கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பெண்ணும் நவீன கோசங்களும்

பெண்ணுடன் தொடர்பான முக்கியமான நவீன சிந்தனைகள், அடிப்படைகள், கோசங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • பெண்களின் பிரச்சினைகளைக் அனுகுவதில் இஸ்லாமிய ஷரீஅத்தின் நீதம், மதிநுட்பத்தை வெளிப்படுத்தல்.
  • பெண்களின் பிரச்சினைகளில் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான சமகால கொள்கைகள் மற்றும் யோசனைகளை அறிமுகப்படுத்துதல்.
  • பெண்களின் பிரச்சினைகளை அனுகுவதில் வழிதவறிய சில கோசங்களின் குறைகளைத் தெளிவுபடுத்துதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

புராதன காலங்களில், பண்டைய நாகரீகங்களில் பெண்ணுக்கென எந்தவித மனிதாபிமான, கௌரவமான கண்ணோட்டமும் இருக்கவில்லை. எதிலும் கணக்கிலெடுக்கப்படாத வீணடிக்கப்பட்டவளாகவே இருந்தாள். ஏன் எவ்வித உரிமைகளோ, வாழும் தகுதி கூட இருக்கவில்லை. அவளும் ஒரு மனிதப்பிறவி என்பதையும் பொருட்படுத்தப்படாமல் வாங்கப்பட்டும், விற்கப்பட்டும் வந்தாள். ஆணை விட மிகத் தாழ்ந்த இடத்தில் வைக்கப்பட்டே அவள் பார்க்கப்பட்டாள்.

பெண்ணை இழிவுபடுத்தி, கையாளும் இந்த அணுகுமுறை பல்வேறுபட்ட காலாச்சாரங்கள், நாகரீகங்களிலும் அண்மைக் காலம் வரை தொடர்ந்தது. உலகமும் குறிப்பாக மேற்கு நாடுகளும் ஆளும் பேரரசுகளின் அடக்குமுறை மற்றும் திருச்சபையின் அடக்குமுறையிலிருந்து மாற்றம் மற்றும் விடுதலையின் கட்டத்தைத் தொடங்கினாலும், இந்த மாற்றம் பெண்களுக்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கும் தாமதமாகவே வந்தது.

பெண்களைப் பற்றிய தமது பார்வையில் இந்த சிதைந்த மோசமான சிந்தனை இரண்டு முக்கிய அம்சங்களால் ஆதரிக்கப்பட்டது:

முதலாவது : தத்துவவியல் பக்கம்

பண்டைய நூற்றாண்டுகளில், தத்துவவாதிகள் பெண்களை இகழ்ந்து, சிறுமைப்படுத்தினர். அவளுக்கென எந்த மரியாதையோ, உரிமைகளோ இருப்பதாகக் கருதவில்லை. இந்தத் தத்துவவாதிகளில் ஷாக்ரடீஸ், பிலேடோ, அரிஸ்டோ போன்றோரும் உள்ளனர்.

இரண்டாவது : மதப் பக்கம்

இந்து மதத்தில் ஒரு பெண்ணிற்கு தனது பெற்றோரிடமிருந்து வாரிஸுரிமை கிடையாது. கணவன் மரணித்தால் அவருடன் உடன்கட்டை ஏற வேண்டும். ஏனெனில் அவனுக்குப் பின் அவள் வாழ்வதில் நலவேதுமில்லை. யூத, கிறிஸ்தவ மதங்களில் பெண்களுக்குத் தாழ்ந்த நிலையே இருந்தது. அனைத்துத் தீமைகள், குற்றங்கள், பாவங்களின் பிறப்பிடம் பெண்தான் என சந்தேகிக்கப்படுவதுடன், அவள் ஓர் அசுத்தமானவளாகவே நடத்தப்பட்டாள். இந்த யோசனைகள் அவர்களின் திரிபுபடுத்தப் பட்ட வேதங்கள் மற்றும் மத மாநாடுகளிலிருந்து ஆதரிக்கப்பட்டும், பின்னர் பாதிரியார்கள் மற்றும் திருச்சபையின் அதிகாரத்தாலும் வெளிவந்தன.

