கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பெருநாள் தினம்

பெருநாள் தினங்கள் என்பது ஒரு மார்க்கத்தின் வெளிப்படையன அடையாளச் சின்னங்களில் உள்ளதாகும். ஒவ்வொரு சமூகத்திற்கும் பிரத்தியேகமான பெருநாள் தினங்களை அல்லாஹ் வைத்துள்ளான். இஸ்லாத்தில் பெருநாள் தினங்கள் தொடர்பான சில விடயங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • முஸ்லிம்களின் பெருநாள் தினங்களை அறிதல்.
  • பெருநாள் தொழுகை முறையை அறிதல்.
  • பெருநாள் தினத்துடன் தொடர்பான சில சட்டங்கள், ஒழுங்குகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

பெருநாள் தினங்கள் என்பது ஒரு மார்க்கத்தின் வெளிப்படையன அடையாளச் சின்னங்களில் உள்ளதாகும்.

நபியவர்கள் மதீனா வந்த போது அன்ஸாரித் தோழர்கள்- மதீனா முஸ்லிம்கள்- வருடத்தில் தமக்கென இரு தினங்களை எடுத்து குதூகலமாகக் கொண்டாடி, விளையாடிக் கொண்டிருந்தார்கள். "இது என்ன தினங்கள்?" என நபியவர்கள் கேட்க, அறியாமைக் காலத்திலிருந்து நாம் விளையாடி மகிழும் இரு தினங்கள் என்றார்கள். அப்போது நபியவர்கள் "அவ்விரு தினங்களுக்குப் பகரமாக ஈதுல் அழ்ஹா, ஈதுல் பித்ர் ஆகிய இரு தினங்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்" எனக் கூறினார்கள். (அபூதாவூத் 1134). பெருநாள் தினங்கள் என்பது ஒரு மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : "ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு பெருநாள் உள்ளது. இது எங்களது பெருநாள் ஆகும்". (புஹாரி 952, முஸ்லிம் 892).

இஸ்லாத்தில் பெருநாள் தினம்

இஸ்லாத்தில் பெருநாள் தினம் என்பது அல்லாஹ் நேர்வழி காட்டி, அவனை வணங்குவதற்குப் பாக்கியமளித்தையிட்டு அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வணக்கங்களைப் பூரணப்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு நாளாகும். பொதுவாக மக்கள் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதும், அழகான உடையணிவதும், தேவையுடையோருக்கு உதவுவதும், மக்கள் மனதை மகிழ்விக்கத் துணை புரியும் அனுமதிக்கப்பட்ட சகல கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் இத்தினத்தில் விரும்பத்தக்கதாகும். அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருளை அவர்களுக்கு நினைவுபடுத்துவதும் விரும்பத்தக்கதாகும்.

முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய பெருநாள் தினங்கள் வருடத்தில் இரண்டு உள்ளன. அவை இரண்டல்லாமல் வேறு தினங்களை பெருநாளாக எடுக்க முடியாது.

١
ஈதுல் பித்ர். இது ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.
٢
ஈதுல் அழ்ஹா. இது துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளாகும்.

பெருநாள் தொழுகை

இது பெண்கள், சிறார்கள் உட்பட அனைவரும் வெளிச் சென்று நிறைவேற்றும் படி இஸ்லாம் வலியுறுத்திய ஒரு தொழுகையாகும். அதன் நேரம் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி ஓர் ஈட்டிப்பிரமாணம் அளவு உயர்ந்ததிலிருந்து சூரியன் உச்சிக்கு வந்து மேற்குத் திசையில் சற்று சாயும் வரையிலாகும்.

பெருநாள் தொழுகை தொழும் முறை

பெருநாள் தொழுகை இரு ரக்அத்களைக் கொண்டது. இரண்டிலும் இமாம் சத்தமிட்டு ஓத வேண்டும். அதன் பின் இரு குத்பாக்கள் (பிரசங்கங்கள்) நிகழ்த்தப்படும். ஒவ்வொரு ரக்அத்தின் ஆரம்பத்திலும் மேலதிக தக்பீர்கள் கூற வேண்டும். முதல் ரக்அத்தில் ஆரம்பத் தக்பீரின்றி மேலதிகமாக ஆறு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஸுஜூதிலிருந்து நிலைக்கு வரும் தக்பீரின்றி மேலதிகமாக ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும்.

குடும்பத்தை மகிழ்விப்பது விரும்பத்தக்கதாகும்.

அனுமதிக்கப்பட்ட அனைத்து முறைகளிலும் சிறார்கள், வளர்ந்தோர், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் மகிழ்விக்க வேண்டும். அழகான ஆடையணிந்து, அன்றைய தினம் பகலுணவு உண்பதன் மூலம் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அதனால்தான் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும்.

பெருநாள் தின இரவிலிருந்து பெருநாள் தொழுகை வரை தக்பீர் கூறுவது விரும்பத்தக்கதாகும்.

பெருநாள் தொழுகையுடன் தக்பீருடைய நேரம் முடிவடைகின்றது. பரகத் செய்யப்பட்ட ரமழான் நோன்பை பூரணப்படுத்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், அதனை நோற்க வழிகாட்டியதற்காகவும், எமக்களித்த அருட்கொடைக்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவுமே இந்த தக்பீர் மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தக்பீரின் வார்த்தைகள்

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹுல் ஹம்து. மேலும் அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா. வஸுப்ஹானல்லாஹி புக்ரதன் வஅஸீலா என்ற வார்த்தையையும் கூறலாம்.

மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆண்கள் சத்தமிட்டு தக்பீர் கூறுவது விரும்பத்தக்கதாகும். பெண்கள் சத்தத்தைதத் தாழ்த்தியே தக்பீர் கூற வேண்டும்.

மக்கவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் ஒலிக்கும் தக்பீர் முழக்கத்தை செவிடுக்கவும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்