கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் குழந்தைகளின் உரிமைகள்

பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இப்பாடத்தில் கற்போம்.

  • குழந்தைப் பாக்கியம் மூலம் பெற்றோருக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருளை விளக்குதல்.
  • குழந்தை வளர்ப்பில் இஸ்லாம் எடுத்துள்ள கரிசனையை விளக்குதல்.
  • பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை அறியத்தருதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

தமது சந்ததி கடைக்க வேண்டும், அச்சந்ததி குறைகளற்ற, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற ஆசையை அல்லாஹ் தாய், தந்தையரின் உள்ளங்களில் இயல்பாகவே வைத்துள்ளான். இதுவே எமது முதற்தந்தை ஆதம் (அலை), அவருடைய மனைவியுடைய ஆசையாகவும் இருந்தது. அல்லாஹ் கூறுகின்றான் : "அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், “(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்". (அஃராப் : 189). இப்பாக்கியம் நிறைவேறுவது எப்போதுமே நன்றி செலுத்த வேண்டிய முழுக்க முழுக்க அல்லாஹ்வின் அருளாகவும், கொடையாகவுமே உள்ளது.

சந்ததிகள், அது தொடர்பான விடயங்களில் இஸ்லாம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. குழந்தைப் பாக்கியம், சந்ததி பற்றி வானங்கள், பூமியின் அதிகாரத்துடன் இணைக்கப்பட்டு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது இதனை சுட்டிக்காட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்”. (ஷூரா : 49, 50). அல்லாஹ் இவ்வுலகின் அலங்காரமாக குழந்தைப் பாக்கியத்தைக் கணித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன". (கஹ்ப் : 46).

குழந்தைகளுக்கும், அவர்களை வளர்ப்பதற்கும் இஸ்லாம் பாரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கின்றது. அவர்கள்தான் எதிர்காலத் தூண்கள், அவர்களது சீர்திருத்தத்தின் மூலம் இப்பூமியில் அல்லாஹ்வுக்கான அடிமைத்துவம் நீடிக்கின்றது. அவனைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இப்பூமியின் பரிபாலணம் அமைகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்". (தஹ்ரீம் : 06). அதாவது, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, ஒழுக்கமூட்டுங்கள் என அலீ (ரலி) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கமளித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரண்டு பெண் பிள்ளைகளை அவர்கள் பரவமடையும் வரை சிறந்த முறையில் வளர்த்தவர்கள் மறுமையில் என்னுடன் நெருக்கமாக வருவார்" எனக் கூறி தனது விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (முஸ்லிம் 2631).

குழந்தைகளின் உரிமைகள் இரண்டு வழிகளில் உள்ளன

١
பொருளியல் உரிமைகள்
٢
தார்மீக உரிமைகள்

பொருளியல் உரிமைகள்

இந்த உரிமைகளில் வீடு, உணவு, பானம், உடை, சுகாதாரப் பாதுகாப்பு, ஷரியா விதித்துள்ள முறையில் குழந்தைகளுக்குச் செலவு செய்தல் ஆகியவை அடங்கும். இவை சக்திக்குட்பட்டவாறு தந்தை மீது கடமையாகும்.

தார்மீகக் உரிமைகள்

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய தார்மீக கடமைகளில் மிக மகத்தானது அவர்களை சரியான மார்க்கத்தின் அடிப்படையில் அமையும் நல்ல வளர்ப்பாக வளர்ப்பதாகும். எனவே அவர்களுக்கு அல்குர்ஆனையும் சஹிஹான ஹதீஸ்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறையும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், அத்துடன் அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்தும், விலக்கல்களை தவிர்ந்தும் கொள்வது மூலமும் , நற்குணங்களை கடைபிடிப்பது மூலமும் நல்ல இஸ்லாமிய போதனைகள் அடிப்படையில் அவர்களை வளர்க்க வேண்டும் இவை அனைத்தும் அல்லாஹ்வை முழுமையாக கண்ணியப்படுத்தி, அவனையும், அவனது நபி, அவனது மார்க்கம், சட்ட திட்டங்களை நேசிப்பதுடன் தான் அமைய வேண்டும்.

குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுவது அவர்களை முறையாக வளர்த்து, அவர்களது அறிவுக் கண்களை திறந்து விடுவதில் பாரிய பங்களிப்பு செய்கிறது. இது அவர்களின் வாழ்க்கையில் தீவிரமான நடத்தையை பாதிக்கும் அளவுக்கு மீறிய செல்லத்திற்கு வழிவகுக்காது இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கருணை மற்றும் பரிவு இல்லாமை, அவர்களை வன்மையாகவும் கடுமையாகவும் நடத்துதல், அல்லது பெற்றோரின் புறக்கணிப்புக்கு ஆளாதல் போன்றன அவர்களின் ஆன்மாவை இருளடையச் செய்து, அவர்களின் மனதில் உள்ள புத்திசாலித்தனத்தின் சுடரை அணைத்து, கீழ்ப்படியாமை மற்றும் கிளர்ச்சிக்கு அவர்களைத் தூண்டும். சிலவேளை வழிதவறிச் செல்லல் மற்றும் ஊழலுக்கும் அவர்களை அது இட்டுச் செல்லும்..

குடும்பத்தில் அமைதி, நிம்மதி மற்றும் பாசம் நிறைந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்கள் மீதுள்ள தார்மீகக் கடமைகளில் உள்ளதாகும். பெற்றோர் அல்லது மூத்த சகோதரர்களின் சண்டை மேலோங்காமலிருக்க வேண்டும். ஏனெனில் இது சிறார்களின் நடத்தையை பாதிக்கிறது, மற்றும் அவர்களை பதட்டமான மற்றும் கலக்கமான சூழ்நிலையில் வைக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல நட்புவட்டாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும், மோசமான நடத்தை அல்லது கண்டிக்கத்தக்க பழக்கவழக்கங்களுடைய நண்பர்களுடன் சேராமல் பார்த்துக் கொள்வதும் அவர்களது தார்மீகக் கடமைகளுள் உள்ளதாகும். ஏனெனில் அது அவர்களது நடத்தைப் பாதித்து, அவர்களுடைய தீய குணங்கள் இவர்களையும் தொற்றிக் கொள்ளும்.

ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிநடத்துதல்.

தமது பிள்ளைகளின் நிலைமைகளைக் கண்டறிந்து, அவர்களின் நடத்தை மற்றும் நடவடிக்கையை தொடர்ந்து அவதானித்து, தேவையேற்படும் போது அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிநடத்துதல்.பெற்றோர் மீது கடமையாகும். ஆனால் வழிகாட்டுதல் மற்றும் கருத்துக் கூறல் இடைவிடாமல் தொடர்ச்சியாக, சிறியது, பெரியது எல்லாவற்றுக்குமோ இருக்கக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் இது குழந்தையை பெற்றோரின் பேச்சைக் கேட்பதில் அல்லது அவரது ஆலோசனையின்படி செயல்படுவதில் சலிப்படைய வைக்கிறது. எனவே, தந்தையும் தாயும் ஆலோசனை மற்றும் கருத்துக் கூறலுக்குப் பொருத்தமான நேரம், நிலை மற்றும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குழந்தைகளின் உரிமைகள்

١
பொருத்தமான தம்பதித் தெரிவினூடாக குழந்தைகளின் உரிமைகள் அவர்கள் பிறக்க முன்னரே ஆரம்பிக்கின்றது.
٢
குழந்தைகளின் இருப்பு மற்றும் வாழ்வுரிமை.
٣
குழந்தைகளின் குடும்ப உரிமை
٤
குழந்தைகளின் பால்குடியுரிமை
٥
அழகிய பெயர் வைப்பதில் குழந்தைகளின் உரிமை
٦
அகீகாவில் குழந்தைகளின் உரிமை
٧
நீதம் செலுத்துவதில் குழந்தைகளின் உரிமை
٨
பிரார்த்தனையில் குழந்தைகளின் உரிமைகள்

மார்க்கப்பற்றுள்ள தம்பதியினரை முறையாகத் தேர்ந்தெடுத்தல்.

தனது குழந்தைகளுக்கு சிறந்த தாயாகவும், தனக்கு சிறந்த மனைவியாகவும் இருப்பாள் எனக் கருதும் ஒரு பெண்ணையே ஆண் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோன்று தனது குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருப்பான் எனக் கருதும் ஓர் ஆணையே பெண் தேர்ந்தெடுக்க வேண்டும்.

குழந்தைகளின் இருப்பு மற்றும் வாழ்வுரிமை

١
குழந்தைகளைக் கொல்வதை மார்க்கம் ஹராமாக்கியுள்ளது. இது அறியாமைக் கால மக்கள் வறுமை, இழிவுக்குப் பயந்து செய்து கொண்டிருந்த செயலாகும்.
٢
குழந்தை பெறுவதிலிருந்து முழுமையாகத் தவிர்ந்து கொள்வதை மார்க்கம் ஹராமாக்கியுள்ளது.
٣
கருக்கலைப்பு, சிசு உருவான பின் அதனை அழிப்பதை மார்க்கம் ஹராமாக்கியுள்ளது.

