக் கொள்வது ஸுன்னத்தாகும் "ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் பீஹி மில்அஸ்ஸமாவாதி வல்அர்ழி வமில்அ மாஷிஃத மின்பஃது" .
அதன் பின்னர் மூக்குடன் நெற்றி, இரு கைகள், இரு முட்டுக்கால்கள், இரு கால்கள் ஆகிய ஏழு உறுப்புக்களும் தரையில் படுமாறு குனிந்து சிரம் பணிய வேண்டும். தோள் புயங்களை விலாக்களை விட்டும் தூரமாக்கியும், வயிறை தொடைகளை விட்டும் தூரமாக்கியும், தொடைகளைக் கால்களை விட்டும் தூரமாக்கியும் வைப்பதுடன், இரு முன்னங்கைகளையும் தரையில் படாமல் உயர்த்தி வைக்க வேண்டும் .
14. ஸுஜூதில் "ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என ஒரு தடவை அவசியம் கூற வேண்டும். அதனை மூன்று தடவைகள் கூறுவது ஸுன்னாவாகும்.
"ஸுப்ஹான ரப்பியல் அஃலா" என்பதன் அர்த்தம் ஏழு வானங்களுக்கும் மேலாலுள்ள உயர்த்தியான அல்லாஹ்வை அவனுடைய மகத்துவம், மதிப்பு அனைத்திலும் சகல குறைகளிலிருந்தும் நான் தூய்மைப்படுத்துகின்றேன் என்பதாகும். தாழ்வுடனும், பணிவுடனும் தரையில் ஓட்டியவாறு சிரம்பணிந்திருப்பவர் தனக்கும் தனது உயர்வான படைப்பாளனுக்கும் இடையில் மத்தியிலுள்ள வேறுபாட்டை நினைவுகூர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு பணிவதற்கு இதில் சிறந்த விழிப்புணர்வுள்ளது.
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் இடங்களில் ஸுஜூது தான் மிக மகத்தான இடமாகும். அவசியம் ஓத வேண்டிய திக்ருகளை ஓதியதன் பின் ஈருலக நலவுகளில் தான் நாடியதை ஒரு முஸ்லிமுக்குக் கேட்கலாம். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : ''ஓர் அடியான் ஸுஜூதிலேயே தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக உள்ளான், எனவே அதில் அதிகமாகப் பிரார்த்தியுங்கள்"" (முஸ்லிம் 482) .
தனது வலது காலை நட்டு இடது காலை விரித்து அதன் மீது உட்கார்ந்து, இரு கைகளையும் தனது தொடைகளிலும் முட்டுக்கால்களிலும் படுமாறு வைத்துக் கொள்வது விரும்பத்தக்கதாகும்.
தொழுகையில் உட்காரும் முறை
தொழுகையின் அனைத்து அமர்வுகளிலும் ஏற்கனவே கூறப்பட்ட முறையில் உட்காருவது விரும்பத்தக்கதாகும். ஆனால் இறுதி அமர்வில் மண்டியிட்டு தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடதுகாலை வலதுகாலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலதுகாலை நாட்டி வைக்க வேண்டும்.
16. இரு ஸஜ்தாக்களுக்கும் இடையிலான நடு இருப்பில் ரப்பிஃபிர்லீ என மூன்று தடவைகள் கூறுவது ஸுன்னாவாகும்.
17. பின், முதலாம் ஸுஜூதைப் போன்றே இரண்டாம் ஸுஜுது செய்ய வேண்டும்,
18. பின் அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு இரண்டாம் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வர வேண்டும்.
19. முதலாம் ரக்அத்தைப் போன்றே இரண்டாவது ரக்அத்தையும் முழுமையாகத் தொழ வேண்டும்.
அதில் "அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹந் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ" எனக் கூற வேண்டும்.
21. பின் தொழுகையின் மீதியைப் பூர்த்தி செய்ய எழும்ப வேண்டும்.
மூன்று ரக்அத் அல்லது நான்கு ரக்அத் கொண்ட தொழுகையாக இருந்தால் மீண்டும் எழும்பி அவ்விரண்டிலும் ஸூரா பாதிஹாவை மாத்திரம் ஓத வேண்டும்.
முதல் அத்தஹிய்யாத்தைப் போன்றே ஓதி விட்டு இதில் மேலதிகமாக பின்வருமாறு நபியவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும் : "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலாஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். வபாரிக் அலா முஹம்மதின் வஅலாஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலாஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்".
அதன் பின்னர் பின்வரும் துஆவை ஓதுவது விரும்பத்தக்கதாகும் : "அஊது பில்லாஹி மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி வமின் பித்னதில் மஸீஹித் தஜ்ஜால்". மேலும் தான் விரும்பிய துஆவைக் கேட்க வேண்டும்.
ஸலாம் சொல்வதன் மூலம் ஒரு முஸ்லிமுடைய தொழுகை முடிந்து விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அதன் ஆரம்பம் தக்பீராகும், முடிவு ஸலாமாகும்". (அபூதாவூத் 61, திர்மிதி 3.) அதாவது முதலாம் தக்பீர் மூலம் தொழுகையினுள் நுழைந்து, ஸலாம் கூறுவதன் மூலம் அதிலிருந்து வெளியேறுவதாகும்.
24. கடமையான தொழுகையில் ஸலாம் கூறிய பின் பின்வருவனவற்றைக் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
தொழுகையில் கடமையான திக்ருகளை மனனமிட முயற்சிக்க வேண்டும். அவை அரபுமொழியிலன்றி செல்லுபடியாக மாட்டாது. அவையாவன : பாதிஹா, தக்பீர், ஸுப்ஹான ரப்பியல் அழீம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லகல் ஹம்து, ஸுப்ஹான ரப்பியல் அஃலா, ரப்பிஃபிர்லீ, அத்தஹிய்யாத்து, நபியின் மீது ஸலவாத் கூறுதல், ஸலாம் கூறுதல் ஆகியனவாகும்.
மனனமாவதற்கு முன்னர் தனக்குத் தெரிந்த தஸ்பீஹ், புகழாரங்கள், தக்பீர் போன்றவற்றை பல தடவைகள் ஓத வேண்டும், அல்லது தனக்கு மனனமுள்ள வசனத்தை நிலையில் திரும்பத் திரும்ப ஓத வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் சக்தி பெறுமளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்". (தகாபுன் : 16).
நவ முஸ்லிம் தனது தொழுகையைத் திறன்பட நிறைவேற்றுவதற்காக ஆரம்ப காலப்பகுதியில் கூட்டாகத் தொழுவதற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அத்துடன் பின்பற்றித் தொழும் மஃமூன் குறைகளில் சிலவற்றை இமாம் பெறுப்பேற்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.