கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் கூட்டு வியாபாரம் / கூட்டுப் பங்குடமை

கூட்டு வியாபாரம் என்றால் என்ன என்பதையும், இஸ்லாமிய ஷரீஅத்தில் அது தொடர்பான சட்டங்களையும் இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாமிய ஷரீஅத்தில் கூட்டு வியாபாரத்தின் அர்தத்தத்தை அறிதல்.
  • கூட்டு வியாபாரத்தின் வகைகளை அறிதல்.
  • வியாபார ஒப்பந்தங்களின் வகைகளை அறிதல்.
  • கூட்டு வியாபாரத்தின் சில சட்டங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

கூட்டு வியாபாரம் என்றால் என்ன?

இது உரிமையில் ஒன்று சேர்தல், அல்லது இருவர், அதற்கு மேற்பட்டோருக்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையைக் குறிக்கின்றது. உதாரணமாக அனந்தரச் சொத்து, நன்கொடை போன்றவற்றில் இருவர் பங்குதாரராகுதல், அல்லது விற்பனை, நுகர்வில் பங்குதாரராகுதல்.

கூட்டு பங்குடமையின் சட்டம்

கூட்டு வியாபாரம் / கூட்டுப் பங்குடமை ஆகுமான ஓர் ஒப்பந்தமாகும். ஏனெனில் பரிவர்த்தனைகளில் அடிப்படைச் சட்டம் அவை ஆகும் என்பதே. வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதில் தனது அடியார்களுக்கு இலகுபடுத்திக் கொடுப்பதற்காக அல்லாஹ் இதனை அனுமதித்துள்ளான். முஸ்லிம், முஸ்லிமல்லதோர் அனைவருடனும் இவ்வொப்பந்தம் செய்து கொள்ளலாம். எனினும் முஸ்லிமல்லாது காபிர் மாத்திரம் தனித்துச் செயல்படலாகாது என்ற நிபந்தனையுடன் அவர்களுடன் இவ்வியாபார முறையைக் கையாளலாம்.

கூட்டு வியாபாரம் மார்க்கமானதற்குரிய காரணம்

மனிதன் தனது சொத்துக்களை அபிவிருத்தி செய்யும் தேவையுள்ளவன். உடல்பலம், அனுபவம் இல்லாமையினாலோ, மூலதனம் இல்லாமையினாலோ சில வேளை அதனை மேற்கொள்ள முடியாமல் போய்விடுகின்றது. தனியாக மேற்கொள்ள முடியாதளவு பாரிய திட்டங்களின்பால் சமூகம் தேவை கண்டுள்ளது. அதனை கூட்டுவியாபார முறை நிவர்த்திக்கின்றது..

கூட்டுவியாபாரத்தின் வகைகள்

١
கூட்டுடமை
٢
கூட்டுப் பங்காண்மை

கூட்டுடமை இரு வகைப்படும் :

١
சுயவிருப்பின் அடிப்படையில் கூட்டாகுதல்.
٢
கட்டாயத்தின் பேரில் கூட்டாகுதல்

சுயவிருப்பின் அடிப்படையில் கூட்டாகுதல்.

இது இரு கூட்டாளிகளின் செயலிலிருந்து உருவாகக் கூடியதாகும், அதாவது அவர்கள் ஒரு கட்டிடம் அல்லது அசையும் சொத்திலிருந்து ஏதாவது வாங்கும்போது, இருவரும் அதில் உரிமையாளராகி விடுகின்றனர்.

கட்டாயத்தின் பேரில் கூட்டாகுதல் :

இது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களது செயற்பாடுகள் ஏதுமின்றி தரிபடக்கூடி சொத்தைக் குறிக்கும். உதாரணமாக இருவர் ஒன்றை அனந்தரமாகப் பெறும் போது அச்சொத்தில் இருவரும் உரிமையாளராகி விடுகின்றனர்.

கூட்டுடமையில் பங்குதாரர்களின் செயல்நடவடிக்கைகள் :

இரண்டு பங்குதாரர்களில் ஒவ்வொருவரும் மற்றவரது பங்கில் அந்நியவர் போன்றவர்கள், எனவே அவரது அனுமதியின்றி அதில் பரிவர்த்தனை செய்வது கூடாது. மீறி செயல்பட்டால் அவரது பங்கில் மாத்திரமே அது செல்லுபடியாக்கப்படும், எனினும் மற்றவர் அனுமதித்தால் அனைத்திலும் செல்லுபடியாக்கப்படும்.

கூட்டுப் பங்காண்மை :

இது விற்றல், வாங்கல், வாடகைக்கு விடல் போன்ற பரிவர்த்தனைகளில் ஒன்று சேர்தலைக் குறிக்கின்றது.