நவீன சகாப்தத்தில், பெண்களைப் பற்றிய பல சமூகங்களின் கருத்துக்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் செல்வாக்கு செலுத்திய - மற்றும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கக் கூடிய- நம்பிக்கைகள், கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் பல உருவாகியுள்ளன.

1. நவீனத்துவம் மற்றும் அதற்குப் பின்னால்..

நவீனத்துவம் என்னவென்றால்: மனிதனை இறைச்செய்தியிலிருந்து தனித்துவப்படுத்தி, அவன்தான் பிரபஞ்சத்தின் மையம், மேலும் தனது அறிவால் தான், தனது சூழல் மற்றும் பிரபஞ்சத்திற்குரிய வியாக்கியானங்களை முன்வைக்க அவனால் முடியும் என அறிவிக்கும் முயற்சியே நவீனத்துவமாகும். அதன் பின்னர் வெளிவந்த பெரும்பாலான யோசனைகள், உணர்வுகள் மற்றும் பகுப்பாய்வுகள் நவீனத்துவத்திலிருந்து வெளிப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.

2. பகுத்தறிவு வாதம்

இது மனிதனை பிரபஞ்சத்தின் மையமாகக் கருதுவதற்காக பகுத்தறிவையும், அதன் அளவீடுகளையும் தரமுயர்த்தும் சிந்தனையாகும்.

சுதந்திரம் மற்றும் தனித்துவம்

இது மனிதன் தனக்குப் பொருத்தமானதாகக் கருதும் விதத்தில் அவனது சிவில் விவகாரங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனித உரிமையை வலியுறுத்துவதாகும்.

4. டார்வினிஸம் :

இது மனிதனின் தோற்றம் மற்றும் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் அவன் தற்போதைய வடிவத்தில் இருக்கும் வரை அவனது வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது.

5. பெண் விடுதலை

பெண் பல அநீதி, துன்பங்களுக்கு முகம் கொடுக்கும் நிலை அதிகமாகக் காணப்பட்ட ஐரோப்பாவிலிருந்தே பெண் விடுதலை சிந்தனை தோற்றம் பெற்றது. சுதந்திரம் மற்றும் தேய்ந்துபோன மரபுகளிலிருந்து விடுதலை என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தனது சுதந்திரம் மற்றும் மனிதவியல், சமூகவியல், அரசியல், பொருளதாரம் என பல உரிமைகளை அவள் பெற்றுக் கொண்டாள். இருப்பினும் இந்தக் கோஷங்களுக்கு மத ரீதியாகவோ நெறிப்படுத்தும் பண்பாட்டு ரீதியாகவோ எந்தவொரு வரையறையும் இருக்கவில்லை. எனவே அநீதி, அக்கிரமத்திலிருந்து விடுதலை என்பதற்கல்லாமல், தந்தை அல்லது ஆணாதிக்க அதிகாரத்திலிருந்து விடுதலை என்ற போலிக்காரணத்தின் கீழ் மதம், பண்பாட்டிலிருந்து விடுதலைக்கான கோஷங்களாகவே இவை மாறின.

மதச்சார்பின்மையும் பெண் விடுதலையும்

பெண் விடுதலையின் கருத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் மற்றும் அழைப்புகள்: அனைத்து வாழ்க்கை விவகாரங்களிலிருந்தும் மதத்தைப் பிரித்தல், மற்றும் மதச்சார்பின்மையை ஒரு வாழ்க்கை முறையாகப் பயன்படுத்துதல். பெண்ணின் அபிலாஷைகளைத் தடுக்கும் எல்லாவற்றிலிருந்தும்- குறிப்பாக மதக் கட்டுப்பாடுகள் மற்றும் போதனைகள்- அதன் விடுதலைக்கு அழைப்பு விடுப்பதினூடாக இந்த கருத்து மதச்சார்பின்மையுடன் தொடர்புபடுகின்றது.

