கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வஸிய்யத் (மரண சாசனம்) மற்றும் பாகப்பிரிவினைச் சட்டம்

தனது மரணத்திற்குப் பின் அமுல்படுத்தப்படும் வகையில் தனது சொத்தில் மரணசாசனம் எழுதி வைப்பதை இஸ்லாமிய ஷரீஅத் ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கின்றது. மேலும் இஸ்லாத்தில் ஆச்சரியமிக்க ஒரு பாகப்பிரிவினை முறை உள்ளது. வஸிய்யத் (மரண சாசனம்) மற்றும் பாகப்பிரிவினைச் சட்டம் பற்றிய சில விடயங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • மரணசாசனத்தின் அர்த்தத்தை அறிதல்.
  • மரணசாசனத்தின் வகைகள், சட்டங்களை அறிதல்.
  • பாகப்பிரிவினையின் அர்த்தத்தை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

வஸிய்யத் என்பதன் அர்த்தம்

வஸிய்யத் : மரணத்தின் பின் தனது பொருளாதாரத்தில் ஆற்ற வேண்டிய விடயத்தைப் போதித்தல், அல்லது தானமளித்தல். உதாரணமாக தனது பொருளாதாரத்தில் ஒரு பகுதியின் மூலம் பள்ளிவாயிலொன்றை நிர்மாணிக்க வஸிய்யத் செய்வதைப் போன்றாகும்.

வஸிய்யத் (மரண சாசனம்)

ஒரு முஸ்லிம் தனது பொருளாதாரம் தொடர்பான விடயங்களை மரணத்திற்கு முன்னரே மரண சாசனம் எழுதிவைப்பது சிறந்தது. நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : "ஒரு முஸ்லிமான மனிதர் மரண சாசனம் எழுத ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருந்தால், அவர் தமது மரண சாசனத்தை எழுதித் தம்மிடம் வைத்திருக்காமல் மூன்று இரவுகளைக்கூடக் கழிப்பதற்கு அனுமதியில்லை". இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்றதிலிருந்து எனது இறுதி விருப்பத்தை எழுதி என்னிடம் வைத்திருக்காமல் ஓர் இரவைக்கூட நான் கழித்ததில்லை. (புஹாரி 2738, முஸ்லிம் 1627).

அல்லாஹ் தனது வேதத்தில் மரணித்தவரின் கடனை அடைத்தல், சொத்துப் பங்கீடு இரண்டையும் விட வஸிய்யத்தை நிறைவேற்றுவதை முற்படுத்தியுள்ளான். சொத்துப் பங்கீடு பற்றி பின்வருமாறு கூறுகின்றான் : "மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னராகும்" (நிஸா : 11)

மரண சாசனத்தின் நிலைகள்

இந்த மரண சாசனத்திற்கு பல நிலைகள் உள்ளன :

1. கடமையான மரண சாசனம்.

ஒரு முஸ்லிம் கொடுக்க வேண்டிய கடன்கள் அல்லது பொருளாதார கடமைகள் இருந்து, அதைக் காட்டும் எந்த ஆதாரமும் ஆவணங்களும் இல்லை என்றால், இந்த கடமைகளை ஆவணப்படுத்தும் பொருட்டு மரண சாசனம் எழுதுவது அவசியமாகும். ஏனெனில் கடனை நிறைவேற்றுவது அவசியமாகும். எதன் மூலம் கடமை நிறைவேறுமோ அதுவும் ஒரு கடமையாகும்,

2. ஸுன்னத்தான மரண சாசனம்.

இது ஒரு முஸ்லிமின் மரணத்திற்குப் பிறகு அவரது பணத்தின் ஒரு பகுதியை உறவினர்கள், ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் போன்ற நல்ல விடயத்தில் நன்கொடையாக அளிப்பதாகும். இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன :

A. அந்த மரண சாசனம் அனந்தரக்காரருக்கானதாக இருக்கக் கூடாது. ஏனெனில் அல்லாஹ் அவர்களுக்கான சொத்துக்களை பங்கீடு செய்து வைத்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அனந்தரக்காரருக்கு மரண சாசனம் இல்லை" (அபூதாவூத் 3565, திர்மிதி 2120, இப்னுமாஜா 2713).

