கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பயணங்களில் அதிகமாகத் தேவைப்படும் பொதுச் சட்டங்கள்

பயணத்துடன் தொடர்பான சட்டங்கள் தொழுகை, நோன்புடன் நின்றுவிடுவதில்லை, சட்டதிட்டங்கள் கூறப்பட்டுள்ள வேறு சில விடயங்களும் பயணத்தில் உள்ளன. அவற்றில் சிலதை இப்பாடத்தில் கற்போம்.

பயணங்களில் அதிகமாகத் தேவைப்படும் பொதுச் சட்டங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

உறங்கும் போது நெருப்பை அணைத்து விடல்

குளிர்கால பயணங்களில்-குறிப்பாக கூடாரம் போன்றவற்றில்- பெரும்பாலும் மூட்டப்படும் நெருப்பை உறங்குவதற்கு முன் அணைத்து விட வேண்டும்.

அபூ மூஸா(ரலி) கூறினார் : மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது "நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள். மற்றுமொரு நபிமொழியில் "நீங்கள் உறங்கும் போது உமது வீடுகளில் நெருப்பை விட்டு வைக்காதீர்கள்" என இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு நபிமொழியில் "ஏனெனில் விஷ ஜந்துக்கள் அதிலிருந்து திரியை இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும்" என இடம்பெற்றுள்ளது.

வேட்டையாடுவதன் சட்டங்கள்

அடிப்படையில் வேட்டையாடுதல் அனுமதிக்கப்பட்டதாகும், எனினும் உள்ளம் அதனுடனேயே தொடர்பு பட்டிருப்பதற்கும் மதம் மற்றும் குடும்ப நலன்களிலிருந்து திசைதிருப்பப்படுவதற்கும் வேட்டை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. அல்லது வீண்விரயம், வீண் விளையாட்டு, பெருமையடித்தல் போன்றவற்றுக்குக் காரணமாகவும் இருக்கக் கூடாது. "கிராமப் புறத்தில் வசிப்பவர் கடுமையாக நடந்து கொள்வார், வேட்டையில் தொடர்ந்திருப்பவர் (ஏனையவற்றில்) அலட்சியமாக இருப்பார்" என நபிமொழியொன்றில் இடம்பெற்றுள்ளது. (அபூதாவூத் 2859).

மார்க்கம் தடுத்ததைத் தவிர ஏனைய அனைத்துப் பிராணிகளையும் வேட்டையாடலாம் என்பதே அடிப்படையாகும். உதாரணமாக : ஓநாய், நரிகள் போன்ற கோரைப் பற்களுடைய பிராணிகள், கழுகுகள் கோரை நகங்களைக் கொண்ட பறவைகள், பாம்புகள் போன்ற விஷ ஜன்துக்கள் போன்றன தடை செய்யப்பட்டவையாகும்.

(மக்கா, மதீனா போன்ற) புனித பூமியிலோ, (ஹஜ், உம்ரா போன்ற வணக்கத்திற்காக) இஹ்ராம் நிய்யத் வைத்தவரோ வேட்டையாடுதல் ஹராமாகும். புனித மாதங்கள், ரமழான், வெள்ளிக்கிழமை என்ற வேறுபாடின்றி வருடத்தின் எக்காலத்திலும் வேட்டையாடலாம், பிறருக்கு சொந்தமான பிராணிகளை வேட்டையாடுவதும் ஹராமாகும்.

வேட்டையாடுபவர் முஸ்லிமாக இருப்பதுடன், அல்லாஹ்வின் பெயரையும் கூறியே வேட்டையாட வேண்டும். பறவை தன்னை மீறிப் பறந்தாலோ, தான் அறியாமலே துப்பாக்கி ரவை பாய்ந்து சென்றால் அப்பிராணியை மரணிக்க முன் பிடித்து, அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்காமல் அதனை உண்ண முடியாது.

அத்துடன் கழுத்தை நெறித்தோ, நீரில் மூழ்கடித்தோ, கனமான பொருளால் அடித்தோ, உயரமான இடத்திலிருந்து வீழ்த்தியோ கொன்றதல்லாமல் வேட்டைப் பிராணியின் உயிரிழப்பிற்கான காரணம் இவர் ஏற்படுத்திய காரணமாகவே இருத்தல் வேண்டும், உயிருடனிருக்கும் போதே வேட்டைப் பிராணி கிடைத்தால் சட்டபூர்வமாக அதனை அறுக்க வேண்டும்.

உண்ணும் நோக்கமின்றி வீண் கேளிக்கைக்காக வேட்டையாடுவது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். அதே போன்றுதான் வேட்டைக் கருவிகளால் மக்களை அச்சுறுத்துவதும் கூடாத செயலாகும். மேலும் வேட்டைப் பயிற்சிக்கான இலக்காக பறவைகளைக் கட்டிவைப்பதும் பாவமாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அம்பெறிவதற்கான இலக்காக ஒரு பறவையை நட்டுவைத்திருந்த சில வாலிபர்களைக் கடந்து சென்றார்கள், அவர்கள் (குறி) தவறவிடும் அம்புகள் ஒவ்வொன்றும் பறவையின் உரிமையாளருக்கு உரியவை என முடிவு செய்திருந்தனர். இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அவர்கள் சிதறியோடிவிட்டனர். அப்போது “யார் இதனை செய்தது? (அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்கியவனைச் சபித்தார்கள்" ” எனக் கூறினார்கள்.

விளையாட்டிற்குக் கூட பிறர் மீது ஆயுதங்களால் சுட்டிக்காட்டுவது ஹராமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்". (புஹாரி 7072, முஸ்லிம் 2617). மேலும் கூறினார்கள் : "ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே". (முஸ்லிம் 2616).

தன்னையும் பிறரையும் பாதுகாப்பதற்காக வேட்டையின் ஒழுங்கு விதிகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை அறிந்து வைத்தல் அவசியமாகும். பிராணிகளை அறுக்கும் முறை, வேட்டை நாய்களைக் கையாளும் முறை, வேட்டைப் பிராணிகளின் மரண நிலைகள் போன்றன பற்றி குறிப்பான சட்டதிட்டங்கள் உள்ளன. துறைசார்ந்தவர்களிடம் சென்று அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உணவு வகைகளின் சட்டங்கள்

மார்க்கம் தடுத்தவற்றைத் தவிர அனைத்து உணவு வகைகளும் ஆகுமானதாகும்.

தடுக்கப்பட்ட உணவு வகைகள்

١
செத்தவைகள் மற்றும் அதனுடன் சேர்க்கப்படுபவை.
٢
பன்றிகள்
٣
மது, மற்றும் போதைப்பொருள் : எதுவெல்லாம் அதிகம் உட்கொண்டால் போதையேற்படுமோ அவற்றைக் குறைவாகப் பயன்படுத்துவதும் ஹராமாகும்.
٤
உடலுக்குத் தீங்கிழைப்பவை
٥
சிங்கம், நாய், பூனை போன்ற வேட்டைப்பற்கள் உள்ள விலங்குகள், பருந்து, கழுகு போன்ற வேட்டை நகங்களுள்ள பறவைகள்.
٦
திருட்டு, அபகரிப்பு மூலம் எடுக்கப்பட்ட உணவு வகைகள்

வனாந்தரம் மற்றும் சந்தைகளில் கிடைக்கும் அனைத்து வித தானியங்கள், பழ வகைகளும் அனுமதிக்கப்பட்டவையாகும். இருப்பினும் தனக்குத் தீங்கிழைப்பவை, அல்லது ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படாதவற்றை உட்கொள்ளக் கூடாது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்