தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் அல்லாஹ்வின் பெயர், பண்புகளை விசுவாசித்தல்
அல்லாஹ்வின் பெயர், பண்புகளை விசுவாசித்தல்
அடியார்களுக்கு தம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனைப் பற்றி அல்குர்ஆன் அதிகமாக வலியுறுத்திப் போதித்துள்ளதுடன் அதனைப் பல வசனங்களில் பல தடவைகள் கூறியுள்ளது. ஏனெனில் ஒரு முஸ்லிம் தனது இரட்சகனை அவனது அழகிய திருநாமங்கள், அவன் கொண்டிருக்கும் கண்ணியமிக்க பரிபூரண பண்புகளுடன் சேர்த்து அறிவது அவசியமாகும். அப்போதுதான் அவனைத் தெளிவான அறிவுடன் வணங்க முடியும். அப்பெயர், பண்புகளின் தேற்றங்களும், தாக்கங்களும் அவனது வாழ்க்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் பிரதிபலிக்கும்.
அல்லாஹ் தனக்கிருப்பதாக அவனது திருமறையிலோ, தூதரின் பொன்மொழியிலோ உறுதிப்படுத்திய பெயர், பண்புகளை அவனது தகுதிக்கேற்றவாறு ஒரு முஸ்லிம் விசுவாசிப்பான்.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்களும், பரிபூரண பண்புகளும் உள்ளன. அவ்விரண்டிலும் அவனுக்கு நிகராக யாருமில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் அனைத்தையும் கேட்பவன், பார்ப்பவன்". (அஷ்ஷூரா : 11.) எனவே அல்லாஹ் அவனது அனைத்து பெயர், பண்புகளிலும் தனது படைப்பினங்களுக்கு ஒப்பாவதை விட்டும் தூய்மையானவன்.
அல்லாஹ்வின் பெயர்களில் சிலவற்றை இங்கு நாம் நோக்குவோம்
ரஹ்மான், ரஹீம்
இவ்விரு பெயர்களின் மூலமும்தான் அல்லாஹ் தனது வேதத்தை ஆரம்பித்து, தன்னை தனது அடியார்களுக்கு அறிமுகம் செய்துள்ளான். ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று நாம் ஆரம்பிக்கும் வகையில் அவ்விரு பெயர்களையும் முக்கிய இடத்தில் வைத்துள்ளான்.
அல்லாஹ் தன் மீதே கருணையை விதியாக்கி எமக்கு அருள்புரிந்துள்ளான். அவனது கருணை அனைத்தையும் மிகைத்து விட்டது. படைப்பினங்கள் தமக்கு மத்தியில் இரக்கம் காட்டுதல், தாய் பிள்ளைக்குக் காட்டும் இரக்கம், படைப்பினங்களுக்கு உணவுகளை இலகுபடுத்திக் கொடுத்தல் என அனைத்துமே அல்லாஹ் அவர்கள் மீது கொண்ட கருணையின்வெளிப்பாடாகவே உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "பூமி இறந்த பின் அதனை எவ்வாறு அவன் உயிர்ப்பிக்கின்றான்? என்ற அல்லாஹ்வின் அருளின் அடையாளங்களை நீர் பார்ப்பீராக". (ரூம் : 50).
தனது குழந்தையைத் தொலைத்த ஒரு பெண் அதனைத் தேடித் திரிந்து கிடைத்ததும் தன் மார்போடு அணைத்து அக்குழந்தைக்குப் பாலூட்டிய காட்சியை நபியவர்களும், தோழர்களும் கண்ட போது "இப்பெண் தனது குழந்தையை நெருப்பில் போடுவாள் எனக் கருதுகின்றீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அப்போது தோழர்கள் "அதைத் தடுக்கும் சக்தி அவளிடமிருக்கும் வரை ஒரு போதும் அதைச் செய்ய மாட்டாள்" எனக் கூறினார்கள். "இப்பெண் தன் குழந்தை மீது கொண்டுள்ள இரக்கத்தை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது அதிக இரக்கமுள்ளவன்" என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புஹாரி 5653, முஸ்லிம் 2754).
படைத்தவனின் கருணை என்பது வேறு விதமானது, கண்ணியமானது, மகத்தானது. அது கற்பனை, யூகம், உருவகம் அனைத்தையும் தாண்டியதாகும். அல்லாஹ்வின் கருணையின் அளவை அடியார்கள் முறையாக அறிந்தால் அதிலிருந்து யாரும் நிராசையடைய மாட்டார்கள்.
அல்லாஹ்வின் கருணை இரு வகைப்படும் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக உங்களில் யாரும் தனது நற்செயலை வைத்து சுவனத்தில் நுழைய முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்". அப்போது நீங்களுமா? அல்லாஹ்வின் தூதரே! என தோழர்கள் வினவ, "ஆம், நானும்தான், ஆனால் அல்லாஹ் தனது கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டுவிட்டான்" என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 2816).