6. மதச்சார்பின்மை :

இது வாழ்க்கை விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்துயும் மதத்திலிருந்து பிரிப்பதும், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற பல துறைகளிலும் மனித செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் மேற்கோளாக மனிதனையே ஆக்குவதுமாகும்.

7. இரு பாலருக்குமிடையிலான சமத்துவம் :

இது கல்வியுரிமை, பணி, சிவில் சட்டங்கள், அரசியல் போன்ற உரிமைகளில் ஆண், பெண் இரு பாலருக்குமிடையில் சமத்துத்துவம் வழங்கி, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குதலைக் குறிக்கின்றது. இருப்பினும் ஆண், பெண்ணுக்கிடையிலான வேறுபாட்டில் கவனம் செலுத்தாத சமத்துவத்திற்கான அழைப்பாக மாறிவிடும்வகையில் சமத்துவக் கோரிக்கைகள் அவற்றின் அடிப்படைப் பாதையை விட்டும் விலகி விட்டன, இயல்பிலேயே அவர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒத்ததாக ஆக்கும் விதத்திலேயே இந்தக் கோரிக்கை உள்ளது. எனவே வேறுபாடான இயல்புகளைக் கொண்ட இரு பிரிவிற்கிடையிலான சமத்துவத்திற்கு அழைப்பு விடுப்பதாக இது மாறி விட்டது.

8. பெண்ணியம்

பெண் விடுதலை பெற்று, இரு பாலருக்குமிடையே சமத்துவத்தை வேண்டும் என்ற சிந்தனைக்கு "பெண்ணிய சிந்தனை" எனப்படுகின்றது. இந்த சிந்தனையிலிருந்து பல அறிவுசார், கருத்தியல், அரசியல், சமூக மற்றும் பிற நடவடிக்கைகளை கடைபிடிக்கும் இயக்கங்கள் தோன்றின. பெண்ணிய சிந்தனை, அதன் பல்வேறு செயல்பாடுகளுடன், பல கொள்கைகளிலிருந்து வெளிப்படும் பல யோசனைகளையும் நடைமுறைகளையும் ஒருங்கிணைக்க முயன்றது.

பெண்ணிய சிந்தனை சார்ந்திருக்கும் அடிப்படைகள்

١
முழுமையான சுதந்திரம் : இது குடும்பத்தின் அடிப்படையிலல்லாமல், தனிநபரை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட முழுமையான சுதந்திரம்,
٢
ஆண், பெண் என்ற கருத்துக்களை ஓரங்கட்டுவதற்கு பாலினங்களுக்கிடையிலான உறவை வரையறுக்க பொதுவாக பாலினம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது.
٣
ஒரு பெண் தனது உடலுக்கு உரிமை கொண்டாடுதல். கட்டுப்பாடுகள் அல்லதுவிதிமுறைகள் இல்லாமல் அவள் விரும்பியதைச் செய்வதற்கான முழு உரிமையும் அவளுக்கு உள்ளது என்ற கருத்து.
٤
ஆணாதிக்க அதிகாரத்தை நிராகரிப்பதன் மூலம் குடும்பத்தில் தந்தையின் பங்கை ஒழித்தல்
٥
சில பெண்ணிய இயக்கங்கள் மூலம் ஓரினச்சேர்க்கை, கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குதல், உலகியல் மற்றும் கொள்கை ரீதியான பண்பாடுகள், மனித இயல்புகளைத் தகர்த்தெறியும் சிந்தனைகள் போன்றவற்றுக்கு அழைப்பு விடுத்தல்.

பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (CEDAW)

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்காக 1979 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கைக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளித்ததன் மூலம் பெண்கள் உரிமை அமைப்புகளும் பெண்ணிய அமைப்புகளும் அரசியல் ஆதரவை நாடின, இதுவே CEDAW ஒப்பந்தமாகும் ஆகும்.

