தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல், மற்றும் கபனிடுதல்
ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய காரியங்கள்
உயிர் உடலை விட்டும் பிரிந்து மரணம் உறுதியாகி விட்டால் பல விடயங்கள் அந்த ஜனாஸாவுக்குச் செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகின்றது.
அபூ ஸலமா (ரலி) அவர்கள் மரணித்த வேளை அவர்களுடைய பார்வை அன்னாந்திருக்கும் நிலையில் நபியவர்கள் நுழைந்த போது இரு கண்களையும் கசக்கி மூடி விட்டார்கள். மேலும் கூறினார்கள் : "மரணித்தவரிடத்தில் நீங்கள் சென்றால் அவருடைய கண்ணை கசக்கி மூடி விடுங்கள்". (இப்னுமாஜா 1455).
2. மனதைக் கட்டுப்படுத்தி பொறுமையாக இருத்தல்.
மனதுக்குக் கட்டுப்பட்டு குரலுயர்த்தி ஒப்பாரி வைக்காமல் மைய்யித்தின் குடும்பத்தார் உறவினர்களையும் பொறுமையாக இருக்க வைத்தல். நபி (ஸல்) அவர்கள் தனது பெண்பிள்ளை ஒருவருடைய சிறு குழந்தை மரணித்த போது பொறுமை செய்து நன்மையை எதிர்பார்த்திருக்குமாறு ஏவினார்கள். (புஹாரி 1284, முஸ்லிம் 923).
அபூ ஸலமா ரலி என்ற நபித்தோழர் மரணித்த போது நபி ஸல் அவர்கள் அவ்வாறுதான் நடந்து கொண்டார்கள். அன்னார் கூறினார்கள் : "உயிர் கைப்பற்றப்படும்போது பார்வை அதைப் பின்தொடர்கிறது" என்று கூறினார்கள். பின்பு, "இறைவா! அபூஸலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். (முஸ்லிம் 920).
அதனைக் குளிப்பாட்டி, தொழுகை நடத்தி, அதனை அடக்கம் செய்யும் பணிகளை துரிதப்படுத்துதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஜனாஸாவைத் துரிதமாகக் கொண்டுசெல்லுங்கள். ஏனெனில், அது நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்கான) நன்மையின் பக்கம் அதை விரைவுபடுத்துகிறீர்கள். வேறு விதமாக அது இருந்தால், ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள்". (புஹாரி 1315, முஸ்லிம் 944).
5. மைய்யித்தின் குடும்பத்தாருக்கு உதவுதல்.
அவர்களது சில சுமைகளை இலகுபடுத்தி உதவி செய்தல். நபி (ஸல்) அவர்கள் தனது சிறிய தந்தையின் புதல்வர் ஜஃபர் (ரலி) அவர்கள் போரில் உயிர்த்தியாகம் செய்த நேரத்தில் : "ஜஃபரின் குடும்பத்தாருக்கு உணவு சமைத்துக் கொடுங்கள், ஏனெனில் அவர்களை கவலைப் படுத்தும் விடயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்கள். (அபூதாவூத் 3132, திர்மிதி 998, - அவர்கள் இதனை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள் -, இப்னுமாஜா 1610).
மைத்தைக் கபனிட்டு, அடக்கம் செய்ய முன் அதனைக் குளிப்பாட்டுவது அவசியமாகும். அப்பணியை அவருடைய குடும்பத்தார், உறவினர்கள் அல்லது பிற முஸ்லிம்களில் ஒருவர் மேற்கொள்ள வேண்டும். இயல்பிலே தூய்மையான, பிறரைத் தூய்மைப்படுத்த வந்த நபியவர்கள் கூட மரணித்த போது குளிப்பாட்டப்பட்டார்கள்.
