தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் தொழுகையின் நிபந்தனைகளும் அதன் சட்டங்களும்
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
தொழுகையின் நிபந்தனைகள்
தொடக்கு, அசுத்தங்களிலிருந்து தூய்மையடைதல். நபியவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள் : ''வுழூவின்றி தொழுகை ஏற்கப்பட மாட்டாது"" (இப்னு மாஜாஃ 273).
குட்டை அல்லது மென்மை காரணமாக உடல்உறுப்புக்கள் தெரியாதளவிலுள்ள ஓர் ஆடையினால் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதும் ஒரு நிபந்தனையாகும்.
தொப்புள் முதல் முழங்கால் வரை
முகம், இரு மணிக்கட்டுகளைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளையும் மறைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பருவமடைந்த பெண்ணின் தொழுகையை (கழுத்தை மறைக்கும்) முக்காடின்றி அல்லாஹ் ஏற்க மாட்டான்". (அபூதாவூத் 641, திர்மிதி 377, இமாம் திர்மிதி இதனை ஹஸன் எனும் தரத்திலுள்ள செய்தியெனக் குறிப்பிட்டுள்ளார்கள்).
அல்லாஹ் கூறுகின்றான் : "ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக". (பகரா : 149).
முஸ்லிம்களின் கிப்லாவானது நபிமார்களின் தந்தையெனப் போற்றப்படும் இப்ராஹீம் அலை அவர்கள் நிர்மாணித்து, பல நபிமார்கள் அதனை நோக்கிச் சென்ற புனித கஃபா ஆலயமாகும். அது எவ்விதப் பயனோ, தீங்கோ செய்யாத வெறும் கல் என்பதை நாம் அறிவோம். எனினும் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையில் ஒரே திசையை முன்னோக்க வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அதனை முன்னோக்கும் படி எம்மைப் பணித்துள்ளான். எனவே நாமும் இவ்வாறு முன்னோக்குவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவோம்.
கிப்லாவை முன்னோக்கும் முறை
பொதுவாக இயலாமையால் ஏனைய கடமைகள் தளர்ந்து விடுவது போன் இக்கடமையும் தளர்ந்து விடும். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் அல்லாஹ்வை உங்களது சக்திக்குட்பட்டவாறு அஞ்சிக் கொள்ளுங்கள்". (தகாபுன் : 16).
இது தொழுகை செல்லுபடியாவதற்கான நிபந்தனையாகும். குறிப்பிட்ட ஒரு தொழுகைக்குரிய நேரம் வருமுன் அத்தொழுகை செல்லுபடியாக மாட்டாது. அதற்குரிய நேரத்தை விட பிற்படுத்துவதும் ஹராமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக தொழுகை விசவாசிகள் மீது நேரம் வரையறுக்கப்பட்ட கடமையாகிவிட்டது.
தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே நிறைவேற்றுவதுதான் மிகச் சிறந்ததாகும். உம்மு பர்வா (ரலி) கூறுகின்றார் : "செயல்களில் சிறந்தது எதுவென நபியவர்களிடம் வினவப்பட்ட போது "தொழுகையை அதன் ஆரம்பநேரத்தில் தொழுவதாகும்" என பதிலளித்தார்கள்". (அபூதாவூத் : 426).
தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். இரு தொழுகைகளை சேர்த்துத் தொழ சலுகை வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களைத் தவிர அதனைப் பிற்படுத்துவது ஹராமாகும்.
நினைவு வந்தவுடன் விரைந்து அதனை நிறைவேற்றி விட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறினார்கள் : யாராவது தொழாமல் தூங்கினால், அல்லது அதை மறந்தால் நினைவு வந்ததும் அதனைத் தொழுது கொள்ளட்டும். (முஸ்லிம் 684).
தொழுகை கடமையாகுதல்
பின்வரும் அடையாளங்களுள் ஒன்று இருந்தால் அவர் பருவமடைந்தவர் எனத் தீர்மானிக்கப்படும் :
ஐவேளைத் தொழுகைகளும் அதன் நேரங்களும்.
பஜ்ருத் தொழுகை இரண்டு ரக்அத்களைக் கொண்டது. அதன் நேரம் மேகத்தில் வெளிச்சம் படர ஆரம்பித்தது முதல் சூரியன் உதிக்கும் வரையிலாகும்.
இது நான்கு ரக்அத்களைக் கொண்டது. இதன் நேரம் சூரியன் உச்சிக்கு வந்து மேற்குப் பக்கமாக சற்று சாய ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு பொருளுடைய நிழலும் அதற்குச் சமமாக ஆகும் வரையிலாகும்.
இதுவும் நான்கு ரக்அத்களைக் கொண்டது. இதன் நேரம் ஒவ்வொரு பொருளுடைய நிழலும் அதற்குச் சமமாக ஆகி ளுஹருடைய நேரம் முடிவடைந்ததிலிருந்து சூரியன் மறையும் வரையிலாகும். சூரியக் கதிர்கள் நிறம் மங்கி, மஞ்சள் நிறமாவதற்கு முன் அத்தொழுகையைத் துரிதப்படுத்துவது அவசியமாகும்.
இது மூன்று ரக்அத்களைக் கொண்டது. அதன் நேரம் சூரியன் அஸ்தமித்து, அதன் வட்ட அமைப்பும் மறைந்ததிலிருந்து அதற்குப் பின் தெரியும் செம்மேகம் மறையும் வரையாகும்.
இது நான்கு ரக்அத்களைக் கொண்டது. அதன் நேரம் செம்மேகம் மறைந்ததிலிருந்து நள்ளிரவு வரையாகும். நிர்ப்பந்தத்தின் போது மாத்திரம் பஜ்ர் உதயமாகும் வரை நிறைவேற்றலாம்.