கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இஸ்லாத்தில் பாகப்பிரிவினை

இஸ்லாத்தில் பாகப்பிரிவினை ஒழுங்கு தொடர்பான சில அம்சங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • இஸ்லாத்தில் பாகப்பிரிவினை சட்டங்களில் உள்ள தனித்துவத்தை அறிதல்.
  • பாகப்பிரிவினையின் தூண்கள், நிபந்தனைகளை அறிதல்.
  • ஆண், பெண்களில் வாரிசுக்காரராக ஏகோபிக்கப்பட்ட சிலரை அறிந்து கொள்ளல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

பாகப்பிரிவினை என்பது பண்டைய, நவீன சமூகங்கள் கடைபிடித்த ஒரு சர்வதேச மானிட ஒழுங்காகும். ஏனெனில் இது மனிதனின் சொத்துடமையாக்குதல், அதற்காக முயற்சித்தல் போன்ற இயற்கை உணர்வுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஒன்றாகும். அதேபோன்று ஒருவரின் உடமைகளை அவரது மரணத்திற்குப்பின் கையாளும் பிரச்சினையையும் தீர்த்து வைக்கின்றது.

வாரிசாக விட்டுச் செல்பவரின் நிலைகள், வாரிசுக்காரர்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய பங்குகள் அனைத்தையும் ஒருங்கிணைந்த,ஈர்க்கும் வகையில் விரிவாகக் கையாண்டிருப்பதன் மூலம் இஸ்லாத்தின் பாகப்பிரிவினை சட்டதிட்டங்கள் தனித்துவம் பெறுகின்றன. இந்த விரிவான சட்டங்களின் சிறப்பியல்புகளில் ஒன்றுதான், மரணித்தவரின் உறவினர்களிடையே ஏற்பட வாய்ப்புள்ள பிரச்சினைகளின் காரணங்களை நீக்குவதாகும். ஏனெனில் வாரிசுக்காரர்கள் தமக்கு அல்லாஹ் வகுத்துள்ள பங்கு நிச்சயம் கிடைக்கும் என அறிந்து கொண்டால் அமைதியடைந்து, அவனது பங்கீட்டு முறையைப் பொருந்திக் கொள்வார்கள். இதில் வாரிசுக் காரர்கள் அனைவரினது உரிமைகளும் பாதுகாக்கபடுகின்றன. தாம் விரும்புவோரைத் தடுப்பதற்கும், விரும்புவோருக்குக் கொடுப்பதற்கும் அவர்களுடைய அபிப்பிராய, ஆய்வுகளுக்கு உட்பட்ட விடயமாக இது விட்டுவிடப்பட மாட்டாது, ஏனெனில் இது மோதலுக்கும் பாகுபாட்டிற்கும் காரணமாக இருக்கும்.

பாகப்பிரிவினையின் தூண்கள்

١
மரணித்தவர்
٢
வாரிசுக்காரர்
٣
அனந்தரச் சொத்து.

மரணித்தவர்

இது அனந்தரமாகப் பெறப்படும் சொத்துக்களைவிட்டுவிட்டு மரணிப்பவரை, அல்லது மரணித்ததாகக் கருதப்படுபவரைக் குறிக்கின்றது.

வாரிசுக்காரர்

இது மரணித்தவருடன் உள்ள ஏதாவதொரு தொடர்பு காரணமாக அவர் விட்டுச் செல்லும் சொத்துக்களில் பங்கு பெறத் தகுதியுள்ள, உயிருடன் இருப்பவர், அல்லது உயிருடனிருப்பதாகக் கருதப்படுபவரைக் குறிக்கின்றது.

அனந்தரச் சொத்து.

இது மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து, உடமைகளைக் குறிக்கின்றது. இதற்கு அரபு மொழியில் "தரிகத்", "மீராஸ்", "இர்ஸ்" போன்ற சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பாகப்பிரிவினையின் நிபந்தனைகள்

١
சொத்துடமையாளரின் மரணம் உறுதியாகுதல், அல்லது மரணித்தவருடன் இணைக்கப்படுதல். உதாரணமாக மரணித்தவர் என நீதிபதி தீர்ப்பளித்த காணாமல் போனவர், தண்டப்பணத்திற்குரிய குற்றச் செயல் மூலம் தாயிடமிருந்து பிரிந்த சிசு போன்றவர்கள்.
٢
சொத்துடமையாளரின் மரணத்தின் போது வாரிசுக் காரர் உயிரோடிருப்பதை உறுதிப்படுத்துதல், அல்லது உயிரோடிருப்பவருடன் இணைத்தல். உதாரணமாக சொத்துரிமையாளர் மரணிக்கும் போது உயிருடனிருக்கும் நிலையில் தாயிடமிருந்து பிரிந்த சிசுவைப் போன்றதாகும்.
٣
இரத்த உறவு, திருமணம், உரிமையிடல் போன்ற அனந்தரச் சொத்து கிடைக்கும் வழிகளில் தான் எவ்வகை என்பதை அறிந்து வைத்தல்.