முழு உடலிலும் தண்ணீர் படுமளவு குளிப்பாட்டினால் போதுமானதாகும். அதில் அசுத்தங்கள் ஏதும் இருந்தால் நீக்கி விட வேண்டும். அத்துடன் மைய்யித்தின் அவ்ரத் (மறைவிடம்) பாதுகாக்கப்பட வேண்டும். பின்வரும் விடயங்கள் குளிப்பாட்டும் போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் :
1. மைய்யித்தின் ஆடைகளைக் களைந்த பின் அதன் தொப்புள் - முழங்காலுக்கு இடைப்பட்ட பகுதி மறைக்கப்பட வேண்டும்.
2. மையித்தின் மறைவிடத்தைக் கழுவும் போது கையில் ஒரு துணி, அல்லது கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.
3. மைய்யித்திலுள்ள அசுத்தங்களை முதலில் நீக்க வேண்டும்.
4. பின் வழமையான ஒழுங்கு முறையில் வுழூவின் உறுப்புக்களைக் கழுவிவிடுதல்.
5. பின் தலையையும், உடலின் ஏனைய பகுதிகளையும் கழுவ வேண்டும். இழந்தையிலை, அல்லது சவர்க்காரத்தை நீருடன் கலந்து ஊற்ற வேண்டும்.
6. முதலில் வலது புறமும், பின்னர் இடது புறமும் கழுவுவது விரும்பத்தக்கதாகும்.
7. மூன்று தடவைகள் அல்லது தேவையேற்படும் பட்சத்தில் அதற்கதிகமாகவும் கழுவுவது விரும்பத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் தனது புதல்வி ஸைனப் (ரலி) அவர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த பெண்களிடம் : "மூன்று, அல்லது ஐந்து, அல்லது தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் அவரை குளிப்பாட்டுங்கள்" எனக் கூறினார்கள். (புஹாரி 1253, முஸ்லிம் 939).
8. துணி, பஞ்சு போன்றதையும் வைக்கலாம்.
முன், பின் துவாரங்கள், இரு காதுகள், மூக்கு, வாய் போன்ற உறுப்புக்களிலிருந்து கழிவு, இரத்தம் போன்றவை வெளிப்படாமலிருக்கு துணி, பஞ்சு போன்றவற்றை வைக்கலாம்.
குளிப்பாட்டும் போதும், குளிப்பாட்டி முடிந்ததும் நறுமணம் பூசுவது ஸுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் தனது புதல்வி ஸைனப் (ரலி) அவர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த பெண்களிடம் இறுதித் தடவையில் கற்பூரம் என்ற வாசனப் பொருளை சேர்த்துக் கொள்ளுமாறு பணித்தார்கள். (புஹாரி 1253, முஸ்லிம் 939).
யார் குளிப்பாட்டுவது?
(கணவன் மனைவியருள் ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் நபி ஸல் அவர்களை அவர்களது மனைவியர்தாம் குளிப்பாட்டியிருப்பர் என ஆஇஷா (ரலி) அவர்கள் கூறனார்கள். (அபூதாவூத் 3141, இப்னுமாஜா 1464).
மைய்யித்தை முழுமையாக மறைக்கும் விதத்தில் கபனிடுவது அவரது குடும்பத்தார், முஸ்லிம்கள் அவருக்குச் செய்ய வேண்டிய உரிமையாகும். இது ஒரு சமூகக் கடமையும் கூட. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்". (அபூதாவூத் 3878.)
கபனுக்குரிய செலவினத்தை மைய்யித் விட்டுச் சென்ற சொத்திலிருந்து பெறப்படும். அவரிடம் சொத்தில்லையெனில் அவரது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரப்பிள்ளை போன்று அவருக்கு செலவு செய்யும் பொறுப்பிலுள்ள ஒருவர் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களுக்கும் முடியா விட்டால் முஸ்லிம் செல்வந்தர்கள் மீது அது கடமையாகி விடும்.
கபனிடுவதில் கடமையானளவு ஆணோ, பெண்ணோ முழு உடலையும் மறைக்குமளது தூய்மையான ஆடையிருந்தால் போதுமானது.