கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் குளிர்காலம் என்பதன் அர்த்தம்

குளிர்காலம் என்பது ஒரு பருவ காலமாகும். பல மதிநுட்பங்களுக்காக அல்லாஹ் அதனை ஏற்படுத்தியுள்ளான். அவனது வல்லமையின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றே. அவனே இரவையும் பகலையும், உஷ்னத்தையும் குளிரையும், கோடை காலம், மாரி காலத்தையும் புரட்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன." (ஆலஇம்ராம் : 190). இந்த மாற்றங்கள் இயற்கைக் காரணிகளுக்காக இருந்தாலும் அக்காரணிகளைப் படைத்தவன் அல்லாஹ்வே. அவற்றிலே கூட அல்லாஹ்வின் மதிநுட்பம், கருணையின் வெளிப்பாடுகள் உள்ளன.

  • குளிர்காலம் மற்றும் சுழற்சி முறையில் வரும் பருவகாலங்களில் அல்லாஹ்வின் மதிநுட்பத்தை அறிந்து கொள்ளல்.
  • சட்டதிட்டங்களில் இஸ்லாத்தின் இலகுபடுத்தலை உணர்தல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

குளிர்காலம் என்பது ஒரு பருவ காலமாகும். பல மதிநுட்பங்களுக்காக அல்லாஹ் அதனை ஏற்படுத்தியுள்ளான்.

அல்குர்ஆனில் குளிர்காலம்

குளிர்காலத்திற்குப் பயன்படுத்தும் அரபு வார்த்தையான "ஷிதாஃ" எனும் வார்த்தை அல்குர்ஆனில் ஒரேயொரு தடவை மாத்திரம் ஸூரா குரைஷில் இடம்பெற்றுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, குளிர் காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக"- (குரைஷ் 1,2). குளிர்காலப் பிரயாணம் என்பது குரைஷியர் வியாபாரத்திற்காக யமன் தேசத்திற்குச் செல்வதையும், கோடைகாலப் பிரயாணம் என்பது அக்காலத்தில் ஷாம் (ஸிரியா மற்றும் அதைச் சூழவுள்ள நாடுகள்) தேசத்திற்குச் செல்வதையும் குறிக்கின்றது.

குளிர்காலம் கோடைகலத்திற்கு எதிர்ப்பருவமாகும். வசந்த காலம், மற்றும் இலையுதிர் காலம் ஆகியன அவற்றிற்கிடையே உள்ள பிரிவுகளைப் போன்றாகும். இதனால்தான் சில அறிஞர்கள் வருடத்தில் கோடை, மாரி (குளிர்) என இரு பருவங்கள்தான் உள்ளன எனக் கூறுகின்றனர்.

குளிர்காலம் அல்லாஹ்வின் வல்லமையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

குளிர்காலம் அல்லாஹ்வின் வல்லமையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். அவனே இரவையும் பகலையும், உஷ்னத்தையும் குளிரையும், கோடை காலம், மாரி காலத்தையும் புரட்டுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன." (ஆலஇம்ராம் : 190). இந்த மாற்றங்கள் இயற்கைக் காரணிகளுக்காக இருந்தாலும் அக்காரணிகளைப் படைத்தவன் அல்லாஹ்வே. அவற்றிலே கூட அல்லாஹ்வின் மதிநுட்பம், கருணையின் வெளிப்பாடுகள் உள்ளன.

வாழ்நாளைப் பயன்படுத்தவும், இறையருளை நினைவு கூறவும் குளிர்காலம் ஒரு சந்தர்ப்பமாகும்.

குளிர்காலம் மற்றும் கால மாற்றம் மனிதனுடைய வாழ்நாளைப் பயன்படுத்துவதில் அவனது அலட்சியத்தை நினைவுகூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். சென்ற குளிர்காலப் பருவம் எவ்வளவு வேகமாகக் கடந்து சென்று விட்டதென்பதை நினைவுகூர்வான். எனினும் புதிய பருவம் முந்தைய பருவத்தில் விடுபட்டதை ஈடு செய்ய ஒரு சந்தர்ப்பமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்." (புர்கான் : 62). உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "இரவில் உனக்குத் தவறியதை பகலில் அடைந்து கொள். ஏனெனில் அல்லாஹ் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கியுள்ளான்".

குளிரைக் கட்டுப்படுத்தும் கம்பளி ஆடை, மற்றும் கருவிகள் மூலம் அல்லாஹ் இலகுபடுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை நினைவுகூற குளிர்காலம் நல்லதொரு சந்தர்ப்பமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்". (நஹ்ல் : 5). அவை நன்றி செலுத்தப்பட வேண்டியவையாகும். அல்லாஹ் கூறுகின்றான் “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்”. (இப்ராஹீம் : 7).

மறுமையை நினைவு கூற குளிர்காலம் ஒரு சந்தர்ப்பமாகும் :

கடுமையான குளிரில் பல படிப்பினைகளும் பாடங்களும் உள்ளன. பின்வரும் நபிமொழியிலிருந்து அதனை நாம் பெறலாம் : "நரகம் தன் இறைவனிடம், 'என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே'' என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரண்டு மூச்சுகள்விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்." (புஹாரி 3260, முஸ்லிம் 617).

நரகவாதிகள் கடும் உஷ்னத்தின் மூலம் வேதனை செய்யப்படுவதைப் போன்று கடும் குளிரினாலும் வேதனை செய்யப்படுகின்றனர். அல்லாஹ் கூறுகின்றான்: "அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் கடும் குளிரான சீழையும் தவிர.(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்." (நபஃ : 24- 26). இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கஸ்ஸாக் எனும் அரபு வார்த்தையின் அர்த்தங்களில் எரிக்கும் சக்தியுள்ள கடுங்குளிராகும். நரக வாதிகள் கடும் உஷ்னத்தை விட்டும் பாதுகாப்புத் தேடும் போது எலும்புகளை கிழிக்கக் கூடிய கடும் குளிர்காற்றின் மூலம் பாதுகாப்பளி்கப்படும். மீண்டும் நரக உஷ்னத்தின் மூலமே பாதுகாப்புத் தேடுவார்கள். அல்லாஹ்விடமே பாதுகாப்பைத் தேடுகிறோம்.

பனிக்கட்டி விழுவதைக் காணும் போதெல்லாம் மறுமையில் ஏடுகள் பரிமாரப்படுவதை நான் நினைவுகூராமல் இருந்ததில்லை என ஒரு தியானி கூறுகின்றார்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்