கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு

முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு தொடர்பான முக்கிய சில விடயங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • ஆடையமைப்பு, அலங்காரம் தொடர்பான அல்லாஹ்வின் அருட்கொடையை அறிதல்.
  • பெண்ணின் ஆடையமைப்பு தொடர்பான இஸ்லாமிய ஷரீஅத்தின் மதிநுட்பங்கள் சிலதை அறிதல்.
  • இஸ்லாமிய ஹிஜாபில் அவசியம் பேண வேண்டிய நிபந்தனைகளை அறிதல்.
  • பல்வேறுபட்ட மக்கள் முன்னிலையில் ஒரு முஸ்லிம் பெண் வெளிப்படுத்த முடியுமான வரையறைகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஆடையெனும் அருட்கொடை

ஆடையென்பது அல்லாஹ் மக்களுக்கு அளித்துள்ள பேரருளாகும். அதனைக் கொண்டே மனிதன் தனது உடலை மறைக்கின்றான், வெப்பம், குளிரிலிருந்து பாதுகாப்பு எடுக்கின்றான். அதேபோன்று அது அலங்காரமாகவும் உள்ளது.அல்லாஹ் கூறுகின்றான் : "ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக". (அஃராப் : 26). ஆடையமைப்பில் ஆண், பெண் இரு பாலரும் அவசியம் மறைக்க வேண்டியளவும் உள்ளது. திருமணம், பெருநாள் தினம் போன்ற விஷேட நிகழ்வுகளின் போது அழகு, அலங்காரத்திற்காக அணியும் அளவும் உள்ளது.

பெண்களின் ஆடை தொடர்பான ஷரியா தீர்ப்புகள் பெரும் இலக்குகளை அடைகின்றன. ஒருபுறம், பெண்கள் தனியுரிமையை அடைகிறார்கள், ஆண்களின் பார்வைகளிலிருந்தும், - பெரும்பாலும் - கயவர்களின் செயல்கள் மற்றும் வார்த்தைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்கள். அத்துடன் இஸ்லாமிய உடை பெண்ணுக்கு உறுதியையும், அமைதியையும், கண்ணியத்தையும், தனித்துவத்தையும் தருகிறது. இவையனைத்திற்கும் முன்னர் ஒரு பெண் இஸ்லாமிய ஆடையமைப்பைக் கடைபிடிப்பதன் மூலம் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு, விலக்கலைத் தவிர்ந்து கொண்டு அல்லாஹ்வுக்குத் தனது அடிமைத் தனத்தையும், பணிவையும் வெளிப்படுத்துகின்றாள், அதனால் அல்லாஹ்வின் பரகத், தயாளம், அருளைப் பெற்றுக்கொள்கின்றாள்.

சமூக மட்டத்தில் பெண்ணின் இஸ்லாமிய ஆடையமைப்பு அல்லது அவளது ஹிஜாப் சலனங்களிலிருந்து ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதுகாக்கின்றது, மற்றும் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் நிலைத்திருக்கச் செய்கின்றது. சலனங்கள் ஏற்பட்டால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சமுதாயத்தை அதன் அனைத்து கூறுகளாலும் அழித்துவிடும். இதன் விளைவாக, குடும்பத்தின் ஒருங்கிணைப்பு, அதன் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி ஆட்டம் கண்டு, சிதறடிக்கப்படலாம். சிலவேளை பூண்டோடு அழியவும் கூடும். அதிகமான நாடுகளில் இது கண்கூடாக அவதானிக்கப்படுகின்றது.

முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பின் நிபந்தனைகள்

١
சில அறிஞர்களின் கூற்றுப்படி முழு உடலையும், வேறு சில அறிஞர்களின் கூற்றுப்படி முகம் மற்றும் இரு உள்ளங்கைகளைத் தவிர இதர பகுதிகளை மறைக்க வேண்டும்.
٢
வெளியில் அலங்காரமான ஆடையாக இருக்கக் கூடாது
٣
ஆடை அதற்கு உள்ளிருப்பவற்றை வர்ணிக்காத அளவு கனமானதாக இருக்க வேண்டும்.
٤
அவளது உடலமைப்பைக் காட்டக் கூடியதாக இல்லாமல், இறுக்கமில்லாத தளர்வான ஆடையாக இருத்தல் வேண்டும்.
٥
வாசனைத் திரவியங்கள் இடப்பட்டதாக ஆடை இருக்கக் கூடாது.
٦
ஆடவர்களின் ஆடையை ஒத்திருக்கக் கூடாது
٧
மாற்று மதப் பெண்களின் ஆடையமைப்பை ஒத்திருக்கக் கூடாது
٨
தனியாக எடுத்துக் காட்டும் வகையில் பிரபலமான ஆடைகளாக இருக்கக் கூடாது

1. உடலையும் மறைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : "நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்". (அஹ்ஸாப் : 59).முகம், இரு உள்ளங்கைகளை மறைப்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடுபட்டுள்ளனர். சிலர் அவசியமென்றும், வேறு சிலர் விரும்பத்தக்கதென்றும் கூறுகின்றனர். எனினும் இதர பகுதிகளை மறைக்க வேண்டுமென்பதில் அவர்கள் அனைவரும் ஏகோபித்துள்ளனர்.