CEDAW இன் சாராம்சம்

அரசியல், பொருளாதாரம், சமூகம், விளையாட்டு, சட்டம் மற்றும் இவை போன்ற அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான முழுமையான சமத்துவம் மற்றும் சமச்சீர்மையே அதன் கொள்கையாகும். இது தவறான ஒரு கொள்கையாகும். அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் வெளிப்படையான வசனங்களுக்கும், ஆரோக்கியமான பகுத்தறிவு அழாகக் கண்ட, நேர்மையான உள்ளுணர்வு உறுதிப்படுத்தியவற்றுக்கும் முரணான கொள்கையாகும். "ஆண் பெண்ணைப் போன்றல்ல" (ஆல இம்ரான்: 36), "ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்" (நிஸா : 34), "ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு" (பகரா : 228) போன்ற இறைவசனங்களுக்கு இக்கொள்கை முரண்படுகின்றது, ''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.., ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்'' (புஹாரி 893, முஸ்லிம் 1829) என்ற நபிமொழிக்கும் இக்கொள்கை முரண்படுகின்றது. புரிதல்களில் உறுதியான விடயத்திற்கு இக்கொள்கை முரண்படுவது பற்றி அதிக விளக்கம் தேவையில்லை, ஏனென்றால் உடலியல் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகள் வாழ்க்கையின் செயல்பாடுகளிலும் வேறுபாடுகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு அடிப்படையாகும். எனவே முழுமையான சமத்துவத்தையும் சமச்சீர்நிலையையும் அடைவது ஆண் மற்றும் பெண் படைப்பின் அடிப்படைத் தோற்றத்திற்கே முரணானதாகும்.

CEDAW வும் ஆண், பெண்களுக்கு இடையிலான விரோதப் போக்கும்

CEDAW மற்றும் பெண்ணிய இயக்கங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவை போட்டி மற்றும் வரலாற்று மோதலுக்கு முடிவுகட்ட விரும்பும் உறவாக சித்தரிக்கின்றன. அதற்குரிய ஒரே வழி ஆண், பெண்ணிற்கிடையிலான முழுமையான சமத்துவமாகும். மற்றும் ஒரு ஆண் அதிக பங்கை எடுத்துக் கொண்டால், அது பெண்ணின் இழப்பில் என்று நம்பும் ஒரு மோசமான மனநிலையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு குறுகிய பார்வை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு என்பது போட்டி மற்றும் விரோதம் அல்ல, நிரப்புத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒன்றாகும். வாழ்க்கையை செழிப்பாக்கி, மக்களுக்கு மத்தியிலான அறிமுகம், இரக்கம், கருணை, இனப் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதிலும் இரு தரப்பினருப்பும் முழுமையான பங்களிப்பும், கடமைகளும் உண்டு. அல்லாஹ் கூறுகின்றான் : "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்". (ஹுஜுராத் : 13), மேலும் கூறுகின்றான் : "இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன". (ரூம் : 21). மேலும், வாழ்க்கைப் பாத்திரங்களில் உள்ள வேறுபாடு அநீதி அல்லது பாரபட்சம் இல்லாமல் உரிமைகள் மற்றும் கடமைகளில் வேறுபாட்டை வேண்டிநிற்கின்றது, ஏனெனில் ஒவ்வொரு கூடுதல் கடமையும் கூடுதல் உரிமையுடன் பொருந்துகிறது, இதுவே நீதியாகும்.

ஆண், பெண் இரு பாலருக்கும் இடையே சமத்துவத்தின்பால் இஸ்லாம் அழைக்கின்றதா?

