கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஆர்தல் கூறுதல் மற்றும் துக்கம் அனுஷ்டித்தல்

ஆர்தல் கூறுதல், மரணித்தவருக்காகத் துக்கப்படுதல், மண்ணறைகளைத் தரிசித்தல் என்பவற்றுக்கு சில சட்டங்கள், ஒழுங்குகள் உள்ளன. முஸ்லிம் அவற்றைக் கடைபிடிப்பது அவசியமாகும். அவற்றில் சிலதை இப்பாடத்தில் கற்போம்.

ஆர்தல் கூறுதல், மண்ணறைகளைத் தரிசித்தல் என்பவற்றின் சட்டங்கள், ஒழுங்குகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஆர்தல் கூறுதல்

மரணித்தவரின் குடும்பத்தினருக்கு ஆர்தல் கூறி, உறிவனர்களை சமாதானப்படுத்துவதும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனையில் அவர்களை நல்ல வார்த்தைகள் மூலம் பலப்படுத்துவதும் விரும்பத்தக்கது. மரணித்தவருக்கான துஆ, குடும்பத்தினர், உறவினர்களை பொறுமைப்படுத்தி, மன உறுதி ஏற்படுத்துதல், அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்ப்பதை நினைவுபடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஆர்தல் வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். நபி ஸல் அவர்கள் மரணித்த ஒருவரின் உறவினருக்கு பின்வருமாறு ஆர்தல் கூறி அனுப்பினார்கள் : "எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு". (புஹாரி 1284, முஸ்லிம் 923).

மரணித்தவரின் உறவினர்களுக்கு அடக்கம் செய்ய முன்னரும், செய்த பின்னரும் பள்ளி, மண்ணறை, வீடு, வேலைத்தளம் போன்ற எங்கும் ஆர்தல் கூறலாம்.

ஆர்தல் கூறும் சடங்குகளை கூடாரங்கள் அமைப்பதன் மூலமோ அல்லது விருந்துகள் மற்றும் மக்கள் கூடிவருவதன் மூலமோ மிகைப்படுத்தக்கூடாது. இது நபிவழியோ, நபித்தோழர்கள் வழியோ அல்ல. இது போன்ற ஏற்பாடுகளை செய்வதற்கு இது சந்தோசமான மகிழ்ச்சியுறும் சந்தர்ப்பமல்ல.

கவலைப்படுதல் மற்றும் துக்கம் அனுஷிடித்தல்

அழுவது ஒரு இயற்கையான கருணை மற்றும் இழப்பு, வருத்தத்தின் வெளிப்பாடாகும். நபி (ஸல்) அவர்களின் கண்கள் கூட தனது புதல்வர் இப்ராஹீம் மரணித்த போது கண்ணீர் விட்டன. (புஹாரி 1303, முஸ்லிம் 2315).

மரணித்தவருக்காக அழுவதில் இஸ்லாம் பல வரையறைகளை வைத்துள்ளது.

١
சிரமப்பட்டு அழுவது, குரலை உயர்த்துதல், கன்னத்தில் அடித்துக் கொள்ளல், மார்பில் அடித்துக் கொள்ளல், ஆடைகளைக் கிழித்துக் கொள்ளல் போன்ற மார்க்கத்திற்கு முரணான விடயங்களை இஸ்லாம் தடை செய்துள்ளது.
٢
தனது கணவர் தவிர உறவினர்களில் வேறு யாருடைய மரணத்திற்காகவும் ஒரு பெண் மூன்று நாட்களுக்கு மேல் தனது அலங்காரங்களை விட முடியாது.
٣
மனைவி துக்கம் அனுஷ்டித்தல் : கணவர் மரணித்த பின் மனைவி தனது இத்தாவுடைய காலத்தில் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் கடைபிடிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

இத்தாவுடைய காலம்

நான்கு மாதங்களும் பத்து நாட்கள், அல்லது கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பிரசவிக்கும் வரை.

கணவரின் மறைவுக்காக இத்தா அனுஷ்டிக்கும் மனைவி கடைபிடிக்க வேண்டியவை

١
அவள் நறுமணம், வாசனை திரவியம், நகைகள், ஒப்பனை, மருதாணி மற்றும் அனைத்து அழகு சாதனங்களையும் தவிர்க்க வேண்டும்.
٢
அழகும் அலங்காரமும் உடைய ஆடைகளாக இல்லாவிட்டால், வழக்கமான ஆடைகளை எந்த நிறத்திலும் அல்லது வடிவத்திலும் அணிவது அவளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

மண்ணறைகளைத் தரிசித்தல் : மண்ணறைகளைத் தரிசித்தல் மூன்று வகைப்படும் :

١
ஸுன்னத்தான தரிசிப்பு
٢
அனுமதிக்கப்பட்ட தரிசிப்பு
٣
தடை செய்யப்பட்ட தரிசிப்பு

1. ஸுன்னத்தான தரிசிப்பு.

