தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் நிதிப் பரிவர்த்தனைகளில் இஸ்லாமிய நெறிமுறைகள்
நெறிமுறைகள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுடனும் நெருக்கமாக தொடர்புடையவை. இஸ்லாமிய ஒழுங்கு மற்றும் இஸ்லாமிய சமூகத்தைத் தனியாகக் காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது தார்மீக நெறிமுறைகள் மற்றும் அதனுடனான நெருங்கிய உறவுகளாகும். இதுதான் இஸ்லாமிய நிதி அமைப்பை மற்ற நிதி அமைப்புகளிலிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது.
இது ஹலாலான சம்பாத்தியத்திற்காக மார்க்க சட்டம் அனுமதிக்கும் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் குறிக்கும். பணத்தின் அடிப்படையில் அல்லது நிதி உரிமைகளுக்கு வழிவகுக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். உதாரணம் : விற்றல், வாங்கல், வாடகைக்கு விடல், நிறுவன முறைமை போன்ற ஒப்பந்தங்களைக் கூறலாம். இஸ்லாமிய பரிவர்த்தனைகள் தொடர்பான சட்டதிட்டங்களாகின்றன மக்களின் நிதி மற்றும் பொருளாதார பரிவர்த்தனைகளை ஒருவருக்கொருவர் ஒழுங்குபடுத்தும் சட்டத் தீர்ப்புகள் ஆகும்.
இஸ்லாமிய நிதிப் பரிவர்த்தனைகளின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள்:
இஸ்லாமே சத்திய மார்க்கமாகும். ஏனைய ஷரீஅத்கள், ஒழுங்கமைப்புகளுக்கு மாற்றமாக இஸ்லாமே மக்களுக்குப் பொருத்தமான, அவர்களை சீராக்கக்கூடியவற்றை கொண்டுவந்துள்ளது. ஏனெனில் அது மனிதர்களைப் படைத்தவனிடமிருந்தே வந்துள்ளது. அவர்களையும், அவர்களுக்குப் பயனளிப்பதையும் அவனே மிக நன்கறிவான். அல்லாஹ் கூறுகின்றான் : "(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்". (முல்க் : 14). இஸ்லாம் உடலின் தேவைகளையும் உலக விடயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிதி அமைப்புடன் வந்தள்ளது, மேலும் ஆன்மாவின் தேவைகளையும் மறுமை விடயங்களையும் அது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
முதலாவது : உலகப் பகுதி : அனைத்து வியாபாரிகளிடையேயும் நீதியை அடையும் விதத்தில், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் உரிமையை வழங்கும் மற்றும் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும் வகையில் இஸ்லாமிய ஷரியா மக்களின் நிதி பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தியுள்ளது, அதே போன்று பரிவர்த்தனைகளில் அனுமதியின் வாயிலை விசாலப்படுத்தி, அதில் ஈடுபடும் இருவரில் ஒருவருக்கேனும் தீங்கு ஏற்படுத்தும் அனைத்தையும் தடை செய்துள்ளது.
இரண்டாவது : ஆன்மீகப் பகுதி : அனைத்து சட்டங்களினதும் மிக உயர்ந்த நோக்கம் அல்லாஹ்வின் திருப்தியை அடைந்து, சுவனத்தை வெல்வதாகும். இதனுடன் சேர்த்து, இஸ்லாமிய நிதிப் பரிவர்த்தனைகள் நீதியை நிலைநிறுத்துதல், கடனாளிக்குத் தவணை நீடித்தல் போன்ற உபகாரத்தைத் தூண்டுதல், வட்டி சூதாட்டம் போன்ற உள்ளத்தை உறுத்தும் அனைத்தையும் தடுத்தல் போன்றவற்றினூடாக விசுவாசிகளுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை உருவாக்குகின்றது.
முதலாவது : நீதி : இது கூட்டல், குறைவின்றி நிதிப் பரிவர்த்தனையின் இரு தரப்பினரது உரிமைகளையும் கவனித்திற் கொள்ளும் விடயமாகும். உதாரணமாக வியாபாரம், அதேவிலைக்கு வாடகைக்கு விடுதல் போன்றவற்றைக் கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்துள்ளான், வட்டியைத் தடுத்துள்ளான்". (பகரா : 275). இரண்டாவது : சிறப்பு : இது உபகாரம் மற்றும் தர்மமாகும். கடனாளியின் தவணையை நீடித்தல், அல்லது கடனைத் தள்ளுபடி செய்தல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். அல்லாஹ் கூறுகின்றான் : "அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்". (பகரா : 280). அதேபோன்றுதான் பணியாளுடன் குறித்த தொகைக்கு பொருந்திவிட்டு, அதனை விட மேலதிகமாக வழங்குவதாகும்.அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்". (பகரா : 195).
இரண்டாவது : அநீதி : இது வட்டி, சூதாட்டம், பணியாளின் கூலியை மறுத்தல் போன்றவற்றின் மூலம் தனது உரிமைக்கு மேலதிகமாகப் பெறுவதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்". (பகரா : 278, 279). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!". (புஹாரி 2227).