கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பயணத்தில் தொழுகை, மற்றும் நோன்பு

பயணத்தில் மேற்கொள்ளும் தொழுகை, நோன்புக்கென தனித்துவமான சில சட்டங்கள் உள்ளன. இவ்வாறான சட்டங்களில் சிலதை இப்பாடத்தில் கற்போம்.

பயணத்தில் தொழுகை, நோன்பு தொடர்பான சட்டங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

பயணத்தில் அதான் கூறுதல்

அருகில் பள்ளி இல்லாத சுற்றுலாத் தளங்களில் தொழுகை நேரம் வந்ததும் ஒவ்வொரு தொழுகைக்காகவும் குரலுயர்த்தி அதான் சொல்ல வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் பின் அபீ ஸஃஸஆ (ரஹ்) கூறுகின்றார் : அபூ ஸஈதுல் குத்ரீ (ரலி) என்னிடம் : "நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக அதான் சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய அதான் சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்"' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள். (புஹாரி 609).

இதிலிருந்து அதானின் சிறப்பு அறியப்படுகின்றது, மேலும் பயணத்திலுள்ளோர் அதனை மேற்கொள்வதில் வெட்கப்படவோ, தேவையற்றிருக்கவோ கூடாது. மற்றுமொரு நபிமொழியில் "முஅத்தினுக்கு அவருடைய அதான் சென்றடையும் தூர அளவு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அதனைக் கேற்கும் ஈரலிப்புள்ள, காய்ந்த அனைத்து பொருட்களும் பாவமன்னிப்புக் கோருகின்றன" என இடம்பெற்றுள்ளது.

கிப்லாவை முன்னோக்குதல்

பயணத்திலிருப்பவர் கிப்லாத் திசையை அறிவதில் முயற்சி செய்ய வேண்டும், மக்காத் திசையே இதன் நோக்கமாகும். அதனை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டால் அதன் திசையை முன்னோக்கினால் போதுமானதாகும், நுணுக்கமாக அந்தக் கஃபாவையே முன்னோக்க வேண்டுமென்ற அவசியம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு அவசியமில்லை. ஏனெனில் அது சிரமம் என்பதுடன், நபித்தோழர்கள் அவ்வாறு சிரமம் எடுத்துக் கொண்டதாகவோ ஆதாரபூர்வமாக இடம்பெறவில்லை.

கிப்லாத் திசையைத் தேடுவதில் முயற்சி எடுத்து அதன் படி தொழுதால் அவருடைய தொழுகை முறையானதே, தொழுது முடிந்த பின் வேறு திசையில் தான் தொழுததாக அறியக் கிடைத்தாலும் அதனை மீட்டத் தேவையில்லை. தொழுது கொண்டிருக்கும் போது அறியக் கிடைத்தால் உடனே கிப்லாத் திசைக்குத் திரும்பி விட வேண்டும். முயற்சி செய்யாமல் தொழுது, பின்னர் திசை மாறித் தொழுததாக அறியக் கிடைத்தால் அத்தொழுகையை மீட்ட வேண்டும்.

நவீன கருவிகள், சூரியன் போன்ற நம்பகமான அறிகுறிகளை வைத்து, அந்த ஊர் மக்களில் நம்பகமான ஒருவர் கூறுதல், அல்லது கிப்லாத் திசையைத் தெளிவுபடுத்தும் மிஹ்ராபுகள் இருத்தல் போன்றவற்றின் மூலம் கிப்லாத் திசையை அறியலாம்.

வனாந்தரத்தில் தொழுவதன் சிறப்பு

பயணங்களில் தொழுகையைப் பேணித் தொழுவது பாரிய ஒரு பொறுப்பாகும், ஓர் அடியானின் இறைநம்பிக்கைக்குரிய அடையாளமாக இது திகழ்கின்றது.

ஒரு நபிமொழியில் "ஒரு மனிதன் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு கூலி அதிகமானதாகும், அதனை ஒரு வெட்ட வெளியில் வுழூ, ருகூஃ, ஸுஜுதுகளை முழுமையாகக் கடைபிடித்து நிறைவேற்றினால் ஐம்பது மடங்கிற்குக் கூட சென்று விடும்". (அபூதாவூத் 560).

இச்சிறப்பு ஏனெனில், அவன் மக்கள் பார்வையிலிருந்து தொலைவிலிருந்தாலும் அல்லாஹ்வுடன் தொடர்பிலிருந்து அவனை அஞ்சுகின்றான் என்பதற்கு அவனது மேற்கண்ட செயல் ஓர் ஆதாரமாகின்றது, இதனால்தான் பின்வருமாறு ஒரு நபிமொழியில் இடம்பெற்றுள்ளது : "மலையுச்சியில் நின்று கொண்டு அதான் கூறி தொழுகையை நிறைவேற்றும் ஓர் ஆட்டிடையனைப் பார்த்து உமது இரட்சகன் ஆச்சரியப்படுகின்றான். எனது இந்த அடியைனைப் பாருங்கள், அதான் கூறி, தொழுகையை நிலைநாட்டி என்னை அஞ்சுகின்றான், எனது அடியானை நான் மன்னித்து, சுவனத்தில் நுழைவித்து விட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்". (அபூதாவூத் 1203).