மரணம், மண்ணறை, மறுமை போன்றவற்றை நினைவுகூர்வதற்காக மண்ணறைகளைத் தரிசித்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மண்ணறைகளைத் தரிசிப்பதை நான் உங்களுக்குத் தடுத்திருந்தேன். இப்போது அதனைத் தரிசியுங்கள்". மற்றுமொரு அறிவிப்பில் : "ஏனெனில் அது மறுமையை நினைவூட்டுகின்றது". (முஸ்லிம் 977, திர்மிதி 1054). இது குறிப்பிட்ட அந்த மூன்றுபள்ளிகல்லாத, நன்மையை நாடி பயணம் மேற்கொள்ளத் தடைசெய்யப்பட்ட இடங்களல்லாமல் ஊரிலுள்ள மண்ணறைகளைத் தரிசிப்பதாகும்.

2. அனுமதிக்கப்பட்ட தரிசிப்பு

இது அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்காக தரிசித்தல், மரண சிந்தனைக்காவும் இல்லை, தடுக்கப்பட்டவைகளும் அதிலில்லை. உதாரணமாக மறுமையை நினைவுகூர்தலின்றி தனது உறவினர், அல்லது நண்பருடைய மண்ணறையைத் தரிசித்தலைப் போன்றாகும்.

3. தடை செய்யப்பட்ட தரிசிப்பு

இது ஹராமான, நூதனமான, இணைவைப்புடைய செயற்பாடுகள் கலந்த தரிசிப்பாகும். உதாரணமாக மண்ணறை மீது உட்கார்தல், அதற்குக் குறுக்காகச் செல்லல், கன்னத்தில் அறைந்து, குரலுயர்த்தி கதறி அழுதல் போன்ற ஹராமானவை, அல்லது மண்ணறை மூலம், அதனைத் தொடுவதன் மூலம் பரகத் தேடுதல், அடக்கப்பட்டிருப்பவரிடத்தில் தேவைகளைக் கேட்டல், பாதுகாப்புத் தேடுதல், அவரின் பொருட்டால் பிரார்த்தித்தல் போன்ற நூதன, இணைவைப்பான விடயங்களை உள்ளடக்கிய தரிசிப்புக்களைக் கூறலாம்.

ஒரு முஸ்லிம் மண்ணறையைத் தரிசிக்கும் போது அதில் பல நோக்கங்கள் இருக்க வேண்டும் :

١
முதலாவது : மறுமையை நினவுகூர்ந்து, மரணித்தவர்களிடமிருந்து படிப்பினை பெறுதல்.
٢
இரண்டாவது : மரணித்தவருக்காக பாவமன்னிப்பு, அல்லாஹ்வின் ரஹ்மத்தை வேண்டி அவருக்கு நலவு செய்தல். ஏனெனில் உயிரோடுள்ளவர் தன்னை சந்தித்து அன்பளிப்பு செய்பவரைப் பார்த்து மகிழ்வதைப் போல் அவர்களும் மகிழ்கின்றனர்.
٣
மூன்றாவது : மண்ணறைகளைத் தரிசிப்பதில் ஸுன்னாவைப் பின்பற்றி, நன்மையை சம்பாதிப்பதன் மூலம் தனக்கும் நலவு செய்து கொள்ளல்.

மரணித்தவரை மதித்து கண்ணியப்படுத்தும் விதமாக அவற்றின் மீது உட்காராமல் இருப்பது, அவற்றைக் கடந்து செல்லாமல் இருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் நபியவர்கள் அதன் தண்டனையைத் தெளிவு படுத்தினார்கள் : "உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம் வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்று)மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்." (முஸ்லிம் 971).

மண்ணறையில் ஓதும் துஆக்கள்

மண்ணறைகளைத் தரிசிக்கும் போது ஓதும் துஆக்கள் சில : "அஸ்ஸலாமு அலைகும் தார கவ்மின் முஃமினீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்." (முஸ்லிம் 249), "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்" (முஸ்லிம் 974), "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ ல(க்)குமுல் ஆஃபிய்யா" (முஸ்லிம் 975).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்