கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் கணவன், மனைவி தேர்வின் அடிப்படைகள்

கணவன, மனைவி தேர்வின் போது கவனிக்கப்பட வேண்டிய பிரதான அடிப்படைகளை இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாத்தில் திருமண ஒப்பந்தத்திற்குள்ள இடத்தை அறிதல்.
  • கணவன், மனைவி தேர்வின் பிரதான வரையறைகளை அறிதல்.
  • ஒரு பெண் கணவனைத் தெரிவு செய்யும் விடயத்தில் இஸ்லாத்தின் நீதத்தை விளக்குதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இஸ்லாத்தின் திருமண பந்தம் என்பது மிக முக்கியமான, மற்றும் உயர்வான ஒப்பந்தங்களில் உள்ளதாகும். மேலும் அதன் உண்மையான செயல்வடிவுக்குச் செல்ல முன் இருதரப்பு நம்பிக்கையையும் திருப்தியையும் தயார்படுத்தும் விதத்திலும், திருமண வாழ்வு நீடித்து, முஸ்லிம் குடும்பம் நிலைத்திருக்க இஸ்லாமிய ஷரீஅத் சில ஆரம்ப நடவடிக்கைகளால் அதனைச் சூழ்ந்துள்ளது.

குடும்பத்தின் இரு தூண்கள்

ஒரு குடும்பக் கட்டமைப்பின் பிரதான இரு தூண்களாக கணவன், மனைவி உள்ளனர், இஸ்லாம் அவ்விருவருக்கிடையிலான நல்ல உறவில் அக்கறை கொண்டுள்ளது. அது உருவாவதை அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்த அருட்கொடை அத்தாட்சிகளில் உள்ளதாக ஆக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன". (ரூம் : 21).

அழகிய தம்பதியர் தெரிவு

வாழ்க்கைத் துணையை அழகிய முறையில் தெரிவு செய்வதுதான் மகிழ்ச்சியான திருமணத்திற்கும், நிலையான குடும்பத்தைக் கட்டமைப்பதற்கும் முக்கியமான படிக்கல்லாகும்.

தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய பிரதான அடிப்படைகள்

١
மதம், பண்பாட்டில் சிறந்து விளங்குதல்
٢
ஆத்மார்த்தமான உடன்பாடு
٣
பொருத்தப்பாடு

மதம், பண்பாட்டில் சிறந்து விளங்குதல்

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது ஆண், பெண் இருபாலரும் அக்கறையாக இருக்க வேண்டியஅடிப்படை இதுதான். ஈருலக மகிழ்ச்சிக்கும் அல்லாஹ்வின் அனுமதியால் மதம், பண்பாட்டில் சிறந்து விளங்குவது போதுமானதாகும்.

மார்க்கப்பற்றுள்ள மனைவியைத் தேர்ந்தெடுப்பதை நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள் : "நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக, 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக., 3. அவளுடைய அழகிற்காக, 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!". (புஹாரி 5090, முஸ்லிம் 1466). மார்க்கப்பற்றுள்ள பெண்தான் தனது கணவனின் வீடு, உரிமைகளைப் பேணுவதில் அவர் வீட்டிலிருக்கும் போதும், வெளியிலிருக்கும் போதும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவளாவாள்.

கணவனைத் தெரிவு செய்யும் விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவரது மார்க்கம், பண்பாட்டில் நீங்கள் திருப்தி அடையும் ஒருவர் உங்களிடம் பெண் கேட்டு வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள், இல்லாவிட்டால் பூமியில் பெரும் குழப்பம், சீரழிவு உண்டாகும்" (இப்னு மாமா 1967). முற்கால அறிஞர்களில் ஒருவர் கூறுகின்றார் : "உனது புதல்வியைத் திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மார்க்கப்பற்றுள்ள ஒருவனுக்கு செய்து வை, அவன் அவளை நேசித்தால் மதிப்பான், பகைத்தாலும் அநீதியிழைக்க மாட்டான்".

ஆத்மார்த்தமான உடன்பாடு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆன்மாக்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட படையாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொண்டவை சேர்ந்து கொள்கின்றன, அறிமுகமில்லாத வை பிரிந்து விடுகின்றன" (புஹாரி 3336, முஸ்லிம் 2638). இது சேர்ந்து வாழவும், மகிழ்ச்சியான இல்லறம் நீடிக்கவும் ஆத்மார்த்தமான உடன்பாடு இருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இதனால்தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பிய ஒரு மனிதரைப் பார்த்து நபியவர்கள் “முதலில் நீர் அவளைப் பாரும், அதுதான் உங்களிருவரது அன்பும் நிலைக்க மிகப் பொருத்தமாகும்” என்றார்கள். (திர்மிதி 1087.) அதாவது உங்களிருவருக்கும் இடையில் ஒற்றுமை நல்லிணக்கம் உருவாகும் என்பதே இங்கு நாடப்படுகின்றது. ஒவ்வொருவரும் மறு தரப்பினரை அறிந்து கொள்ளவும், மற்றவர்களின் உளவியல் ஏற்றுக்கொள்ளலை உறுதி செய்யவும் இந்த பார்வை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் உரிமையாகும்.

பொருத்தப்பாடு

பொருளாதார, சமூகவியல் நிலைகளில் தம்பதியருக்கு இடையிலான நெருக்கம், உடன்பாடு போன்றனவே இங்கு பொருத்தப்பாடு மூலம் நாடப்படுகின்றன.சில அறிஞர்கள் இதனை நிபந்தனையிட்டுள்ளனர். வேறு சில அறிஞர்கள் மார்க்கம், பண்பாடு ஆகியனவே கருத்தில் கொள்ளப்படும் என்கின்றனர். இருப்பினும் சமூகவியல், அறிவியல், பொருளாதார மட்டத்தில் நெருக்கம் இல்லாமல் இருப்பது திருமண வாழ்க்கை ஆட்டங்காணவும், பிரிவு அபாயத்தை அஞ்சவும் காரணமாகும் என்பதில் ஐயமில்லை.

திருப்தியும் ஏற்றுக்கொள்ளலும்

நல்ல தேர்வு கிடைப்பதில் கவனம் செலுத்துவதுடன், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வந்தாலும் மூன்றாம் தரப்பு யாருடையவும் அழுத்தம், வற்புறுத்தல் ஏதுமில்லாமல் திருமணம் நடைபெற வேண்டும்.

பெண்ணிற்கும் தெரிவுரிமையை வழங்கியதன் மூலம் இஸ்லாம் அவளுடன் நடுநிலையாகவே நடந்து கொள்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "'கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்" (புஹாரி 5136, முஸ்லிம் 1419). கன்ஸா பின்து ஹிஸாம் என்ற அன்ஸாரிப் பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து விதவையாக உள்ள நிலையில் அவரது தந்தை மறுமணம் செய்து வைத்தார். அவர்கள் அதனை வெறுத்து, நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது நபியவர்கள் அத்திருமணத்தை ரத்துச் செய்தார்கள். (புஹாரி 5138.)

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்