2. வெளியில் அலங்காரமான ஆடையாக இருக்கக் கூடாது

இது பின்வரும் : "தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது". (நூர் : 31) என்ற பொதுவான வசனத்திற்குள் அடங்குகின்றது.

3, 4ஆடை அதற்கு உள்ளிருப்பவற்றை வர்ணிக்காத அளவு கனமானதாகவும், இறுக்கமில்லாத தளர்வானதாகவும் இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.". (முஸ்லிம் 2128). உஸாமா (ரலி) கூறுகின்றார் : திஹ்யதுல் கல்பீ என்ற நபித்தோழர் அன்பளிப்புச் செய்த எகிப்தில் நைய்யப்படும் குப்தி வகையைச் சேர்ந்த கனமான ஆடையொன்றை நபி (ஸல்) அவர்கள் எனக்கு உடுத்தினார்கள். அதனை நான் எனது மனைவிக்கு உடுத்தினேன். நபியவர்கள் ஒரு போது "நீர் ஏன் அந்த குப்திய்யாவை அணியவில்லை?" என வினவினார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் அதனை எனது மனைவிக்கு உடுத்தினேன் எனக் கூறினேன். அப்போது நபியவர்கள் "அதனுடன் உள்ளாடை ஒன்றையும் அணிந்து கொள்ளுமாறு அவளுக்கு நீர் ஏவுவீராக. ஏனெனில் அது அவளுடைய உடற்கட்டமைப்பை வெளிப்படுத்தும் என நான் அஞ்சுகிறேன்" எனக் கூறினார்கள். (அஹ்மத் 21786).

5. வாசனைத் திரவியங்கள் இடப்பட்டதாக ஆடை இருக்கக் கூடாது,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எந்தப் பெண் வாசனைத் திரவியம் இட்டுக்கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர்வதற்காக ஒரு ஆடவர் கூட்டத்தைத் தாண்டிச் செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள்". (நஸாஈ 5141).

6. ஆடவர்களின் ஆடையை ஒத்திருக்கக் கூடாது.

"பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்" . (புஹாரி 5885) என நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.

7. மாற்று மதப் பெண்களின் ஆடையமைப்பை ஒத்திருக்கக் கூடாது,

முஸ்லிம்களில் ஆண்கள், பெண்கள் எவரும் காபிர்களுக்கு அவர்களது வணக்க வழிபாடுகளிலையோ, பெருநாள்களிலையோ, அவர்களது பிரத்தியேக ஆடைகளிலையோ ஒப்பாகக் கூடாது என்பதே இஸ்லாமிய ஷரீஅத்தின் நிலையான சட்டமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் இன்னொரு சமூகத்திற்கு ஒப்பாகிறாரோ அவர் அச்சமூகத்தையே சார்ந்தவராவார்". (அபூ தாவூத் 4031).

8. தனியாக எடுத்துக் காட்டும் வகையில் பிரபலமான ஆடைகளாக இருக்கக் கூடாது,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உலகில் பிரபலமான ஆடை அணிபவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு மூட்டப்பட்டு எரிக்கப் படுவான்". (இப்னு மாஜா 3628) . பிரபலமான ஆடை என்பது : பிரபலத்தை விரும்பி, மக்களிடையே தனியாக எடுத்துக் காட்டும் வகையில் அணியப்படும் ஆடையாகும்.

முன்னர் கூறப்பட்ட நிபந்தனைகள் முஸ்லிம் பின் வீட்டிலிருந்து வெளியேறும் போதும், அன்னிய ஆடவர்களை சந்திக்க நேரிடும் போதும் பேணப்பட வேண்டியவையே, ஆடவர்களில் அவளுக்குத் திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட நெருங்கிய உறவுக்காரர் முன்னிலையிலோ, ஏனைய பெண்களைச் சந்திக்கும் போதோ இதனை அமுல்படுத்த வேண்டிய அவசிமில்லை. வரையறைக்குட்பட்ட முறையில் நறுமணம் பூசுதல், தன்னை அலங்கரித்துக் கொள்ளல் போன்றன அவளுக்கு இந்நிலையில் ஆகும்.

தபர்ருஜ்" (வெளியேறிச் செல்லுதல்)

இது ஒரு பெண் தனது அலங்காரம், அழகு, தான் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகளை ஆடவர்களுக்கு வெளிப்படுத்துதலைக் குறிக்கும் சொல்லாகும்.

