தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாறு
ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் சகல சந்தர்ப்பங்களிலும் நபி ஸல் அவர்களைப் பின்பற்றுவவதற்காக அன்னாரது வரலாற்றை விரிவாகப் படிப்பது அவசியமாகும். அவருடைய வாழ்க்கை வரலாறு இஸ்லாம் மற்றும் அதன் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவதாக இருந்தது. அல்லாஹ் கூறுகின்றான் : “அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது". (அஹ்ஸாப் : 21).
1. நபி (ஸல்) அவர்களின் வம்சம்
நபி (ஸல்) அவர்களது வம்சம்தான் சிறந்த, கௌரவமான வம்சமாகும். அவரது வம்சம் பின்வருமாறு : முஹம்மது (ஸல்) இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம் இப்னு அப்து மனாஃப் இப்னு குஸய்ம் இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுஅய் இப்னு காலிப் இப்னு ஃபிஹ்ர் இப்னு மாலிக் இப்னு நழ்ர் இப்னு கினானா இப்னு குஸைமா இப்னு முத்ரிகா இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிஸார் இப்னு முஅத்து இப்னு அத்னான். அத்னான் என்பவர் இஸ்மாஈல் (அலை) அவர்களுடைய வம்சத்தில் வந்தவராவார்.
2. நபி (ஸல்) அவர்களது பெற்றோர்
அன்னாரது தந்தை : அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் இப்னு ஹாஷிம், தனது தாயின் கருவறையில் சிசுவாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்கள். அன்னாரது தாய் : ஆமினா பின்து வஹ்ப் இப்னு அப்தி மனாப் இப்னு ஸுஹ்ரா.
3. நபி (ஸல்) அவர்களது பிறப்பு
ஆனை வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் ஒரு திங்கட்கிழமை அன்னார் பிறந்தார்கள்.
4. நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டுதல்
அபூ லஹபின் அடிமை ஸுவைபா சில தினங்கள் அன்னாருக்குப் பாலூட்டினார். பின்னர் பனூ ஸஃத் கோத்திரத்திலிருந்து பாலூட்டுவதற்காக ஹலீமா அஸ்ஸஃதிய்யா என்ற செவிலித் தாய் அழைக்கப்பட்டார். அவ்வம்மையாரிடம் சுமார் நான்கு வருடங்கள் தரித்திருந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களது இதயம் பிளக்கப்பட்டு, அதிலிருந்து ஷைத்தானின் பங்கு அப்புறப்படுத்தப்பட்டது, உடனே ஹலீமா அன்னாரைத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
5. இளமைப்பருவம் மற்றும் வாலிபம்
நபித்துவத்திற்கு முன் அன்னாரது தொழில்
நபி (ஸல்) அவர்களது நபித்துவத்திற்கு முன்னரான வாழ்க்கை சிறப்பானதாக, கௌரவமானதாகவே இருந்தது. பெருந்தவறு எதுவம் அறியப்படவில்லை, சருகல் எதுவும் பதியப்படவில்லை. அல்லாஹ் அன்னாரை நேரடியாக கண்கானித்து, அறியாமைக் கால அசிங்கங்களை விட்டும் பாதுகாத்து வந்த நிலையிலேயே அன்னார் வாலிபத்தைக் கழித்தார்கள். எனவே தமது சமூகத்தில் சிறந்த நாகரிகமுள்ளவராக, அழகிய பண்புடையவராக, கௌரவமான குடும்பத்தவராக, அழகிய அயலவராக, மகத்தான நிதானமுள்ளவராக, மிக உண்மையாளராக, மிகப் பெரிய நம்பகமானவராக இருந்ததுடன், ஆடவர்களை மாசுபடுத்தும் மானக்கேடான, மோசமான செயல், குணங்களை விட்டும் மிகத் தூரமானவராகவும் இருந்தார்கள். எந்தளவுக்கெனில் தமது சமூகத்தவரிடமே உண்மையாளர், நம்பிக்கையாளர் என அறியப்பட்டிருந்தார்கள்.
6. நபி (ஸல்) அவர்களின் மனைவியர்
நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களது பொருளாதாரத்தில் அடிமை மைஸராவுடன் ஷாம் பகுதிக்கு வியாபாரத்திற்குச் சென்ற போது அவ்வடிமை நபியவர்களிடம் கண்ட பிரமிக்க வைக்கும் உண்மை, நம்பிக்கையை ஊர்த் திரும்பியதும் தனது எஜமாட்டியிடம் வர்ணிக்க, அவ்வம்மையார் நபியவர்களை மணந்து கொள்ள விரும்பினார்கள். அதன்படி நபியவர்கள் தனது 25வது வயதில் அம்மையாரை மணந்து கொண்டார்கள். இவர்கள்தான் நபியின் முதல் மனைவியாகும். இவர்கள் மரணிக்கும் வரை நபியவர்கள் வேறெந்தப் பெண்ணையும் இரண்டாந்தாரமாக மணக்கவில்லை. அன்னாரின் பிள்ளைகளில் இப்ராஹீமைத் தவிர அனைவருக்கும் தாயார் அன்னையவர்கள்தான். ஹிஜ்ரத் பயணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அன்னையவர்கள் மரணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியர்
சரியான கருத்தின் படி நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் எழுவர் ஆகும். (3 ஆண்கள், 4 பெண்கள்)
7. நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள்
ஆண் பிள்ளைகள் மூன்று : 1. காஸிம், இவரது பெயரையே நபியவர்களுடைய புனைப்பெயருக்குப் பயன்படுத்தப்பட்டது. சில காலமே இவர் வாழ்ந்தார். 2. அப்துல்லாஹ், இவருக்கு தாஹிர், தைய்யிப் என இரு சிறப்புப் பெயர்களும் உண்டு. 3. இப்ராஹீம்.
பெண் பிள்ளைகள் நான்கு : 1. ஸைனப், இவர்தான் நபியவர்களின் மூத்த புதல்வியாகும். 2. ருகையா, 3. உம்மு குல்ஸூம். 4. பாதிமா. நபியவர்களின் பிள்ளைகள் அனைவரும் அவர்களது மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மூலம் கிடைத்தவர்களாகும். இப்ராஹீமைத் தவிர, அவர் முகௌகிஸ் மன்னர் நபியவர்களுக்கு பரிசளித்த மாரியா அல்கிப்திய்யா என்ற அடிமை மூலம் பிறந்தவராகும்.