கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் தொழுகையில் உள்ளச்சம்

உள்ளச்சமே தொழுகையில் அடிப்படையும், பிரதான பண்புமாகும். உள்ளச்சம் என்பதன் அர்த்தத்தையும், அதனை வரவழைக்கத் துணை புரிபவற்றையும் இப்பாடத்தில் நாம் கற்போம்.

  • உள்ளச்சம் என்பதன் அர்த்தத்தை அறிதல்.
  • உள்ளச்சத்தை வரவழைக்கத் துணை புரிபவற்றை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

தொழுகையில் உள்ளச்சம்

இதுதான் தொழுகையின் யதார்த்தமும் சாரம்சமுமாகும். இதன் அர்த்தம் தொழுகையில் நாம் ஓதும் இறைவசனங்கள், பிரார்த்தனைகள், திக்ருகள் ஆகியவற்றை உணர்தநிலையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இழிவடைந்து, பணிவதன் மூலம் உள்ளத்தால் ஒன்றுவதாகும்.

இதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததும், மகத்தானதுமாகும். இதனால்தான் அல்லாஹ் இதனை விசுவாசிகளின் பண்புகளில் ஒன்றாக அழுத்திக் கூறியுள்ளான் : "விசுவாசிகள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள்தாம் தமது தொழுகையில் உள்ளச்சத்துடன் இருப்பார்கள்". (முஃமினூன் 1, 2).

தொழுகையில் உள்ளச்சத்துடன் வாழ்வோர் வணக்கம், மற்றும் ஈமானின் சுவையை உணர்வர். இதனால்தான் நபியவர்கள் "எனது கண்குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது" எனக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (நஸாஈ 3940). கண்குளிர்ச்சி என்பது சந்தோசம், மகிழ்ச்சி, இன்பத்தின் உச்சகட்டமாகும்.

உள்ளச்சத்தை வரவழைக்கத் துணை புரிபவை

1. தொழுகைக்காக முழுமையாகத் தயாராகுதல்.

ஆண்கள் பள்ளிக்கு நேரகாலத்துடன் செல்லுதல், தொழுகைக்கு முன் செய்ய வேண்டிய ஸுன்னாக்களை மேற்கொள்ளல், பொருத்தமான அழகான உடையணிதல், அமைதியாகவும், கண்ணியமாகவும் நடந்து செல்லல் போன்றன இவற்றில் உள்ளடங்கும்.

2. தொழுகையை விட்டும் திசை திருப்பக்கூடிய, கவனத்தை சிதறடிக்கக் கூடிய அனைத்தையும் தூரமாக்குதல்.

தனக்கு முன்னால் கவனத்தை சிதறவைக்கும் உருவப்படங்கள், வீண்களியாட்டங்கள், இடைஞ்சலான ஓசைகளை வைத்துக் கொண்டு தொழலாகாது. இயற்கைத் தேவையுள்ள நிலையிலோ உணவு, பாணங்கள் தயாராக இருந்து தாகமோ,பட்டினியோ உள்ள நிலையிலும் தொழக் கூடாது. தொழக்கூடியவரின் கவனம் சிதறாமல் தான் முன்னோக்கும் மகத்தான வணக்கத்திலேயே முழுச் சிந்தனையும்இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முறைகள் கூறப்பட்டுள்ளன.

3. தொழுகையில் நிதானத்தைக் கடைபிடித்தல்

ஒவ்வொரு மூட்டுக்களும் அதற்குரிய இடத்திற்கு மீளும்வரை நபியவர் ருகூஃ, ஸுஜூத் ஒவ்வின்றிலும் அமைதியைக் கடைபிடிப்பார்கள். அவ்வாறு தொழுகையின் செயற்பாடுகளில் நிதானமின்றி வேகமாகத் தொழுத மனிதருக்கு நிதானைக் கடைபிடிக்குமாறு ஏவியதுடன் வேகத்தை தடுத்து, அதனை காகம் கொத்துவதற்கு ஒப்பிட்டார்கள்.