இஸ்லாம் பெண்களுக்கு எதிராக அல்லாமல் அவர்களுக்கு சார்பான நேர்மறையான பாகுபாட்டை ஆதரிக்கின்றது, தோற்றம், படைப்பினத்தின் கண்ணியம், பொறுப்பு, மார்க்கம் எனும் அமானிதத்தை சுமத்தல், ஈருலக கூலிகள் ஆகியவற்றில் சமத்துவத்தை நிலைநாட்டுவதுடன், ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியர் இருக்கும் போது அவர்களுக்கிடையில் சமத்துவம், மார்க்க சின்னங்களை நடைமுறைப் படுத்தல், மார்க்க சட்டத்திற்குக் கட்டுப்படல், உயர்ந்த நெறிமுறைகள் போன்றவற்றிலும் இஸ்லாம் சமத்துவத்தைப் அமுல்படுத்துகின்றது. பின்னர் ஆண்களிடமிருந்து பெண்கள் பல்வேறு உடலியல் செயல்பாடுகளில் வேறுபடுவதன் காரணமாக சில விடயங்களில் நேர்மறையாக வேறுபடுத்த முடிவு செய்துள்ளது. பெண் என்ற ரீதியில் அவளின் பலவீனமான அமைப்பு காரணமாக ஜிஹாத் அவள் மீது கடமையில்லை. அவளுக்கு ஏற்படும் மாதவிடாய், பிரசவ இரத்தம் போன்ற சில அசௌகரியங்களின் போது அவள் தொழுவதில்லை, நோன்பு நோற்பதில்லை. அவள் வசதியுடனிருந்தாலும் குடும்பத்திற்காக செலவு செய்யும்படி கட்டாயப்படுத்தவில்லை. மறுபுறம் ஆண் மீது ஜிஹாத் விதியாக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திற்காக செலவு செய்வது ஆணின் மீது கட்டாயம், அதை மறுத்தால், அலட்சியப்படுத்தினால் தண்டிக்கப்படுவான். இந்த மேலதிகக் கடமைகளுக்கு நிகராக அவனுக்கு மேலதிக உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே சரியான நீதியாகும்.

பாகப்பிரிவினையில் (சொத்துப் பங்கீடு) இஸ்லாத்தின் நீதம்

பாகப்பிரிவினையில் (சொத்துப் பங்கீட்டில்) கூட இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கு அநீதியிழைக்கப்படவில்லை. ஏனெனில் அவள் சிலவேளை ஆணை விடக் குறைவாகவும், வேறு சிலவேளை சம பங்கும், இன்னும் சில வேளை ஆணை விட அதிகமாகவும் பெறுகின்றாள். மற்றும் சில சந்தர்ப்பத்தில் அவளுக்குக் கிடைக்கின்றது, ஆணுக்குக் கிடைப்பதில்லை. இவையனைத்தும் அல்லாஹ் அறிந்து வைத்துள்ள சில மதிநுட்பங்களுக்காக வேண்டியாகும். இதன் விபரங்கள் மார்க்க சட்ட நூல்களில் உள்ளன.

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தும் வடிவங்கள் சில

இஸ்லாத்தில் பெண் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுபவளாகும், அல்லாஹ் கூறுகின்றான் : "எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்". ((g)காஃபிர் : 40), நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : "பெண்கள் ஆண்களின் சகோதரிகளே". (திர்மிதி 113) அவளுடைய பொறுப்பாளி தந்தை அல்லது கணவன் மீது அவளுக்கு தங்குமிட வசதி, செலவுகள் வழங்குவது கடமையாகும். அவள் எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் மனமுவந்து வழங்கினாலே தவிர ஒரு ரூபாய் கூட அவள் செலவு செய்ய வேண்டியதில்லை, அதேநேரம் ஆணைப் போன்றே அவளும் சொத்துடமைக்குக் தகுதியுள்ளவளாவாள். தந்தையோ கணவனோ யாருக்கும் அவள் மீது பண அதிகாரம் பிரயோகிக்க முடியாது. விற்றல், வாங்கல், வாடகைக்கு விடல், கூட்டுப் பங்குடமை, அடகு வைத்தல், பங்கீடு செய்தல், பணப்பரிவர்த்தனை பற்றிய சிக்கல்களில் ஏற்றுக் கொள்ளும் உரிமை, பொறுப்பு நிற்றல், இணக்காப்பாடு ஏற்படுத்தல் போன்ற அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் உரிமை அவளுக்குண்டு,

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்