கூட்டுப் பங்காண்மையின் வகைகள் :

١
முழாரபா கூட்டாண்மை (முதலுக்கும் உழைப்பிற்கும் இடையேயான பங்குடமை)
٢
பெயரளவு கூட்டாண்மை (எவ்வித முதலுமின்றி செல்வாக்கைப் பயன்படுத்தி செய்யப்படும் பங்குடமை)
٣
இனான் கூட்டாண்மை (முதலீடு, தொழில் நிர்வாகம் இரண்டிலும் பங்குடமை)
٤
தொழில் கூட்டாண்மை (மூலதனமின்றி உழைப்பில் கிடைக்கும் லாபத்தில் பங்குடமை)
٥
சமத்துவப் பங்குடமை (பங்குதாரரிடையே முதலீடு, தொழில் நிர்வாகம் இரண்டும் சமமாக இருத்தல்)

முழாரபா கூட்டாண்மை

இது, கிடைக்கும் லாபத்தில் உழைப்பாளிக்கு நான்கில் ஒன்று, அல்லது மூன்றில் ஒன்று போன்ற விகிதாசார முறையில் தீர்மானிக்கப்பட்டு, மிகுதி முதலீட்டாளருக்கு என்ற அடிப்படையில் ஒருவர் முதலீடு செய்ய, மற்றவர் உழைப்பை வழங்கும் வகையில் இரு தரப்பினரிடையே செய்து கொள்ளப்படும் ஒரு கூட்டுறவு உடன்படிக்கையாகும். பரிவர்த்தனை ஆரம்பித்த பின்னர் நட்டம் ஏற்பட்டால் அது லாபத்திலிருந்தே ஈடு செய்யப்படும், உழைப்பாளிக்குப் பாதிப்பேதுமில்லை. அலட்சியமோ, அத்துமீறலோ இன்றி பணத்தை இழந்தால் பங்குதாரரான உழைப்பாளி அதற்குப் பொறுப்பேற்கத் தேவையில்லை. இக்கூட்டாண்மையில் உழைப்பாளியானவர் பணத்தைப் பெறுவதில் நம்பிக்கையாளர், பரிவர்த்தனை செய்வதில் முகவர், உழைப்பில் தொழிலாளி, லாபத்தில் பங்காளியாவார்.

பெயரளவு கூட்டாண்மை :

மக்களிடையே செல்வாக்குள்ள இருவர் எவ்வித முதலுமின்றி தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தவணை அடிப்படையில் ஒரு பொருளை வாங்கி, ரொக்கமாக அதனை விற்று, அதனால் கிடைக்கும் லாபத்தை தமக்கிடையே பகிர்ந்து கொள்ளும் கூட்டுப்பங்காண்மை முறையே ஷரிகதுல் வுஜூஹ் எனப்படும் பெயரளவு கூட்டாண்மையாகும். இந்த அமைப்பில் நட்டம் ஏற்பட்டாலும் இருவரும் அதில் பங்கேற்பர். இதில் ஒவ்வொரு பங்காளியும் மற்றவருக்கு முகவராகவும், கொடுக்கல், வாங்கல் மற்றும் இதர பரிவர்த்தனைகளில் பொறுப்பாளியாகவும் உள்ளனர். மூலதனம் ஏதுமின்றி பெயரளவில் மக்கள் செல்வாக்கிற்காக தவணையடிப்படையில் விற்கப்படுவதாலே இதற்கு ஷரிகதுல் வுஜூஹ் எனும் பெயர் கூறப்படுகின்றது.

இனான் கூட்டாண்மை :

இது இருவர் சேர்ந்துஉழைப்பு மற்றும் பணத்தை முதலீடு செய்து- சமபங்கு இல்லாவிட்டாலும் சரி- இருவரும் தொழில் செய்து வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளல், அல்லது இருவரும் முதலீடு செய்து, ஒருவர் மாத்திரம் உழைத்து, கிடைக்கும் லாபத்தை புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவருக்கு அதிகமாக என்ற ரீதியில் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மை முறையைக் குறிக்கின்றது. இருவரினது மூலதனத்தின் தொகைகளும் குறிப்பாக அறியப்பட்டிருக்க வேண்டும். இலாப, நட்டங்கள் அவரவர் மூலதனத்திற்கேற்ப நிபந்தனை, மனத்திருப்தியின் அடிப்படையில் அமையப்பெற்றிருத்தல் வேண்டும்.

தொழில் கூட்டாண்மை :

இது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் கிடைக்கும் கூலியை தமக்கிடையே பகிர்ந்து கொள்வதென்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கூட்டான்மையாகும். இந்தக் கூட்டமைப்பு கொல்லன், தச்சு போன்ற தொழில்களிலும் இருக்கலாம், விறகு வெட்டுதல், புட்பூண்டுகள் களைதல் போன்ற அனுமதிக்கப்பட்ட வேலைகளாகவும் இருக்கலாம். இதில் கிடைக்கும் லாபத்தை தமக்கிடையே புரிந்துணர்வு, மனத்திருப்தியின் அடிப்படையில் பகிர்ந்து கொள்வர்.

