கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் சம்பாத்தியத்தின் ஒழுங்குகள்

சம்பாத்தியத்தின் அர்த்தம், அதனுடன் தொடர்பான சட்டங்கள், சம்பாதித்தல், வாழ்வாதாரத்தைத் தேடுதல் ஆகயவற்றின் ஒழுங்குகள், மற்றும் அதனுடன் தொடர்பான சிந்தனைகளை இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.

  • சம்பாத்தியத்தின் அர்த்தத்தை அறிதல்.
  • சம்பாத்தியம் தொடர்பான சட்ட, ஒழுங்குகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

பணத்தின் அவசியம்

மனிதன் உணவு, பானம், உறைவிடம், உடை போன்ற தனது அத்தியவசியத் தேவைகளைப் பெற்றுக் கொள்ள பணம் தேவைப்படுகின்றது. அவன் தனது வாழ்க்கையின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் மற்றும் பயன்களைப் பெறவும் அதைப் பயன்படுத்துகிறான் பொருள், இஸ்லாம் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதனைச் சம்பாதிப்பது, செலவு செய்வது தொடர்பான பல சட்டங்களை வகுத்துள்ளது.

சம்பாத்தியம், வாழ்வாதாரத்தைத் தேடுதலின் வரைவிலக்கணம்

சம்பாதிப்பது மற்றும் வாழ்வாதாரம் தேடுவது என்பது ஒரு நபர் பணத்தைப் பெறுவதற்கும், வாழ்க்கை நிலைக்கவும் மேற்கொள்ளும் அனைத்து வழிமுறைகள் மற்றும் செயல்கள் ஆகும். அது வணிகம், தொழில், விவசாயம் போன்றவற்றின் மூலமாக இருந்தாலும் சரி.

சம்பாத்தியத்தின் சட்டம்

١
தனக்கும், தனது குடும்பம், செலவுக்குக் கீழுள்ளவர்களுக்கு போதிய அளவு தேடுதல், அல்லது கடன் அடைப்பு, பிறரிடம் கையேந்தாமல் இருத்தல் போன்ற காரணங்களாக இருந்தால் சம்பாதிப்பது ஒரு முஸ்லிம் தனிநபர் மீது கடமையாகும்.
٢
வறியவர்களுக்கு உதவுதல், உறவினர்களுடன் சேர்ந்து நடத்தல் போன்ற விரும்பத்தக்க வணக்கங்களை மேற்கொள்வதற்காக சம்பாதிப்பது ஸுன்னத்தாகின்றது.
٣
அத்தியவசியத் தேவைகளை விட மேலதிகமான, அனுமதிக்கப்பட்ட உணவு, பானம், உடைகள் போன்றவற்றை அனுபவிப்பதற்காகவும்.சற்று வசதியுடன் வாழவும் மேலதிகமாக சம்பாதிப்பது ஆகுமாகும்.
٤
தடுக்கப்பட்ட முறையில் சம்பாத்தியம் அமைந்தாலோ, கடமைகளை வீணடிக்க, அல்லது ஹராத்தில் விழ வழிவகுத்தாலோ அச்சம்பாத்தியம் ஹராமாகும்.
٥
ஸுன்னத்தான வணக்கங்களை விட்டும் பராக்காக்கூடியது போன்ற மேற்கூறப்பட்டவற்றைத் தாண்டியதாக இருந்தால் அச்சம்பாத்தியம் வெறுக்கத்தக்கதாகும்.

பெருமையடிக்கவும், சொத்துக் குவிப்புக்காகவுமாக இருந்தால் அது வெறுக்கத் தக்கதாகும். மேலும் சில அறிஞர்கள் இதனை ஹராம் என்றும் கூறியுள்ளனர்.

சம்பாதித்து, பொருளீட்ட முயற்சிக்கும் ஒரு முஸ்லிம் தனது பொருளீட்டல் முயற்சியில் ஹராத்தில் வீழ்ந்திடாதிருக்க வியாபாரம், வாடகைக்கு விடல், கூட்டுறவு முறைகள், வட்டி போன்ற நிதிப் பரிவர்த்தனைகளின் சட்டங்களை அறிதல் மூலம் அது குறித்த அறிவைப் பெறுவதும் அவசியமாகும்.

சம்பாத்தியத்தின் ஒழுங்குகள்

1. வாழ்வாதாரம் தூய்மையாக இருக்க முதலில் எந்தவொரு தொழிலுக்காகவும் அல்லாஹ்வின் எந்தவொரு கடமையும் பிற்போடப்படவோ, பாழ்ப்படுத்தப்படவோ ஆகாது. இந்தக் கடமைகள்தான் ஒரு முஸ்லிம் தனது நேரத்தையும் முயற்சியையும் ஒழுங்கமைப்பதற்கான அடிப்படையாக இருக்க வேண்டும்.