ஓர் அடியானின் கீழ்ப்படிதல் எவ்வளவு அதிகமாகின்றதோ, தனது இரட்சகனுடனான நெருக்கமும், உண்மைத் தன்மையும் எவ்வளவு அதிகமாகின்றது அந்தளவு இந்தக் கருணைக்குத் தகுதியாகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நன்மை செய்வோருக்கு நெருக்கமாகவே உள்ளது". (அஃராப் : 56).
அல்லாஹ் கேட்கக் கூடியவன், பார்க்கக் கூடியவன்
அல்லாஹ் வெவ்வேறு மொழிகளிலும், வெவ்வேறு தேவைகளிலும் அனைத்து குரல்களையும் கேட்கின்றான். இரகசியமும், பரகசியமும் அவனிடம் சமமே. அல்லாஹ் தனது இரகசியங்கள், ஊசலாட்டங்களை செவிமடுக்க மாட்டான் என சில அறிவீனர்கள் எண்ணிய போது அவர்களைக் கண்டித்து பின்வருமாறு கூறுகின்றான் : "அல்லது அவர்களது இரகசியத்தையும், இரகசிய உரையாடல்களையும் நிச்சயமாக நாம் செவியேற்க மாட்டோம் என அவர்கள் எண்ணிக் கொள்கின்றனரா? அவ்வாறன்று, அவர்களிடத்தில் உள்ள நமது தூதர்கள் (அவற்றை) பதிவு செய்கின்றனர். (ஸுக்ருஃப் : 80) .
சிறியதாயினும், நுட்பமாயினும் பிறருக்கு மறையக் கூடியதாயினும் அல்லாஹ் அனைத்தையும் பார்க்கின்றான். எந்த ஒன்றையும் பார்க்காத, கேட்காத சிலையை வணங்கியதால் இப்ராஹீம் அலை அவர்கள் தனது தந்தையை தடுத்தார்கள். அவர்கள் கூறியதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "எனது தந்தையே! (எதையும்) செவியேற்க முடியாத, பார்க்க முடியாத, மேலும் உமக்கு எவ்வித பயனையும் அளிக்க முடியாததை நீர் ஏன் வணங்குகின்றீர்? (மர்யம் : 42).
அல்லாஹ் கேட்க்கக் கூடியவன், பார்க்கக் கூடியவன், அவனுக்கு வானங்கள், பூமியிலுள்ள எதுவும் மறைய மாட்டாது, இரகசியத்தையும் அதை விட மறைவானதையும் அறிவான் என்பதை ஓர் அடியான் அறிந்தால் அது அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றிய உணர்வை அவனிடம் வளர்த்து விடும். எனவே பொய், புரட்டல்களில் விழாமல் தனது நாவைக் காத்துக் கொள்வான், அல்லாஹ்வைக் கோபமூட்டுவதை விட்டும் தனது உறுப்புக்களையும், உள்ள ஊசலாட்டங்களையும் காத்துக்கொள்வான். அல்லாஹ்வின் அருட்கொடைகள், அவன் வழங்கிய சக்திகளை அவன் விரும்பி, பொருந்திக் கொள்ளும் வகையிலேயே பயன்படுத்துவான். ஏனெனில் அவன் தான் இரகசியம், பரகசியம், உள்ரங்கம், வெளிப்படை அனைத்தையும் அறியக்கூடியவன். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இஹ்ஸான் என்பது நீ அல்லாஹ்வைக் காண்பது போன்று அவனை வணங்குவதாகும், நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கின்றான்". (ஆதாரம் : புஹாரி 50, முஸ்லிம் 9).
இல்லாமையிலிருந்து உருவாகுதல் என்ற பண்பில்லாத முழுமையான உயிருடன் இருக்கும் நிலை அல்லாஹ்வுக்குரியது. அவனது வாழ்விற்கு அழிவோ, முடிவோ கிடையாது, எவ்விதக் குறைபாடும் ஏற்படமாட்டாது. அவற்றிலிருந்து அல்லாஹ் பரிசுத்தமானவன், தூய்மையானவன். அறிவு, கேள்வி, பார்வை, வல்லமை, நாட்டம் போன்ற அவனது அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்குகின்ற வாழ்வே அல்லாஹ்வுக்குரியது. இவ்வாறான நிலையிலுள்ளவன்தான் வணங்கப்படவும், ருகூஃ செய்யவும், பொறுப்புச் சாட்டவும் முழுத்தகுதியுள்ளவன். அல்லாஹ் கூறுகின்றான் : "மரணிக்காத என்றும் உயிருடன் இருப்பவன் மீது முழுமையாக பொறுப்புச் சாட்டுவீராக". (புர்கான் : 58).
என்றும் நிலைத்திருப்பவன் எனும் அல்லாஹ்வின் பெயர் இரு விடயங்களைக் காட்டுகின்றது :
இதனால்தான் பிரார்த்தனையின் போது இவ்விரு மகத்தான பெயர்களும் ஒன்றினையும் போது அதற்குத் தனி இடமொன்று கிடைக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது பிரார்த்தனையில் பின்வருமாறு கூறுவார்கள் : "என்றும் உயிருடன் நிலைத்திருப்பவனே! உனது அருளைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன்". (ஆதாரம் : திர்மிதி 3524).