தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் இஸ்லாத்தில் இணைவது எவ்வாறு
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
அந்த இரு ஷஹாதாக்களும் :
ஒரு மனிதன் இஸ்லாத்தில் இணையும் அந்த வினாடிதான் அவனது வாழ்வின் மிக முக்கியமான தருணமாகும். தான் இவ்வுலகில் பிறந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்த உண்மையான பிறப்பு அதுதான் . அச்சந்தர்ப்பத்தில் அவன் குளித்துக் கொள்வது விரும்பத்தக்கதாகும். தனது உள்ளத்தை இணைவைப்பை விட்டும் சுத்தப்படுத்தியது போன்று வெளி உறுப்புக்களை நீரினால் சுத்தம் செய்வது விரும்பத்தக்கது.
அரபுத் தலைவர்களில் ஒருவர் இஸ்லாத்தில் இணையும் போது அவருக்கும் நபியவர்கள் குளிக்கும் படி பணித்தார்கள். (பைஹகீ 837).
யார் இந்த நிலையில் இருக்கின்றாரோ அவர் பின்னடைவுக்கு இட்டுச்செல்லும் ஷைத்தானின் பொறிகளில் வீழ்ந்திடாமலிருக்க அந்தப் பாவமீட்சியைப் பாதுகாப்பதும், அதனைத் தக்க வைக்க விலைமதிப்பற்றதை செலவழிப்பதும் அவசியமாகின்றது.
இரு ஷஹாதாக்களையும் அவற்றின் அர்த்தங்களை அறிந்து, உறுதி கொண்டு, அவற்றுக்குக் கட்டுப்பட்ட நிலையில் அவற்றை மொழிவதன் மூலம் ஒரு மனிதன் இஸ்லாத்தில் இணைகின்றான்.
பாவமீட்சி பெறுதல்
பாவமீட்சி என்பது அல்லாஹ்வின் பால் மீள்வதாகும். தனது பாவம், இறை நிராகரிப்பை விட்டு அல்லாஹ்விடம் மீண்ட அனைவரும் பவமீட்சி பெற்றவராவார்.
பாவமீட்சி செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்
மனஉறுதியை செயல்படுத்தும் படிமுறைகள்
தவ்பாவிற்குப் பின் என்ன?
ஒரு மனிதன் தவ்பாச் செய்து, மீண்டால் எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் அல்லாஹ் அனைத்தையும் மன்னித்து விடுகின்றான். அவனுடைய அருள் அனைத்தையும் மிகைத்து விட்டது. அல்லாஹ் கூறுகின்றான் :“வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட என் அடியார்களே! (உங்களில்) எவரும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (ஸுமர் : 53).
எனவே அந்த முஸ்லிம் உண்மையான முறையான தவ்பாவின் மூலம் தன் மீது எந்தப் பாவமுமற்ற நிலையிலேயே வெளியேறுகின்றான். மாறாக உண்மையாகக் கவலைப்பட்டு தவ்பாச் செய்பவர்களுக்கு அவர்களுடைய பாவங்களை நன்மைகளாக மாற்றி மகத்தான ஒரு பிரதிபலனை அல்லாஹ் வழங்குகின்றான். அவன் கூறுகின்றான் : “ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்”. (புர்கான் : 70).
அல்லாஹ், அவனது தூதர் ஆகியோரின் நேசம் யாரிடத்தில் மகத்தானதாக அமைந்து விடுகின்றதோ, பிறரை அல்லாஹ்வுடனான அவர்களின் நெருக்கம், சரியான மார்க்கம், இஸ்லாம் என்பவற்றுக்கமைய நேசிக்கிறாரோ, நிராகரிப்பு, இணைவைப்பு, வழிகேடு ஆகியவற்றிலிருந்து மீண்ட பின் மீண்டும் அவற்றில் வீழ்வதை நெருப்பினால் எறிக்கப்படுவதை வெறுப்பது போல் வெறுக்கின்றாரோ , அப்போது அல்லாஹ்வை நெருங்கி, உளஅமைதியடைந்து, நேர்வழி, அருட்கொடை, மார்க்கம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சியடைவதின் மூலம் அவனது உள்ளத்தில் ஈமானின் சுவையை உணர்கின்றான். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : “எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது; ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது”. (புஹாரி 21, முஸ்லிம் 43).
