கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் குளிர்காலமும் தொழுகை, நோன்பும்

குளிர்காலத்தில் அல்லாஹ்வை நெருங்குவதற்குப் பாரிய வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான வாய்ப்புக்கள் பற்றியும், குளிர்காலத்தில் தொழுகையுடன் தொடர்பான சில சட்டங்கள் பற்றியும் இப்பாடத்தில் நாம் கற்போம்.

  • குளிர்காலத்தில் தொழுகையின் சட்டங்களை அறிதல்.
  • இப்பருவத்தில் அல்லாஹ்வை நெருங்கும் வாய்ப்புகளை அறிதல்

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

கடுமையான குளிர்காலத்தில் அதான் கூறுதல்

கடுமையான குளிர்காலத்தில் மக்களுக்கு தொழுகைக்குப் புறப்பட்டு வருவதைத் தடுக்குமளவு குளிர் இல்லாவிடில் அதானின் சட்டம் தொடர்ந்திருக்கும்.

பெரும்பான்மையான மக்களுக்கு வெளியே வருவதில் அதிக சிரமமிருந்தால் தனது அதானில் "நீங்கள் உங்கள் இடங்களிலேயே தொழுங்கள்" , "நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள்" போன்ற பள்ளியில் தொழுகையை நிறைவேற்றத் தேவையில்லை என்பதை உணர்த்தும் வார்த்தைகளை முஅத்தின் கூற வேண்டும்.

மக்காவை அடுத்துள்ள 'ளஜ்னான்' என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) அதான் கூறினார்கள். அதன் கடைசியில் 'உங்களுடைய இடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். மேலும் 'பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழை பெய்யும் இரவிலும் முஅத்தின் அதான் சொல்லும்போது அதன் கடைசியில் 'உங்களுடைய இடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார். (புஹாரி 632, முஸ்லிம் 697).

நெருப்பு அல்லது சூடாக்கியை முன்னோக்கித் தொழுதல்

மக்கள் குளிர்காலத்தில் நெருப்பு மூட்டுவர், சில வேளை அது கிப்லாத்திசையில் அமைந்திருக்கும். நெருப்பு வணங்கிகளுக்கு ஒப்பாகாமல் இருப்பதற்காக நெருப்பு இருக்கும் திசையை நோக்கித் தொழாமலிருப்பதே மிகச் சிறந்தது. மேலும் அது தொழுகையைப் பராக்காக்கி விடுகின்றது. குளிர் காய்வதற்குத் தேவையிருந்தால், அல்லது இடம் மாற்றுவது சிரமமாக இருந்தால் பரவாயில்லை.

தீச்சுடர் இல்லாமல், ஒளிரும் மின்சாரமாக அல்லது சூடான இரும்பாக அந்த சூடாக்கி இருந்தால் அதனை நோக்கித் தொழுவது வெறுக்கப்பட மாட்டாது.

-

இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்

இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுதல் என்பது தகுந்த காரணங்களுக்காக ளுஹரை அஸருடன் சேர்த்தும், மஃரிபை இஷாவுடன் சேர்த்தும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ இரு நேரங்களில் ஒரு நேரத்தில் தொழுவதைக் குறிக்கின்றது.

குளிர்காலத்தில் சேர்த்துத் தொழுவதற்குத் தகுந்த காரணமாக அதிகமாக நிகழ்வது மழையாகும். சில அறிஞர்கள் கடுமையான குளிர்காற்று, கடுங்குளிர், பாதைகளை அடைக்கும் பனிக்கட்டிகள், நிலக்கீல் இல்லாத இடங்களில் பாதையை நிரப்பும் சகதி போன்றவற்றையும் இதனுடன் மேலதிகமாகக் கூறியுள்ளனர்.

இங்கு தகுந்த காரணம் என்பது மக்களுக்கு அடிக்கடி கூட்டுத் தொழுகைக்காகப் பள்ளிக்குப் புறப்பட்டு வருவது சிரமமாவதையே குறிக்கின்றது. அப்போது அவர்களுக்கு சேர்துத் தொழ அனுமதி வழங்கப்படுகின்றது. இதனால்தான் சிறு உலா அல்லது சிறு தேவைகளுக்காக மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுக்காத சிறு மழைக்கு இந்தச் சலுகைகள் வர மாட்டாது.

-

முஸ்லிம்கள் தொழுகைகளை அவற்றுக்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதே அடிப்படையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது." (நிஸா : 103). இதனால்தான் சேர்த்து தொழுவதற்கான தகுந்த காரணம் உறுதியாகாமல் சேர்த்து தொழ முடியாது. தகுந்த காரணமின்றி சேர்த்துத் தொழுவது பெரும்பாவங்களில் ஒன்று என உமர் பின் கத்தாப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்றரைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டாகத் தொழாத பெண்கள், நோயாளிகள், அல்லது அதில் அலட்சியமாக இருப்போர் சேர்த்துத் தொழ முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அத்தேவை கிடையாது. தொழுகை அதற்குரிய நேரத்தில் தொழுவது அவசியமாகும். அதே போன்றுதான் இரண்டாம் தொழுகை தொழ ஆரம்பிக்க முன்னரே தகுந்த காரணம் நீங்கி விட்டாலும் சேர்த்துத் தொழ முடியாது.

சேர்த்துத் தொழும் போது ஒரு அதான் போதுமானது, ஒவ்வொரு தொழுகைக்காகவும் வெவ்வேறு இகாமத் கூற வேண்டும். பிந்திய ஸுன்னத்களையும், தொழுது முடிந்து ஓதும் திக்ருகளையும் இரண்டு தொழுகைகளும் முடிந்த பின் நிறைவேற்ற வேண்டும்.

கனிசமான பள்ளிகளில் சேர்த்து தொழ முடியுமா முடியாதா எனபதில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. பள்ளியின் இமாம் அவர்களே இதற்குப் பொறுப்பாவார். அதுபற்றிய அறிவு அவரிடமிருந்தால் ஆய்வு செய்வார், அல்லது அறிவுள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவார். சேர்த்துத் தொழலாம் என்ற எண்ணம் அவரிடம் மிகைக்காவிட்டால் சேர்த்துத் தொழ முடியாது, பள்ளிக்கு வரும் மக்கள் இதற்காகக் பிணங்கிக் கொள்ளலாகாது.

குளிர்காலமும் நோன்பு மற்றும் இரவுத் தொழுகையும்

குளிர்காலம் முஃமினின் வசந்த காலம், இரவு நீள்கின்றது, அதில் இரா வணக்கம் புரிகின்றார், பகல் குறுகியது, அதில் நோன்பு நோற்கின்றார் என ஒருவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணக்க சோலையில் உலா வருவதாலேயே இதற்கு வசந்தம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் குளிர்காலங்களில் பகல் வேளையில் தாகம், நீண்ட நேரம் போன்ற சிரமங்களின்றி நோன்பு நோற்கலாம், இரவு வேளை நீண்டிருப்பதால் இரவுத்தொழுகை, உறக்கம் இரண்டையும் சேர்க்கலாம்.

"குளிர்காலத்தில் நோன்பு நோற்பது எளிதான இரையாகும்" என ஒருவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குளிர்காலம் வணக்கசாலிகளின் இரையாகும்".

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்