கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் புனித குர்ஆனின் சிறப்புக்கள்

மகத்தான இப்புனித குர்ஆனிற்கு உள்ள மேன்மை, கண்ணியத்தைத் தெளிவுபடுத்தும் மகத்தான பல சிறப்புக்கள் அதற்கு உள்ளன. அவற்றில் சிலதை இப்பாடத்தில் கற்போம்.

புனித அல்குர்ஆனின் சில சிறப்புக்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

புனித குர்ஆனின் சிறப்புக்கள்

புனித குர்ஆனிற்கு மகத்தான பல சிறப்புக்கள் உள்ளன. அவை பின்வருமாறு :

1. அல்குர்ஆனைக் கற்று, அதனைக் கற்றுக் கொடுப்பது சிறந்த பணியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் மிகச் சிறந்தவராவார்". (புஹாரி 5027).

2. அல்குர்ஆனுடையவர்கள் அல்லாஹ்வுடைவர்கள், பிரத்தியேகமானவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "மனிதர்களில் இரு பிரிவினர் அல்லாஹ்வுக்குரியவர்கள்". அப்போது அவர்கள் யார் என வினவப்பட்டது. நபியவர்கள் கூறினார்கள் "குர்ஆனுடையவர்கள் அவர்கள்தாம் அல்லாஹ்வுக்குரிய, அவனுடைய பிரத்தியேகமானவர்கள்". (இப்னு மாஜா 215).

3. அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்து ஓதினாலும் அதன் நன்மை பன்மடங்காக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதியவருக்கு அதன் மூலம் ஒரு நன்மை உண்டு, அந்த ஒரு நன்மை பத்து மடங்காகும். "الم" என்பது ஓரெழுத்து எனக் கூற மாட்டேன். மாறாக "ا" ஓரெழுத்து, "ل" ஓரெழுத்து, "م" ஓரெழுத்தாகும்". (திர்மிதி 2910).

4. அல்குர்ஆன் ஓதப்பட்டு, போதிக்கப்படும் சபைகளுக்கு வானவர்கள் இறங்குவர், அமைதி, அல்லாஹ்வின் அருள் இறங்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்". (முஸ்லிம் 2699).

5. அல்குர்ஆனுடையவர்களுக்கு அது மறுமையில் பரிந்துரைக்க வரும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனை ஓதிவாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதிவருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்". (முஸ்லிம் 804).

6. அல்குர்ஆனைத் திறமையாக ஓதுபவர் வானவர்களுடன் இருப்பார்கள். திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரு கூலிகள் கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனை திறமையாக ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு". (முஸ்லிம் 798).

7. அல்குர்ஆன் அதனுடையவர்களைத் தரமுயர்த்தும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனின் மூலம் ஒரு கூட்டத்தை உயர்த்துகின்றான், மற்றுமொரு கூட்டத்தைத் தாழ்த்துகின்றான்". (முஸ்லிம் 817).

8. அல்குர்ஆனை மனனமிட்டவர் அவரிடம் மனனமாக உள்ள அளவிற்கு சுவன அந்தஸ்த்தில் உயர்ந்து கொண்டே செல்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நீர் ஓதுவீராக, அதன் மூலம் உயர்ந்து கொண்டே செல்வீராக, உலகில் அழகாக ஓதியதைப் போன்று ஓதுவீராக. நீர் இறுதியாக நிறுத்தும் வசனத்தில்தான் உமது அந்தஸ்து உள்ளது என குர்ஆனுடையவருக்குக் கூறப்படும்". (அபூதாவூத் 1464).

9. குர்ஆனுடையவருக்கு மறுமையில் கண்ணியமான ஆடை, மற்றும் கிரீடம் அணிவிக்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனுடையவர் மறுமையில் வந்ததும், "என் இரட்சகனே! இவருக்கு அணிவி" என அல்குர்ஆன் கூறும், அப்போது கண்ணியமிக்க கிரீடம் ஒன்று அணிவிக்கப்படும். பின் "என் இரட்சகனே! இவருக்கு அதிகப்படுத்து" என அல்குர்ஆன் கூறும், அப்போது கண்ணியமிக்க ஆடை ஒன்று அணிவிக்கப்படும். பின் "என் இரட்சகனே! இவரைப் பொருந்திக் கொள்" எனக் கூறும், அப்போது அவர் பொருந்திக் கொள்ளப்படுவார். "நீர் ஓதியவாறு உயந்து கொண்டே செல்வீராக" எனக் கூறப்பட்டு, ஒவ்வொரு வசனத்துக்கும் ஒவ்வொரு நன்மை அதிகமாக்கப்படும்". (முஸ்லிம் 817).

10. குர்ஆனுடையவரின் பெற்றோரையும் அல்லாஹ் பல விதத்தில் கண்ணியப்படுத்துகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் முஆத் (ரஹ்) தனது தந்தை முஆத் (ரலி) அவர்களைத் தொட்டும் கூறினார்கள் : "அல்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் உலக வீடுகளில் ஒளிரும் சூரிய ஒளியை விடப் பிரகாசமானதாகும். (பெற்றோருக்கே இந்த நிலை என்றால்) இதன்படி செயல்பட்ட அந்த நபரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்". (அபூ தாவூத் 1453).

11. அல்குர்ஆனை மனனமிடுவதும், அதனை கற்பதும் இவ்வுலகம், அதிலுள்ளவற்றை விட சிறந்ததாகும்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 803).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்