கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் தொழுகையின் அர்த்தமும் சிறப்பும்

இஸ்லாத்தில் தொழுகைக்கு மிகப்பெரிய அந்தஸ்த்துள்ளது. முஸ்லிமின் வாழ்வில் அது ஒரு பிரதான தூணாகும். இப்பாடத்தில் தொழுகையின் அர்த்தம், அதன் மதிப்பு, சிறப்பு பற்றி நாம் கற்போம்.

  • தொழுகையின் அர்த்தத்தை அறிதல்.
  • இஸ்லாத்தின் தொழுகைக்குள்ள அந்தஸ்த்தை அறிதல்.
  • தொழுகையின் சிறப்பு, முக்கியத்துவத்தை அறிதல்.
  • இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

    ஸலாத் எனும் வார்த்தையின் அடிப்படை அர்த்தம்

    பிரார்த்தனை என்பதே இதன் அர்த்தமாகும். இது அடியானை தன்னைப் படைத்த இரட்சகனுடன் தொடர்பு படுத்திவைக்கின்றது. அடிமைத்தனத்தின் அதியுயர் அர்த்தத்தையும், அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கி அவனிடம் உதவி தேடுவதையும் இத்தொழுகை பொதிந்துள்ளது. அவன் அதிலே அல்லாஹ்வை அழைத்து, அவனுடன் உரையாடி, அவனை நினைவுகூர்கின்றான். எனவே அவனது உள்ளம் தெளிவடைகின்றது. அவனுடைய, மற்றும் அவன் வாழும் உலகினுடைய யதார்த்தத்தை நினைவூகூர்கின்றான். தனது எஜமானின் மகத்துவத்தையும், கருணையையும் உணர்கின்றான். அப்போது அவனை இத்தொழுகை மார்க்கத்தில் நிலைத்திருக்கவும், அநீதி, மானக்கேடானவை, பாவங்களை விட்டும் தூரமாகவும் செய்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும், பாவத்தையும் விட்டுத் தடுக்கின்றது". (அன்கபூத் : 45).

    தொழுகையின் மகத்துவம்

    உடலால் செய்யும் வணக்கங்களில் தொழுகை மிக மகத்தான, பிரதான வணக்கமாகும். இது உள்ளம், சிந்தனை, நாவு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வணக்கமாகும். தொழுகையின் முக்கியத்துவம் பல விடயங்களில் வெளிப்படுகின்றன :

    தொழுகையின் சிறப்பு

    1. இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது கட்டப்பட்டுள்ளது. உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என சாட்சி கூறுதல், தொழுகையை நிலைநாட்டுதல்....". (புஹாரி 8, முஸ்லிம் 16). ஒரு கட்டடத்தின் தூண் தான் அது முழுமையாகச் சாந்திருக்கும் அஸ்திவாரமாகும். அதுவின்றி கட்டடம் நிலைத்திருக்காது.

    2. முஸ்லிம்களையும் நிராகரிப்பாளர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதும் இத்தொழுகையே. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "(முஸ்லிமான) ஒரு மனிதருக்கும் இணைவைப்பு, நிராகரிப்பு ஆகியவற்றுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகையை விடுவதே". (முஸ்லிம் 82). மேலும் கூறினார்கள் : "எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும். அதனை விடுபவன் காபிராகி விடுகின்றான்". (திர்மிதீ 2621, நஸாஈ 463).

    3. பயணம், ஊரிலுள்ள சந்தர்ப்பம், யுத்தம், சமாதானம், நோய் ஆரோக்கியம் என அனைத்து நிலைகளிலும் தொழுகையைப் பேணுமாறு அல்லாஹ் பணித்துள்ளான். அந்தந்த சந்தர்ப்பங்களில் முடியுமான முறையில் அது நிறைவேற்றப்பட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "தொழுகைகளைப் பேணித் தொழுது வாருங்கள்". (பகரா : 238). தனது நல்லடியார்களைப் பின்வருமாறு வர்ணித்துள்ளான் : "அவர்கள் தமது தொழுகைகளைப் பேணுவார்கள்". (முஃமினூன் : 9).

    தொழுகையின் சிறப்புக்கள்

    தொழுகையின் சிறப்பு பற்றி பல அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் வந்துள்ளன. அவற்றுள் சில :

    1. அது குற்றங்களுக்குப் பரிகாரமாகின்றது . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஐவேளைத் தொழுகைகளும், ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரியிலும் பெரும்பாவங்கள் செய்யாமலிருக்கும் வரை அவற்றுக்கிடையிலான காலங்களுக்குக் குற்றப்பரிகாரங்களாகும்". (முஸ்லிம் 233, திர்மிதி 214).

    தொழுகை ஒரு ஜோதி

    2. தொழுகை ஒரு முஸ்லிமின் முழு வாழ்க்கையையும் ஜொலிக்கச் செய்யும் ஒரு ஜோதியாகுமம். நலவு செய்யஉதவுகின்றது. கெடுதியை விட்டும் அவனைத் தூரப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும், பாவத்தையும் விட்டுத் தடுக்கின்றது". (அன்கபூத் : 45). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "தொழுகை ஒரு ஜோதியாகும்". (முஸ்லிம் 223).

    ஓர் அடியான் முதலில் விசாரிக்கப்படும் செயல் தொழுகையே.

    3. மறுமை நாளில் முதலில் விசாரணை செய்யப்படும் விடயம் தொழுகையே. அது சீராகி, ஏற்கப்பட்டால் ஏனைய செயல்களும் ஏற்கப்படும். அது தட்டப்பட்டால் ஏனைய செயல்களும் தட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மறுமை நாளில் முதலில் விசாரணை செய்யப்படும் விடயம் தொழுகையே, அது சீரானால் ஏனைய செயல்களும் சீராகிவிடும். அது சீர்கெட்டால் ஏனைய செயல்களும் சீர்கெட்டுவிடும்". (தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் 1859).

    ஒரு விசுவாசி தனது இரட்சகனுடன் தொழுகையில் உரையாடும் சந்தர்ப்பம்தான் அவனுடைய மிக இனிமையான வினாடிகளாகும். அதிலே அவன் நிம்மது, மன அமைதி, அல்லாஹ்வின் நெருக்கம் அனைத்தையும் பெற்றுக் கொள்கின்றான்.

    அதுதான் நபி (ஸல்) அவர்களுக்கு மிக இனிமையானதாகும். அன்னார் கூறினார்கள் : "எனது கண்குளிர்ச்சி தொழுகையிலேயே வைக்கப்பட்டுள்ளது". (நஸாஈ 3940).

    தொழுகை நபியவர்களது மன நிம்மதியாகும்.

    நபியவர்கள் தனது முஅத்தின் பிலால் (ரலி) அவர்களைப் பார்த்து "பிலாலே! தொழுகை மூலம் எம்மை நிம்மதியடைச் செய்வீராக!" என்று கூறுவார்கள். (அபூதாவூத் 4985).

    நபியவர்களுக்கு சோதனை அல்லது கஷடங்கள் வந்தால் தொழுகையின் பக்கமே ஒதுங்குவார்கள். (அபூதாவூத் 1319).

    உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


    பரீட்சையை ஆரம்பிக்கவும்