அனந்தரச் சொத்தை விநியோகிப்பதன் ஒழுங்குமுறை

١
ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள்.
٢
மரணித்தவர் மீது கடனிருந்தால் அதனை நிறைவேற்றுதல்.
٣
வாழும் போது ஏதாவது மரணசாசனம் செய்திருந்தால் அதனை செயற்படுத்தல்.
٤
அதன்பின் அவர் விட்டுச் சென்றதை வாரிசுக்காரர்கள் மத்தியில் பங்கீடு செய்தல்.

இஸ்லாமிய ஷரீஅத்தில் பாகப்பிரிவினை ஒழுங்கின் தனித்துவங்கள்

١
இது தனது படைப்பினங்கள், அவர்களுக்கு உகந்தது எது, அவர்களை சீராக்குவது எது என்ற அனைத்தையும் அறிந்த அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்". (முல்க் : 14).
٢
தனது விருப்பத்திற்கேற்றவாறு பங்கீடு செய்யும் அதிகாரத்தை இஸ்லாம் மரணிப்பவருக்கு விட்டுவைக்கவில்லை. ஏனினில் சில வேளை அவரது மனோஇச்சை அவரை மிகைக்கலாம், கட்டுமீறிய உணர்வில் வீழ்ந்து தகுதியுடையோருக்குக் கொடுக்காமமல் இருக்கலாம், அல்லது நியாயமின்றி சிலரை விட சிலரை மேம்படுத்தலாம்.
٣
இஸ்லாமிய சட்டம் பொருளாதாரத்தை குறித்த சில நபர்களிடம் மாத்திரம் முடங்காது பலருக்கும் சென்றடையுமாறு பிரித்து வைக்கின்றது. இது எவ்வாறெனில் அனந்தரச் சொத்தில் பெருந்தொகையினர் பங்கெடுக்கும் விதத்தில் சட்டமியற்றியுள்ளது.
٤
குடும்ப உறுப்பினர்களில் பலருக்கு நியாயமான அமைப்பில் சொத்துப் பங்கீடு செய்வதன் மூலம் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமை, பிணைப்பை நிலைத்திருக்கச் செய்தல்.
٥
இஸ்லாமிய சட்டத்தில் பாகப்பிரிவினை அவரவர் தேவைக்கேற்பவே வைத்துள்ளது. பாகப்பிரிவினையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படை இதனைக் கருத்திக் கொண்டே வகுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெண்பிள்ளைக்கு தனது சகோதரருக்குக் கிடைக்கும் பங்கில் பாதியே கிடைக்கின்றது. ஏனெனில் அவளது சகோதரருக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஏனெனில் அவனது வீட்டிற்கு செலவு செய்யும் பொறுப்பு அவனிடமே உள்ளது. ஆனால் அவளுக்கு செலவு செய்யும் பொறுப்பு வேறொருவரிடமே உள்ளது.
٦
மரணித்தவருக்கும் வாரிசுக்காரர்களுக்கும் இடையில் பயன்பாட்டு இணைப்புக்கள் உள்ளதால் வாரிசுக்காரர்களில் சிலரை விட சிலரை மேம்படுத்துவதில் உறவுமுறையின் தரத்தையே இஸ்லாம் பிரதான அடிப்படையாக வைத்துள்ளது. எனவே பாட்டனை விட தந்தையும், பாட்டியை விட தாயும் முன்னுரிமை வழங்கப்படுவர்.
٧
இஸ்லாமிய அமைப்பில் வாரிசுரிமை என்பது வலுக்கட்டாயமானதாகும். தனது வாரிசுகளில் யாரையும் தடுக்கும் அதிகாரம் உரிமையாளருக்கில்லை.

ஆண் வாரிசுக்கள்

ஒருமித்த கருத்தின் பிரகாரம் ஆண்களில் வாரிசுக்காரர்களாக வர முடியுமானவர்கள் பத்து வகையினராகும். அவர்கள் : மகன், மகனின் மகன்- அவ்வாறே தொடர்ந்து சென்றாலும் சரி- தந்தை, தந்தையின் தந்தை- அவ்வாறே தொடர்ந்து சென்றாலும் சரி- சகோதரன், சகோதரனின் மகன். தந்தையின் சகோதரர், தந்தையின் சகோதரரின் மகன், கணவன், அடிமையை உரிமையிட்டவர் ஆகியோராகும்.

பெண்களில் வாரிசுக்காரர்கள்

ஒருமித்த கருத்தின் பிரகாரம் பெண்களில் வாரிசுக்காரர்களாக வர முடியுமானவர்கள் ஏழு வகையினராகும். அவர்கள் : மகள், மகனின் மகள்- அவ்வாறே தொடர்ந்தாலும் சரி- தாய், தாயின் தாய்- அவ்வாறே தொடர்ந்தாலும் சரி-, சகோதரி, மனைவி, அடிமையை உரிமையிட்டவர்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்