B. முழுச் சொத்தில் மூன்றிலொரு பங்கை விடக் குறைவானதாக இருக்க வேண்டும். மூன்றிலொரு பங்கும் முடியும். நபித்தோழர்களில் ஒருவர் தனது சொத்தில் மூன்றிலொன்றை விட அதிகமாக மரணசாசன் எழுத முற்பட்ட போது நபியவர்கள் அதனைத் தடுத்து : "மூன்றிலொன்று, மூன்றிலொன்றும் அதிகம் தான்" எனக் கூறினார்கள். (புஹாரி 2744, முஸ்லிம் 1628)

C. மரண சாசனம் எழுதுபவர் வசதியுள்ளவராக இருப்பதுடன், எஞ்சும் பணம் அனந்தரக்காரர்களுக்கு போதுமானதாக இருக்கவும் வேண்டும். மரண சாசனம் எழுதுபவர் ஏழையாக இருந்தால் அல்லது அனந்தரக்காரர்கள் அச்சொத்தின் பால் தேவையுள்ளவர்களாக இருந்தால் அப்போது மரண சாசனம் எழுதுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில் அதனால் அனந்தரக்காரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றது. ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) மரண சாசனம் எழுத முற்பட்ட போது நபியவர்கள் கூறினார்கள் : "நீர் உமது அனந்தரக்காரர்களை செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக அவர்களை விட்டுச் செல்வதை விட சிறந்ததாகும்". (புஹாரி 2744, முஸ்லிம் 1628).

3. வெறுக்கத்தக்க மரண சாசனம் :

மரண சாசனம் எழுதுபவரின் பணம் குறைவாக இருந்து, அவரது அனந்தரக்காரர்களும் அதில் தேவையிருந்தால் அப்போது மரண சாசனம் எழுதுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில் அதனால் அனந்தரக்காரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துகின்றார். ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள் : "நீர் உமது அனந்தரக்காரர்களை செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக அவர்களை விட்டுச் செல்வதை விட சிறந்ததாகும்". (புஹாரி 2744, முஸ்லிம் 1628).

4. ஹராமான மரண சாசனம் :

அனந்தாக்காரர்களில் மூத்த புதல்வன், மனைவி போன்ற குறிப்பிட்ட ஒருவருக்கு எழுதுதல், அல்லது தனது கப்ருக்கு மேலால் முகடு போன்று கட்டுமாறு மரண சாசனம் எழுதுதல். இது ஹாராமானதாகும்.

மார்க்கம் காட்டியுள்ள மரண சாசன அளவு

சொத்தில் மூன்றிலொரு பகுதியை மரண சாசனம் எழுதலாம், அதனை விட அதிகமாக்கக் கூடாது, குறைப்பது மிகச் சிறந்தது. ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) : "இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்ட போது. நபியவர்கள், 'வேண்டாம்'' என்று கூறினார்கள். 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்க. அதற்கும், 'வேண்டாம்'' என்றே பதிலளித்தார்கள். 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)'' என்று கேட்க. அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் செல்வந்தர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும்" என்று கூறினார்கள். (புஹாரி 1295).

தனக்கு வாரிஸுக்காரர்கள் யாருமில்லாவிடில் மூன்றிலொன்றுக்குப் பதிலாக முழுச் சொத்தையும் மரண சாசனம் எழுதிடலாம்.

மரண சாசனம் எழுதுவதின் சட்டம்

நிபந்தனைகளுக்குட்பட்ட மரண சாசனத்தை நிறைவேற்றுவது அவசியமாகும். அதனை நிறைவேற்றாத பொறுப்பாளர் பாவியாவார். அல்லாஹ் கூறுகின்றான் : "வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்". (பகரா : 181)

பாகப்பிரிவினைச் சட்டம்

ஒரு மனிதன் மரணித்தால் அவன் வாழ்வில் சம்பாதித்த சொத்துக்களின் உரிமையை இழந்து விடுகின்றான். அவன் விட்டுச் சென்ற அந்த சொத்துக்களிலிருந்து அவனுடைய கடன்களை அடைத்து, மரண சாசனத்தை நிறைவேற்றி விட்டு மீதியை உரிய அனந்தரக்காரர்களுக்கு முறைப்படி பங்கீடு செய்யும் படி இஸ்லாம் எமக்குப் பணித்துள்ளது.

பங்கீட்டு முறையில் பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க அல்குர்ஆனும் ஸுன்னாவும் சொத்துக்களைப் பங்கீடு செய்யும் முறையை எமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன. இதனைப் பங்கீடு செய்த நீதவான் உயர்ந்தவனாகிய அல்லாஹ்வே. ஊர் வழமைக்கு, மக்கள் பழக்கத்திற்கு முரண்படுவதாகக் கூறி இச்சட்டத்தில் யாருக்கும் மாற்றம் கொண்டு வர முடியாது. இதனால் தான் இது பற்றிய வசனங்களைக் கூறிய பின் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்". (நிஸா : 13).

மரணித்தவரின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தமது உறவினரின் மரணத்திற்குப் பின் மார்க்க சட்ட ரீதியாக சொத்துக்களைப் பங்கீடு செய்வதை விரிவாக அறிந்து கொள்வதற்காக அறிஞர்களையும், நீதிவான்களையும் அனுகுவதுடன், சொத்துக்கள் விடயத்தில் மோதல்கள், பிரச்சினைகளைத் தவிர்க்கவும் வேண்டும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்