2. வாழ்வாதாரம் தேடுதல் எனும் பெயரில் அங்கு எந்தவொரு தனிநபருக்கும் எவ்வித நோவினை, இடையூறுகளும் இடம்பெறலாகாது, ஏனெனில் இஸ்லாத்தில் தீங்கிழைப்பதும் இல்லை, தீங்கிற்குப் பழிவாங்குதலுமில்லை.

3. தான், மற்றும் தனது செலவுக்குக் கீழால் உள்ளோர் பேணுதலாக இருந்து, பிறரிடம் கையேந்தாமலிருத்தல் போன்ற நல்ல நோக்கங்களையே சம்பாத்தியத்தின் மூலம் கொண்டிருக்க வேண்டும். சொத்துக் குவிப்பு, அதிகரித்தல், பெருமை பேசுதல் போன்ற தீய நோக்கங்களை கொண்டிருக்கக் கூடாது.

வாழ்வாதாரத்தைத் தேடுவதில் ஒரு முஸ்லிம் உளத்தூய்மையுடன் செயல்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு தர்மம் செய்யவும், அவர்களுக்கு விசாலப்படுத்திக் கொடுக்கவும் போதியளவு வருமானத்தை அடைவதை நோக்காகக் கொண்டால் அவன் இம்முயற்சியை மேற்கொள்ளும் போதெல்லாம் வணக்கத்திலேயே இருக்கின்றான். அதன் மூலம் உயர் பதவியை அடைகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மக்களுக்கு அதிக பயனுள்ளவரே அல்லாஹ்விற்கு மிக நேசத்திற்குரியவராகும்". (ஆதாரம் : தபரானியின் முஃஜமுல் அவ்ஸத் 6026).

4.மனிதனின் இதர தேவகைகளுக்கும், வாழ்வாதாரம் தேடுவதற்கும் மத்தியில் நடுநிலை, சமநிலை பேண வேண்டும். சம்பாத்தியம் வாழ்க்கையின் ஒரு சாதனம் என்பதைத் தாண்டி, அதுதான் குறிக்கோள் என்ற நிலைக்குச் சென்றுவிடக் கூடாது. அபூ தர்தா(ரலி) அவர்களிடம் ஸல்மான்(ரலி), "நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன, அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக" என்று கூறிய போது ஸல்மான் கூறியது உண்மைதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 1968).

5. வாழ்வாதாரத்தைத் தேடுவதில் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்து தவக்குல் வைக்க வேண்டும். உண்மையான தவக்குல் என்பது உள்ளத்தால் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதுடன் மார்க்க சட்டபூர்வமான காரணிகளை மேற்கொள்வதாகும்.

6. வெறும் சம்பாத்தியத்தால் வாழ்வாதாரம் கிடைப்பதில்லை, மாறாக அதனை அளிப்பவன் அல்லாஹ் ஒருவனே என்பதை உறுதியாக எண்ணிக் கொள்ள வேண்டும். சிலவேளை வாழ்வாதாரத்திற்குரிய முயற்சியை ஒருவன் மேற்கொண்டும் அல்லாஹ் அறிந்துவைத்துள்ள ஒரு நியாயமான காரணத்திற்காக அது கைகூடாமல் போய் விடுகின்றது.

7. அல்லாஹ் அளந்துள்ளதை வைத்து திருப்திப்படல், வாழ்வாதாரம் தாமதமடைவதையிட்டு விரக்தியடையாமல் இருத்தல். அது கிடைக்கும் காலம், அளவு அனைத்தும் அல்லாஹ்விடத்தில் நிர்ணயிக்கப்பட்டே உள்ளன. பணிவு, தன்னிறைவு, அல்லாஹ் தனக்கு எழுதியை வைத்து திருப்திப்பட்ட நிலையில், அவன் தடுத்ததை விட்டும் தூரமாகி, அனுமதித்தைத் தேடுவதில் விடாமுயற்சி செய்வதே முஸ்லிமுக்குரிய பொறுப்பாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மக்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், அழகான முறையில் வாழ்வாதாரத்தைத் தேடுங்கள், எந்தவொரு ஆத்மாவும் தனது வாழ்வாதாரத்தை- அது தாமதமானாலும்- முழுமைப்படுத்தாமல் மரணிக்க மாட்டாது, எனவே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், அழகான முறையில் வாழ்வாதாரத்தைத் தேடுங்கள். ஹலாலானதை எடுத்து, ஹராமானதை விட்டுவிடுங்கள்". (இப்னுமாஜா : 2144).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்