கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் அல்லாஹ்வின் பரிபாலனத் தன்மையை விசுவாசித்தல் (ருபூபிய்யா)

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களுடையவும் இரட்சகன், உரிமையாளன், படைப்பாளன், அவற்றுக்கு வாழ்வாதரம் அளிப்பவன், உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன், பயனளிப்பவன், தீங்கிழைப்பவன், அனைத்து விடயங்களும் அவனிடமே உள்ளன, அவன் கரத்திலேயே நலவுகள் உள்ளன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். அவற்றில் அவனுக்கு இணை யாருமில்லை என்பதை ஆணித்தரமாக ஏற்று, உண்மைப் படுத்துதல்.

  • அல்லாஹ்வின் பரிபாலனத் தன்மையை (ருபூபிய்யா) அறிதல்.
  • அல்லாஹ்வின் பரிபாலனத் தன்மையை விசுவாசிப்பதால் கிடைக்கும் பயன்பாடுகள்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

அல்லாஹ்வின் பரிபாலனத் தன்மையை (ருபூபிய்யா) விசுவாசித்தலின் அர்த்தம் :

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களுடையவும் இரட்சகன், உரிமையாளன், படைப்பாளன், அவற்றுக்கு வாழ்வாதரம் அளிப்பவன், உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன், பயனளிப்பவன், தீங்கிழைப்பவன், அனைத்து விடயங்களும் அவனிடமே உள்ளன, அவன் கரத்திலேயே நலவுகள் உள்ளன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். அவற்றில் அவனுக்கு இணை யாருமில்லை என்பதை ஆணித்தரமாக ஏற்று, உண்மைப் படுத்துதல். எனவே ருபூபிய்யா என்பது அல்லாஹ்வை அவனது செயல்களில் ஒருமைப்படுத்துதல் ஆகும். அதனைப் பின்வருமாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் :

இப்பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே, அவனன்றி வேறு படைப்பாளன் யாருமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வே அனைத்தையும் படைக்கக் கூடியவன் ஸுமர் 62. மனிதப் பொறுத்தவரையில் அது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுதல், அல்லது ஒரு சேர்க்கை, கலவையே தவிர உண்மையான படைப்பலோ இல்லாமையிலிருந்து உருவாக்கலோ, மரணத்தின் பின் உயிர்ப்பித்தலோ இல்லை.

அவன் தான் அனைத்துப் படைப்பினங்களுக்கும் வாழ்வாதாரம் அளிப்பவன். அவனன்றி வாழ்வாதாரம் அளிப்பவன் வேறு யாருமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "பூமியில் எந்த உயிரினமாயினும் அதற்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது". (ஹூத் : 06) .

அனைத்துப் பொருட்களுக்கும் அவனே ஆட்சியாளனாவான். உண்மையில் அவனைத் தவிர ஆட்சியாளன் யாருமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது". (மாஇதா : 120) .

அனைத்தையும் நிர்வகிப்பவன் அவன்தான். அல்லாஹ்வைத் தவிர நிர்வகிப்பவன் யாருமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கின்றான்". (ஸஜ்தா : 5) .

இறை நிர்வாகமும் மனித நிர்வாகமும்

மனித நிர்வாகமும், திட்டமிடலும் அவனது கட்டுப்பாட்டில், அவனக்கு உரிமையுள்ள, அவனது சக்திக்குட்பட்டவற்றில் மாத்திரமே நிகழ்கின்றது. அந்நிர்வாகம், திட்டமிடல் சில வேளை பலன்தரும், சில வேளை தோற்றும் போகலாம். ஆனால் படைத்தவனின் திட்டமிடல், நிர்வாகமெல்லாம் அனைத்தையும் உள்ளடக்கியது. அதிலிருந்து எதுவும் வெளியேறமாட்டாது. அனைத்தையும் செயல்படுத்தக் கூடியது, அதற்குத் தடையாகவோ, முரணாகவோ எதுவும் இருக்காது. இதுவே இறை நிர்வாகம்.

நபியவர்களின் காலத்து இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் பரிபாலனத் தன்மையை ஏற்றே இருந்தனர்

அல்லாஹ்தான் படைப்பாளன், ஆட்சியாளன், நிர்வாகி என்பதை நபி ஸல் அவர்களின் காலத்து இறைநிராகிர்ப்பாளர்கள் ஏற்றே இருந்தனர். அது மாத்திரம் அவர்களை இஸ்லாத்தில் நுழைவிக்கவில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டால் அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள்". (லுக்மான் : 25) . ஏனெனில் அல்லாஹ்தான் படைப்பாளன், ஆட்சியாளன், தனது அருட்கொடைகள் மூலம் அவர்களை நிர்வகிப்பவன் என்பதை ஏற்றவன் எவ்வித இணையுமின்றி அல்லாஹ்வை மாத்திரம் வணக்கங்கள் மூலம் ஒருமைப்படுத்தியாக வேண்டும்.

அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன், பிரபஞ்சத்தை நிர்வகிப்பவன், உயிர்ப்பிப்பவன், மரணிக்கச் செய்பவன் என்றெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டு அவனல்லாதோருக்கு வணக்கங்களை செலுத்துவது எவ்வாறு அறிவுடமையாகும்? இதுதான் மிகக் கோரமான அநீதியாகவும், பாரிய பாவமாகவும் இருக்கின்றது. இதனால்தான் லுக்மான் (அலை) தனது மகனுக்கு உபதேசிக்கும் போது "நிச்சயமாக இணைவைப்பு மிகப் பெரிய அநீதியாகும் எனக் கூறினார்கள்". (லுக்மான் : 13) .

பாவங்களில் மிகப் பெரியது? எது என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கே நீ இணைவைப்பதாகும்" என்றார்கள். (ஆதாரம் புஹாரி 4207, முஸ்லிம் 86.)

ருபூபிய்யத்தை விசுவாசிப்பதால் உள்ளம் அமைதி பெறும்.

படைப்பினங்களில் யாருக்கும் அல்லாஹ்வின் விதியை விட்டும் வெளியேற முடியாது, ஏனெனில் அவன்தான் அவர்களின் ஆட்சியாளன், தனது மதிநுட்பத்திற்கமைய தான் நாடியவாறு அவர்களை நடாத்துவான், அவர்கள் அனைவருடைய படைப்பாளனும் அவன்தான், அனைத்து விடயங்களும் அவனது கரத்திலேயே உள்ளன, படைப்பாளனோ, வாழ்வாதாரம் அளிப்பவனோ, பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனோ அவனைத் தவிர யாருமில்லை, ஓர் அணு கூட அவனது அனுமதியின்றி நகரவோ, அசைவின்றி இருக்கவோ மாட்டாது. இவற்றையெல்லாம் ஓர் அடியான் உறுதியாக நம்பினால் அவனது உள்ளம் சதாவும் அல்லாஹ்வுடனான தொடர்பிலும், அவனிடம் கையேந்துவதிலும், தேவை காண்பதிலும் நிலைத்திருக்கும், அனைத்து விடயங்களிலும் உள்ளம் அவனையே சார்ந்திருக்கும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்