நெருப்பை முன்னோக்கித் தொழுதல்

மக்கள் குளிர்காலத்தில் நெருப்பு மூட்டுவர், சில வேளை அது கிப்லாத்திசையில் அமைந்திருக்கும். நெருப்பு வணங்கிகளுக்கு ஒப்பாகாமல் இருப்பதற்காக நெருப்பு இருக்கும் திசையை நோக்கித் தொழாமலிருப்பதே- குறிப்பாகத் தொழுகை நடத்தும் இமாமுக்கு- மிகச் சிறந்தது. மேலும் அது தொழுகையைப் பராக்காக்கி விடுகின்றது. குளிர் காய்வதற்குத் தேவையிருந்தால், அல்லது இடம் மாற்றுவது சிரமமாக இருந்தால் பரவாயில்லை.

பயணங்களில் தொழுகையை சேர்த்து, சுருக்கித் தொழுதல்

இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் என்பது தகுந்த காரணங்களுக்காக ளுஹரை அஸருடன் சேர்த்தும், மஃரிபை இஷாவுடன் சேர்த்தும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ இரு நேரங்களில் ஒரு நேரத்தில் தொழுவதைக் குறிக்கின்றது.

சுருக்கித் தொழுதல் என்பது ளுஹர், அஸர், இஷா ஆகிய நான்கு ரக்அத்களைக் கொண்ட தொழுகைகளை இரு ரக்அத்களாக சுருக்கித் தொழுதலைக் குறிக்கின்றது, மஃரிப், மற்றும் பஜ்ர் தொழுகைகளை சுருக்கித் தொழ முடியாது.

தொழுகையை சேர்த்து, சுருக்கித் தொழுவதற்கான தகுந்த காரணங்களில் பயணமும் ஒன்றாகும். பொதுவாக உலக வழக்கில் பயணம் என்றும் கூறும் அளவு ஊரை விட்டும் தூரப் பிரதேசத்திற்குச் செல்வதே இங்கு பயணத்தின் மூலம் நாடப்படுகின்றது. இதன் அளவு சுமார் 80 கி. மீ என சில அறிஞர்கள் சமகால அளவீட்டை வைத்துக் கணித்துள்ளனர். எனவே தனது பிரதேசத்திற்கு அண்டிய பகுதிக்கு உல்லாசத்திற்காகச் சென்றால் சுருக்கித் தொழ முடியாது, தூரப் பிரதேசத்திற்கு உல்லாசத்திற்காகச் சென்றாலும் சுருக்கித் தொழலாம்.

பிரயாணி சுருக்கித் தொழுவதுதான் நபிவழியாகும்.

சேர்த்துத் தொழுவதைப் பொருத்தவரை, பயணம் செய்து கொண்டிருக்கும் போது தனது நகர்வுக்கேற்ப முற்படுத்தியோ, பிற்படுத்தியோ சேர்த்துத் தொழலாம், ஓரிடத்தில் தங்கினால் ஒவ்வொரு நேரத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழுவதுதான் சிறந்ததாகும், குறிப்பாக பள்ளியில் கூட்டாகத் தொழ முடியுமாயின் அது மேலும் சிறந்ததாகும்.

பயணி மற்றும் பயணத்தில் இருப்பவர்கள் பயண வேலைப்பழுக்களின் காரணமாக, தங்கள் நேரத்திற்கு அப்பால் தொழுகைகளை புறக்கணிக்கக்கூடாது. போர் நிலையைப் பற்றிக் கூறி விட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது". (நிஸா : 103)

சேர்த்துத் தொழும் போது ஒரு அதான் போதுமானது, ஒவ்வொரு தொழுகைக்காகவும் வெவ்வேறு இகாமத் கூற வேண்டும். பிந்திய ஸுன்னத்களையும், தொழுது முடிந்து ஓதும் திக்ருகளையும் இரண்டு தொழுகைகளும் முடிந்த பின் நிறைவேற்ற வேண்டும்.

கனிசமான பள்ளிகளில் சேர்த்து, சுருக்கித் தொழ முடியுமா முடியாதா என்பதில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. பள்ளியின் இமாம், கூட்டத்தின் தலைவர்களே இதற்குப் பொறுப்பாவார்கள். அதுபற்றிய அறிவு அவரிடமிருந்தால் ஆய்வு செய்வார், அல்லது அறிவுள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவார். சேர்த்து, சுருக்கித் தொழலாம் என்ற எண்ணம் அவரிடம் மிகைக்காவிட்டால் சேர்த்து, சுருக்கித் தொழ முடியாது, பள்ளிக்கு வரும் மக்கள் இதற்காகக் பிணங்கிக் கொள்ளலாகாது. ஏனெனில் சமூக ஒற்றுமையும் ஒரு வணக்கமாகும்.

பயணமும் நோன்பும்

பயணத்தின் நோன்பு நோற்பது குறிப்பான ஒரு வணக்கமல்ல, இருப்பினும் வழமையாக குறிப்பிட்ட சில நாட்கள் ஒருவர் நோன்பிருக்கும் போது எதேச்சையாக அத்தினங்கள் பயணத்திலிருக்கும் போது வந்தால் அப்போது நோன்பிருப்பதில் தடையேதுமில்லை.

அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் : நாம் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். எங்களில் நோன்பிருப்பவர் நோன்பை விட்டவரையோ, நோன்பை விட்டவர் நோன்பிருப்பவரையோ குறை கூறவில்லை. (புஹாரி 1947, முஸ்லிம் 1118).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்