குழந்தைகளின் குடும்ப உரிமை

இரத்த உறவு ரீதியாக குழந்தைக்குத் தனது தந்தையுடன் இணைந்து கொள்ளும் உரிமையுண்டு. ஏனென்றால், குழந்தைகள் தொடர்பான அனைத்து பொருள் மற்றும் தார்மீக உரிமைகளும் இந்த உரிமையுடனே இணைக்கப்பட்டுள்ளன. எனவே ஐயத்திற்கிடமில்லாத முறையான சாட்சியின்றி ஒரு தந்தை குழந்தையை விட்டும் விலகி இருக்கவோ, தனது குழந்தையை மறுக்கவோ முடியாது

குழந்தைகளின் பால்குடியுரிமை

இந்த பாலூட்டலின் ஆரோக்கியம், உளவியல் மற்றும் சமூக நன்மைகள் பல நவீன அறிவியலில் நிரூபிக்கப்பட்டுள்ளன. குழந்தையின் தேவை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும். அதன் நல்ல உளவியல் மற்றும் மன உருவாக்கத்திற்கும் இது மிகவும் பொருத்தமானதாகவும், முழுமையானதாகவும் உள்ளது. இது எதிர்காலத்தில் புத்திசாலித்தனம், உடல் மற்றும் மன நடத்தை, சூழ்நிலைகள், உணர்வுகளுடன் நல்ல, சரியான தொடர்பு ஏற்படுவதில் தாக்கம் செலுத்துகின்றது.

அழகிய பெயர் வைப்பதில் குழந்தைகளின் உரிமை

இது இரண்டாம் நிலை உரிமையல்ல, மாறாக நபி (ஸல்) அவர்கள் தோழர்களை ஆர்வமூட்டிய பிரதான கடமையில் உள்ளதாகும். எதிர்மறை அர்த்தமுள்ள பெயர்களைத் தவிர்க்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தில் இணைந்ததன் பின் தோழர்கள் சிலரின் பெயர்களை ஆளுமை, மற்றும் நடத்தைகளில் தாக்கம் செலுத்துவதால் மாற்றியுள்ளமை இவ்விடயத்தில் அன்னாருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டுகின்றது.

அகீகாவில் குழந்தைகளின் உரிமை

இது பிறந்த குழைந்தைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் அறுக்கப்படும் வணக்கத்தைக் குறிக்கின்றது. ''ஒவ்வொரு குழந்தையும் அதன் ஆகீகாவுக்குப் பிணையாக வைக்கப்பட்டுள்ளது. அதன் சார்பாக அது பிறந்த ஏழாவது நாளில் குர்பானி கொடுக்கப்பட வேண்டும். அதன் தலையை மழித்து அதற்குப் பெயர் சூட்ட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 2838). மேலும், ''ஆண் குழந்தைக்காக பொருத்தமான இரு ஆடுகளும், பெண் பிள்ளைக்காக ஓராடும் அறுக்கப்பட வேண்டும்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 2834).

நீதம் செலுத்துவதில் குழந்தைகளின் உரிமை

இது உளவியல், மற்றும் பொருளியல் இரண்டிலும் ஆண், பெண் வேறுபாடின்றி அமைய வேண்டும். நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்: (நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பிவந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள்.(புஹாரி 2587, முஸ்லிம் 1623).

அவர்களுக்காகப் பிரார்த்தித்தல், அவர்களுக்கெதிராக பிரார்த்திக்காதிருத்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மூன்று பிரார்த்தனைகள் உள்ளன, அவற்றுக்கு சந்தேகமின்றி பதிலளிக்கப்படும். அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, பயணியின் பிரார்த்தனை, தந்தை தனது பிள்ளைக்காகக் கேற்கும் பிரார்த்தனை". (இப்னு மாஜா 3862). மேலும் கூறினார்கள் : "நீங்கள் உங்களுக்கு எதிராக பிரார்த்திக்க வேண்டாம், உமது குழந்தைகளுக்கு எதிராக பிரார்த்திக்க வேண்டாம், உமது உடமைகளுக்கு எதிராகப் பிரார்த்திக்க வேண்டாம். அல்லாஹ்விடம் கேட்பதெல்லாம் கொடுக்கப்படும் ஒரு நேரத்தில் இவ்வாறான பிரார்த்தனைகள் மூலம் நேர்பட வேண்டாம், அப்போது அதற்கும் பதிலளிக்கப்படும்". (முஸ்லிம் 3009).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்