"மக்களில் மோசமானவர்கள் தொழுகையில் திருடக்கூடியவர்கள்" என நபியவர்கள் கூறிய போது "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எவ்வாறு திருடுவது?" என தோழர்கள் வினவினார்கள். "ருகூஃ, ஸுஜுதைப் பூரணமாகச் செய்யாமலிருப்பதாகும்" என பதிலளித்தார்கள். (அஹ்மத் 22642). தொழுகையில் நிதானமிழந்தவரால் அதில் உள்ளச்சத்துடன் இருக்க முடியாது. ஏனெனில் வேகம் உள்ளச்சத்தைப் போக்கி விடும். காகம் கொத்துவதைப் போன்று தொழுவதால் நன்மை போய் விடும்.

4. தான் யார் முன்னிலையில் இருக்கறேன் என்பதை உள்ளத்தால் உணர்ந்து கொள்ளல்.

படைத்தவனின் மகத்தும், கண்ணியத்தையும் தனது பலவீனம், இழிநிலையையும் நினைவுகூர்ந்து, தான் தனது இரட்சகன் முன்னிலையில் அவனுன் உரையாடிக் கொண்டும், உள்ளச்சத்துடனும், பணிவுடனும் அவனை அழைக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மறுமையில் விசுவாசிகளுக்கு அவன் தயாரித்துள்ள நன்மைகள், இணைவைப்பாளர்களுக்கு தயாரித்துள்ள வேதனைகளையும் நினைவுகூர்ந்து, மறுமையில் அவன் முன்னிலையில் நிற்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தொழுபவரின் உள்ளத்தில் அல்லாஹ் தனது பிரார்த்தனையை செவிமடுத்து பதிலளித்து தான் கேட்பதைக் கொடுப்பான் என எந்தளவிற்கு ஆழமாக பதிந்துள்ளதோ அந்தளவிற்கு அவருடைய உள்ளச்சம் இருக்கும்.

அவர்களைத் தான் அல்லாஹ் தனது வேதத்தில் அவனை சந்திப்பதை உறுதி கொள்ளக் கூடியவர்கள் என வர்ணித்துள்ளான் : "நிச்சயமாக அது (தொழுகை) உள்ளச்சம் உள்ளோரைத் தவிர ஏனையோருக்கு பெரும் சுமையாகவே உள்ளது. அவர்கள்தாம் தமது இறைவனை சந்திக்கக் கூடியவர்கள், மேலும் அவன் பால் மீளக்கூடியவர்கள் என்பதை உறுதி கொள்ளக் கூடியவர்கள். (பகரா: 45,46).

5. ஓதப்படும் இறைவசனங்கள் மற்றும் ஏனைய திக்ருகளை ஆராய்ந்து அவற்றுடன் ஒன்றிப்போதல்.

அல்குர்ஆன் ஆராய்வதற்காகவே இறங்கியுள்ளது. "இது உம்மீது நாம் இறக்கிய பரகத் செய்யப்பட்ட வேதமாகும். அதன் வசனங்களை அவர்கள் ஆராய்ந்து புத்தியுள்ளவர்கள் படிப்பினை பெறவே (இறக்கியுள்ளோம்). (ஸாத் : 29).

ஆராய்வது எவ்வாறு?

ஓதும் வசனங்கள், திக்ருகள், துஆக்களின் கருத்தை அறியாமல் அவற்றை ஆராய முடியாது. அவ்வாறு அறிந்தால் அவருடைய நிலமை, நடைமுறையை ஒரு கோணத்திலும் அந்த வசனங்களின் கருத்துகளை மறு கோணத்திலும் சிந்திக்கலாம். எனவே உள்ளச்சம், பணிவு, தாக்கம் உருவெடுத்து சிலவேளை கண்ணீர் கூட வரலாம். எந்தவொரு வசனத்தையும் கேட்காமல், பார்க்காமல் தாண்டி போகும் நிலை ஏற்பட மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான்: "அவர்களுக்கு தமது இரட்சகனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் செவிடர்களாகவும் குருடர்களாகவும் அவற்றின் மீது தாழ மாட்டார்கள். (ஃபுர்கான்: 73).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்