கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஜனாஸாத் தொழுகை, மற்றும் அடக்கம் செய்தல்

ஒரு முஸ்லிம் மரணித்தால் அவருக்காக தொழுகை நடத்துவது ஏனைய சகோதரர் மீது கடமையாகும். இது இஸ்லாம் முஸ்லிமை கண்ணியப்படுத்தி இருப்பதன் வெளிப்பாடாகும். ஜனாஸாத் தொழுகை, அடக்கம் செய்தல் ஆகியவற்றின் சில சட்டங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • ஜனாஸாத் தொழுகை முறையை அறிதல்.
  • அடக்கம் செய்வதிலுள்ள சில சட்டங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஜனாஸாத் தொழுகையின் சட்டம்.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கமன்றி பொதுவாக முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் மீது ஜனாஸாத் தொழுகை கடமையாகும். இது ஒரு சமூகக் கடமை, ஒரு கூட்டம் அதனை நிறைவேற்றினால் ஏனையோருடைய பொறுப்பு நீங்கி விடும்'. ஜனாஸா இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு, தொழுகையிலும் கலந்து கொள்பவருக்கு பிரமாண்டமான மலையளவு நன்மை உண்டென நபியவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள் : 'ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)'' என்றார்கள். (புஹாரி 1325, முஸ்லிம் 945).

இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதன் சிறப்பு

ஜனாஸா இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, அதனைப் பின்துயர்ந்து செல்வதில் பல பயன்கள் உண்டு, தொழுகை நிறைவேற்றி, பரிந்துரை செய்து, அவருக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் மையித்திற்கான கடமையை நிறைவேற்றல், அவரது குடும்பத்திற்கான கடமையை நிறைவேற்றல், மரணத்தினலால் அவர்களுக்கேற்பட்ட சோதனைகளை ஈடு செய்தல், பின்தொடர்பவருக்கான மகத்தான கூலியை அடைந்து கொள்ளல், ஜனாஸாக்கள், மண்ணறைகளைக் காண்பதன் மூலம் படிப்பினை பெறுதல் போன்ற பல பயன்கள் உள்ளன.

ஜனாஸாத் தொழுகை முறை :

1. தொழக்கூடியவருக்கும், கிப்லாத் திசைக்கும் இடையில் ஜனாஸாவை வைத்து, ஆண் ஜனாஸாவின் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும். இவ்வாறுதான் நபியவர்கள் நின்றதாக நபிமொழிகளில் உள்ளது. (அபூதாவூத் 3196).

2. தொழுகை கூட்டாக நடத்தப்படுவதே ஸுன்னத்தாகும். பொதுவாக கூட்டுத் தொழுகையில் இமாம் ஏனையவர்களை விட முன்னாள் நிற்பதைப் போன்று இதிலும் நிற்க வேண்டும்.

3. பின்வருமாறு ஜனாஸாத் தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூற வேண்டும் :

-

முதலாம் தக்பீர்

தனது இரு கைகளையும்தனது தோள்புயம் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்தி அல்லாஹு அக்பர் என முதல் தக்பீர் கூறி வலது கையை இடது கையின் மணிக்கட்டின் புறப்பகுதியில் படுமாறு வைத்து, நெஞ்சின் மீது வைக்க வேண்டும். ஆரம்ப துஆக்கள் ஏதும் ஓதாமல், அஊது, பிஸ்மில் கூறி இரகசியமாக ஸூரா பாதிஹா ஓத வேண்டும்.

இரண்டாம் தக்பீர்

இதில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். குறைந்த பட்சம் "அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா முஹம்மத்" எனக் கூற வேண்டும். தொழுகையின் இறுதி அத்தஹிய்யாத்தில் கூறுவது போன்று முழுமையான ஸலவாத் கூறினால் அதுவும் சிறந்தது. "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி ‎முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி ‎இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.‎ அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி ‎முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி ‎இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்".‎

மூன்றாம் தக்பீர்

ஜனாஸாவுக்காக இதில் பிராத்திக்க வேண்டும். அல்லாஹ்வின் கருணை, மன்னிப்பு, சுவனம் கிடைக்கவும், கேள்வி கேட்கப்படும்போது உள்ளத்தையும், நாவையும் திறந்து கொடுக்குமாறும் பிரார்த்திக்க வேண்டும். நபியவர்கள் ஓதிய துஆக்கள் மனனமிட்டிருந்தால் அவற்றை ஓதுவது மிகச் சிறந்தது.

அவ்வாறான துஆக்களில் பின்வருவனவும் உள்ளன : "அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு, வஆஃபிஹீ வஃபு அன்ஹு ‎, வஅக்ரிம் நுஸுலஹு , வவஸ்ஸிஃ முத்கலஹு , ‎வக்ஸில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் ‎கதாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ், ‎வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி, வஅஹ்லன் கைரன் ‎மின் அஹ்லிஹி, வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி, வஅத்ஹில்ஹுல் ஜன்னத , வஅஇத்ஹு மின் அதாபின்னார்". (முஸ்லிம் 963).

