கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தல்

அல்லாஹ் மாத்திரம்தான் உள்ரங்க, வெளிப்படையான அனைத்துவித வணக்கங்களுக்கும் தகுதியானவன் என்பதை ஆணித்தரமாக உண்மைப் படுத்தல்.

  • அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தலின் பொருளை அறிதல்
  • அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தலின் முக்கியத்துவத்தை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தலின் பொருள்

அல்லாஹ் மாத்திரம்தான் உள்ரங்க, வெளிப்படையான அனைத்துவித வணக்கங்களுக்கும் தகுதியானவன் என்பதை ஆணித்தரமாக உண்மைப் படுத்தல். எனவே பிரார்த்தனை, அச்சம், பொறுப்புச் சாட்டல், உதவி தேடுதல், தொழுகை, ஸகாத், நோன்பு போன்ற அனைத்து வித வணக்கங்கள் மூலமும் அல்லாஹ்வை நாம் ஒருமைப் படுத்த வேண்டும். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இரட்சகனே. (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்". (பகரா : 163)

இறைவன் ஒரே ஒருவன்தான் என்பதை அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது வணங்கப்பட வேண்டியவன் ஒருவன்தான். வேறு கடவுள்களை எடுக்கவோ, வணங்கப்படவோ கூடாது.

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ஒவ்வொரு பொருளையும் விரிவாக அவன் அறிந்து வைத்திருக்கிறான். (தாஹா : 98).

அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தலின் முக்கியத்துவம்

அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தலின் முக்கியத்துவம் பல கோணங்களில் வெளிப்படுகின்றன :

1. மனு, ஜின்கள் படைக்கப்பட்ட குறிக்கோள் அதுவே.

எவ்வித இணையும் வைக்காமல் அல்லாஹ்வை மத்திரம் வணங்குவதற்காகவே அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் கூறுகின்றான் : "என்னை வணங்குவதற்காகவே அன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை". (தாரியாத் : 56)

2. இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கமும் அதுவே.

மேலும் இறைவேதங்களும் அருளப்பட்டதும் அதற்காகவே. எனவே அல்லாஹ் மாத்திரம்தான் உண்மையாக வணங்கப்படக்கூடியவன் என்பதை ஏற்று அவனல்லாது வணங்கப்படுபவற்றை மறுப்பதே இதன் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனல்லாது வணங்கப்படும் தாகூத்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (நஹ்ல் : 36).

3. மனிதனுடைய முதல் கடமையும் அதுவே.

முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு அனுப்பும் போது பின்வருமாறு உபதேசித்தார்கள் : "வேதக்காரர்களில் ஒரு சமூகத்திடம்தான் நீர் செல்கிறீர். ஏகத்துவ சாட்சியமே நீர் அழைக்கக்கூடிய முதல் விடயமாக இருக்கட்டும்". (புஹாரி 1389, முஸ்லிம் 19). அதாவது அனைத்து வித வணக்கங்கள் மூலமும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதன் பால் அவர்களை அழையும்.

4. இறைமையை விசுவாசிப்பதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு என்ற கலிமாவின் யதார்த்தமாகும்.

இலாஹ் என்றால் வணங்கப்படக்கூடியவன் என்பதாகும். எனவே உண்மையாக வணங்கப்படக் கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. எந்த வணக்கத்தையும் நாம் அவனல்லாதோருக்கு ஒரு போதும் செலுத்தலாகாது.

5. அல்லாஹ்தான் படைப்பாளன், ஆட்சியாளன், நிர்வகிப்பவன் என்பதற்குரிய தர்க்க ரீதியான முடிவுகூட அவனது இறைமையை ஏற்பதே.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்