தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் பயணங்களுடனான சில ஈமானிய நிறுத்தங்கள்
இயற்கை இடங்களில் மனிதன் உலா வருதல், பயணம் செய்தல் போன்றனவே பயணங்களின் மூலம் நாடப்படுகின்றது.
-
மனித வாழ்க்கையின் அனைத்து நிலைகளும் அல்லாஹ்வுடன் தொடர்பு படுத்தப்பட்டே உள்ளன. பயணங்களிலும் அவன் எமக்கு விதித்துள்ள பல சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை சரியாகப் யன்படுத்தும் போது ஈருலகிலும் பாரிய நலவுகள் கிடைக்கின்றன.
ஹஜ், உம்ரா, கல்வி போன்ற நன்நோக்கங்களுக்காக பயணம் மேற்கொள்வதன் மூலம் ஒரு முஃமினுக்கு அதனை வணக்கமாக ஆக்கிக் கொள்ளலாம். உறவினர்களுடன் சேர்ந்து நடத்தல், குடும்பத்தினரை மகிழ்வித்தல், அல்லாஹ்வை வழிப்படத் துணை புரிவதற்காக, அல்லது அவனால் தடுக்கப்பட்டதை விட்டும் தூரமாவதற்காக தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் சற்று ஓய்வு வழங்குதல் போன்ற நல்ல எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). (அன்ஆம் 162, 163.)
அல்லாஹ்வின் மகத்துவம், கருணை, ஞானம் போன்றவற்றைப் பறைசாற்றும் அவனது அத்தாட்சிகளால் இப்பிரபஞ்சம் நிரம்பியுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன." (ஆலஇம்ரான் : 190). இதனால்தான் வெறுமனே அனுபவிப்பதற்கு அல்லாமல் படிப்பினை பெறும் நோக்கில் அவற்றை ஆராயுமாறு அதிகமாக ஏவியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா?" (அஃராப் : 185).
அதேபோன்று தான் தன்னை சுயபரிசோதனை செய்யவும், மறுமைக்காக தயார்படுத்தியுள்ளதை அவதானிக்கவும் சிலவேளை தனிமை வாய்ப்பாக அமைகின்றது. குறிப்பாக யாருமே இல்லாமல் அல்லாஹ் மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்கும் போது நல்லதொரு வாய்ப்பாக அமைகின்றது.
பயணத்தில் தங்குமிடத்தை அடைந்தால் அது பாலைவனமாக இருந்தாலும் இல்லையென்றாலும் அதற்கென இடம்பெற்றுள்ள துஆவை ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது". (முஸ்லிம் 2708).