நான்காம் தக்பீர்

இதில் சிறிது நேரம் இருந்து விட்டு பின்னர் வலது அல்லது இடது புறம் திரும்பி ஸலாம் கூற வேண்டும். இரு முறைகளும் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாஸாத் தொழுகை நடத்தும் இடம் :

பள்ளியில், அல்லது அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி இடத்தில், அல்லது மண்ணறையில் ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றலாம். அனைத்தும் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாஸாவைச் சுமந்து செல்லல் மற்றும் அதனைப் பின் தொடர்தல்

ஜனாஸாவின் இறுதிச் சடங்குகளைத் துரிதப்படுத்தி, தாமதமாகாமல் தொழுகை நடத்தி, மண்ணறைக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்வதே ஸுன்னாவாகும்.

ஜனாஸாவைப் பின்தொடர்பவர் அதனை சுமந்து செல்வதில் பங்கெடுப்பது விரும்பத்தக்கதாகும். ஆண்கள் மாத்திரமே ஜனாஸாவை சுமந்து செல்வர். நடந்து செல்பவர் அதற்கு முன்னும் பின்னுமாகச் செல்வது ஸுன்னத்தாகும். மண்ணறை இருக்குமிடம் தொலைவில் இருந்தால் அல்லது சுமப்பதில் சிரமம் இருந்தால் வாகனத்தில் எடுத்துச் செல்வதில் ஆட்சேபனையில்லை.

அடக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்

١
ஜனாஸாவைக் குளிப்பாட்டல், கபனிடல், தொழுகை நடத்தல் போன்றன நிறைவடைந்தால் அடக்கம் செய்வதைத் துரிதப்படுத்துவது விரும்பத்தக்கது.
٢
கப்ரை (மண்ணறை) தேவையானளவு ஆழமாக்கி, விஸ்தரிப்பது சிறந்தது. துர்வாடை வீசாமலும், வன விலங்குகள் தோண்டி சிதைக்காமலும், வெள்ளங்கள் கப்ரையும் உடலையும் அடித்துச் செல்லாமலும் பாதுகாக்குமளவு அமைந்திருந்தால் போதுமானது.
٣
மண்ணறை உட்குழியுள்ளதாகவும் (லஹ்த்), உட்குழியற்றதாகவும் (ஷக்க்) இருக்கலாம். ஒவ்வொரு ஊரிலும் நிலத்தின் தன்மை மற்றும் அதன் கடினத்தன்மைக்கு ஏற்ப பொருத்தமானதைத் தெரிவு செய்யலாம்.
٤
ஜனாஸாவை கிப்லாத் திசையை முன்னாக்கி வலது புறமாக வைப்பது விரும்பத்தக்கது.
٥
ஜனாஸாவை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா மில்லதி ரஸூலில்லாஹி எனக் கூறுவதும் ஸுன்னத்தாகும். (திர்மிதி 1046, இப்னுமாஜா 1550).
١
அடக்கம்செய்து முடிந்து மண்ணால் மூடுவதற்கு முன்னர் மண்ணறை உட்குழி உள்ளதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உடலை வைத்த இடத்தை களிமண், பலகை, கற்கள் போன்ற ஒன்றின் மூலம் அடைப்பது அவசியமாகும்.
٢
கலந்து கொண்டவர்களும் மண்ணறை மீது மண் அள்ளிப் போடுவதில் பங்கெடுப்பது விரும்பத்தக்கது. நபி (ஸல்) அவர்கள் மரணித்த ஒருவருக்கு தனது கையால் மூன்று பிடி மண் போட்டார்கள். (தாரகுத்னீ 1565.)
٣
மண்ணறை என அறியப்படுவதற்காக ஒரு சாண் அளவு அதனை உயர்த்துவது விரும்பத்தக்கது, அப்போது மக்கள் அதனை மிதித்து சிதைக்காமலும், அதனைக் கடக்காமலும் இருக்கலாம். அதன் மேல் கட்டிடங்கள் எழுப்புவதன் மூலம் அளவு கடந்து செல்வதும் ஹராமாகும். இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில் இது மைய்யித்தை கண்ணியப்படுத்தி, அல்லாஹ்வுக்கு இணைவைக்க வழிவகுக்கும்.

அடக்கத்திற்குப் பின்

அடக்கம் செய்து முடிந்தவுடன் கலந்து கொண்டோர் மைய்யித்தின் மனவுறுதி, பாவமன்னிப்பு போன்றவற்றுக்காக பிரார்த்திப்பது விரும்பத்தக்கதாகும். ஒரு நபித்தோழரை அடக்கம் செய்த பின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களது சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்புத் தேடுங்கள், அவருக்கு மனவுறுதியைக் கேளுங்கள், இப்போது அவர் கேள்வி கேட்கப்படப் போகின்றார்". (அபூதாவூத் 3223).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்