மார்க்கத்தைப் பற்றிப்பிடித்து, அதன் போது ஏற்படும் நோவினைகளைப் பொறுத்துக்கொள்ளல்
பெறுமதிமிக்க பொக்கிசமொன்றைப் பொற்றுக் கொண்டவன் அதனைக் கள்வர்கள், கொள்ளையர்களின் கையிலிருந்து பாதுகாக்க ஆர்வம் காட்டுவான், அதற்கு எச்சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பான். இஸ்லாம்தான் முழு மனித சமூகத்திற்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய பரிசாகும். இது ஒரு அறிவுசார் நோக்குநிலையோ, அல்லது ஒரு நபர் விரும்பும் போதெல்லாம்செய்யும் ஒரு பொழுதுபோக்கோ அல்ல. மாறாக அவனுடைய வாழ்க்கையின் அனைத்து ஆடல், அசைவுகளையும் இயக்கும் ஒரு மார்க்கமாகும். இதனால்தான் அல்லாஹ் தனது தூதருக்கு இஸ்லாத்தையும், குர்ஆனையும் விட்டுக்கொடுக்காமல் பலமாகப் பற்றிக்கொள்ளுமாறு பணித்துள்ளான். ஏனெனில் அதுதான் நேரான வழியாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்”. (ஸுஃக்ருப் : 43).
தான் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் சோதனைகள் ஏற்பட்டதையிட்டு ஒரு முஸ்லிம் வருந்தக் கூடாது. ஏனெனில் இதுதான் சோதனையில் அல்லாஹ்வின் நியதியாகும். எம்மை விடச் சிறந்த எத்தனையோ பேர் கடுமையாக சோதிக்கப்பட்டு பொறுமை காத்து அவற்றை எதிர் கொண்டார்கள். இதோ அல்லாஹ் எமக்குக் கூறியுள்ள பல நபிமார்களின் சம்பவங்கள். தொலைவிலுள்ளவர்கள் ஒரு புறமிருக்க நெருங்கிய உறவுக்காரர்களாலேயே பல சோதனைகள் அவர்களுக்கு வந்தன. அல்லாஹ்வின் பாதையில் அவர்களைத் தாக்கிய அந்தச் சோதனைகளால் சற்றும் அவர்கள் பலவீனப்பட்டுப் போகவோ, தமது வழியில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவோ இல்லை. இது உனது ஈமானின் உண்மைத் தன்மைக்காகவும், மனஉறுதியின் வலிமைக்காகவும் அல்லாஹ்விடமிருந்து வரும் சோதனையாகும். இச்சோதனையின் அளவு நீயும் உறுதியாக இரு. இம்மார்க்கத்தைப் பலமாகப் பிடித்துக்கொள். நபியவர்கள் அதிகம் கேட்கும் அந்த துஆவை நீயும் அதிகம் கேள். "உள்ளங்களை பிரட்டக் கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக". (திர்மிதி: 2140).
اختر مستوى الشرح المناسب لك
يحتوي الدرس الآن على طبقات اختيارية تساعدك على المراجعة السريعة أو التعمق دون مغادرة الدرس.
- الملخص: نظرة سريعة في نحو دقيقة.
- الأساسي: محتوى الدرس الأصلي وهو المسار المعتمد للتقدم.
- المتعمق: تفاصيل إضافية اختيارية عند توفرها.
تقدمك وإكمال الدرس يعتمدان دائما على صفحات المستوى الأساسي.