தன்னைச் சூழ உள்ளவர்களைக் கவனத்திற் கொள்ளும் போது ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு

١
அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு
٢
திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட உறவுக்கார ஆடவர் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு
٣
பிற முஸ்லிம் பெண்களின் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு
٤
யூத, கிறிஸ்தவ பெண்கள் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு

அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு

ஏற்கனவே கூறப்பட்ட நிபந்தனைகளுக்கமைய இஸ்லாமிய ஷரீஅத்தில் பரிந்துரைக்கப்பட ஹிஜாப் முறையிலான முழு உடலையும் மறைக்கும் வகையிலான ஆடையாக இருக்க வேண்டும்.

திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட உறவுக்கார ஆடவர் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு

முகம், இரு கரங்களைத் தாண்டி பிடறி, முடி, இரு பாதங்கள் போன்றஇயல்பாக வெளியாகக் கூடிய பகுதிகளைத் தவிர முழு உடலையும் மறைக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; ". (நூர் : 31).

பிற முஸ்லிம் பெண்களின் முன்னிலையில் முஸ்லிம் பெண்ணின் ஆடையமைப்பு

திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட உறவுக்கார ஆடவர் போன்றே இவர்களுக்கு முன்னிலையிலும் இயல்பாக வெளியாகுவதைத் தவிர முழு உடலையும் மறைக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்..... இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; ". (நூர் : 31). இங்கு தங்கள் பெண்கள் என்பது முஸ்லிம் பெண்களையே குறிக்கின்றது.

யூத, கிறிஸ்தவ பெண்கள் முன்னிலையில் ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி

முஸ்லிம் பெண்களைப் போன்றே இவர்களதும் சட்டமாகும். முகம், இரு கரங்களைத் தாண்டி பிடறி, முடி, இரு பாதங்கள் போன்றஇயல்பாக வெளியாகக் கூடிய பகுதிகளைத் தவிர முழு உடலையும் மறைக்க வேண்டும். ஏனெனில் நபியவர்களின் மனைவியரிடத்தில் வேதக்கார பெண்கள் பிரவேசிப்பார்கள், நபி (ஸல்) அவர்கள் அச்சந்தர்ப்பங்களில் ஹிஜாப்அணியுமாறு பணித்ததாக ஆதாரம் ஏதும் கிடையாது.

ஹராம், ஹலால் அடிப்படையில் பெண்ணின் ஆடையமைப்பு, அலங்கார்த்தின் வகைகள்

١
அனுமதிக்கப்பட்ட ஆடையமைப்பு, அலங்காரம்
٢
விரும்பத்தக்க ஆடையமைப்பு, அலங்காரம்
٣
ஹராமாக்கப்பட்ட ஆடையமைப்பு, அலங்காரம்

அனுமதிக்கப்பட்ட பெண் ஆடையமைப்பு, அலங்காரம் :

ஆடை அலங்காரங்களில் அடிப்படைச் சட்டம் அனுமதி என்பதே. மார்க்கம் ஹராமாக்கியதைத் தவிர அதிலிருந்து எதுவும் விதிவிலக்களிக்கப்பட மாட்டாது. எனவே ஒரு பெண் அவளுக்குத் தீங்கேற்படாத, மாற்று மதப் பெண்களுக்கு ஒப்பாகாத அனைத்து வகையான ஆடைகள், அனைத்து வண்ணங்கள் மற்றும் துணி வகைகளை அணிவது அனுமதிக்கப்படுகிறது. மேலும் பன்றிக் கொழுப்பு போன்ற தடுக்கப்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படாத நகைகள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற அனுமதிக்கப்பட்ட அனைத்து விதமான அலங்காரங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொள்ள முடியும்.

விரும்பத்தக்க ஆடையமைப்பு, அலங்காரம் :

இது மார்க்கம் விரும்பத்தக்கதாகக் கூறும் அனைத்தையும் குறிக்கின்றது. அதேபோன்று ஹராமாக இல்லாத பட்சத்தில் தனது கணவனைத் திருப்திப்படுத்தவும், அவரது நேசத்தைப் பெறவும் ஒரு பெண் அணியக்கூடிய அனைத்து வித ஆடைகளையும் குறிக்கின்றது.

ஹராமாக்கப்பட்ட ஆடையமைப்பு, அலங்காரம் :

இது மார்க்கம் தடை செய்து எச்சரித்த அனைத்து ஆடையமைப்புகளுமாகும், அது ஹராம் என மார்க்கம் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி இருந்தாலும் சரி, அல்லது யூத கிறிஸ்தவர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும், ஆண்களுக்கு ஒப்பாகக் கூடாது போன்ற கடைபிடிக்க வேண்டுமென ஏவப்பட்டுள்ள மார்க்கத்தின் பொதுவிதிகளுக்கு முரண்படும் ஆடையமைப்பாக இருந்தாலும் சரி.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்