சமத்துவப் பங்குடமை :

இது ஒவ்வொரு பங்குதாரரும் தனது உரிமையாளருக்கு நிறுவனத்தின் விற்பனை, நுகர்வு, எடுத்தல், கொடுத்தல், பொறுப்பு நிற்றல், பொறுப்புச் சாட்டல், கடன், நன்கொடை போன்ற வியாபாரத்திற்குத் தேவையான ஒவ்வொரு நிதி மற்றும் உடல் ரீதியான பரிவர்த்தனை உரிமைகளை ஒப்படைப்பதைக் குறிக்கின்றது.

ஒவ்வொரு கூட்டாளியும் தனது பங்குதாரர் செய்வதற்குப் பொறுப்பாகின்றார். அவர்களது சொத்துக்களில் ஒப்பந்தம் கைச்சாத்தானவற்றில் தான் இந்தக் கூட்டண்மை நிகழும். லாபம் நிபந்தனைகளுக்கமைய அவர்கள் மத்தியில் பகிரப்படும், நட்டம் அவர்களில் ஒவ்வொருவரின் பங்கிற்கமைய கணிக்கப்படும். இந்த கூட்டாண்மை முறை அனுமதிக்கப்பட்டதாகும். இது முன்னர் கூறப்பட்ட ஆகுமான நான்கு கூட்டாண்மை முறைகளையும் ஒருங்கிணைக்கின்றது. ஏனெனில் இம்முறைமையில் வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதில் ஒத்துழைப்பு, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல், நீதம், பொது நலன்களை நிறுவுதல் போன்ற பல நன்மைகள் உள்ளன.

அனுமதிக்கப்பட்ட கூட்டாண்மைகளின் பயன்பாடுகள்

1. செல்வத்தை பெருக்கவும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், சமூகத்திற்கு நன்மை செய்யவும், வாழ்வாதாரத்தை விஸ்தரிக்கவும், நீதியை நிலைநாட்டவும் இது சிறந்த வழியாகும்.

2. வட்டி, சூது போன்ற தடுக்கப்பட்ட சம்பாத்தியத்தை விட்டும் தன்னிறைவடைய வைக்கும்.

3. ஹலாலான சம்பாத்தியத்தின் வட்டத்தை விரிவுபடுத்தல். ஒரு நபர் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் கூட்டாகவோ சம்பாதிக்க இஸ்லாம் அனுமதித்துள்ளது.

கூட்டாண்மை ஒப்பந்தத்தை முறிப்பவை

١
பங்குதாரர்களில் ஒரு தரப்பு கூட்டாண்மையை ரத்துச் செய்தல்
٢
பங்குதாரர்களில் ஒருவரின் மரணம்
٣
பங்குதாரர்களில் ஒருவருக்கு புத்திக் கோளாறு ஏற்படல்
٤
பங்குதாரர்களில் ஒருவர் நீண்ட நாட்களுக்குக் காணாமல் போதல், இதுவும் மரணத்திற்கு சமமானதே.

கூட்டாண்மையின் அடிப்படை அம்சங்கள்

١
இரு பங்குதாரர்கள்
٢
ஒப்பந்தம் செய்யப்படும் விடயம்- இது மூலதனம் அல்லது உழைப்பாகும் அல்லது இரண்டும் கலந்தவை-.
٣
நடைமுறைக்கேற்ற விதத்தில் ஈஜாப், கபூல் ஆகிய திருப்தியை வெளிப்படுத்தும் வார்த்தை.

கூட்டாண்மைகளுக்கான நிபந்தனைகள்

١
இருவரினது மூலதனத்தின் தொகைகளும், பணிகளும் அறியப்பட்டிருக்க வேண்டும்.
٢
பங்காளிகளின் பணத்திற்கு ஏற்ப இலாபம் சத விகிதத்திலோ, நான்கில் ஒன்று, மூன்றிலொன்று போன்றளவு ஒருவருக்கும் மீதி மற்றவருக்கு என்ற அளவு விகிதத்திலோ ஒரு பொதுவான பங்காக அறியப்பட்டதாக இருக்க வேண்டும். ஒருவருக்கும் ஆயிரமும் மீதி மற்றவருக்கும் என்று பொதுவான பங்கின்றி அமையலாகாது.
٣
கூட்டாண்மையின் பணி ஷரியாவால் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் இருக்க வேண்டும். எனவே புகை, போதைப்பொருள், மதுபானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பங்குதாரராகுவதோ, வியாபாரம் செய்வதோ அல்லது சூதாட்ட விடுதிகள், சினிமா நிறுவனங்கள், ஆபாச படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அல்லது வட்டி சார்ந்த வங்கிகள் போன்ற அல்லாஹ்வும், அவனது தூதரும் தடைசெய் செய்த நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தில் ஒரு முஸ்லிம் பங்குதாரராவது கூடாது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்