கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் புனித அல்குர்ஆன் பற்றிய அறிமுகம்

புனித குர்ஆனை காட்சிப்படுத்த ஆற்றலுடையோராகவும், அதன் வார்த்தைகளின் விளக்கங்களை அறிந்தோராகவும் இருத்தல்

  • அல்குர்ஆனின் சிறப்பை அறிதல்.
  • அதன் பாகங்கள், அத்தியாயங்களை வேறுபிரித்தறிதல். (அல்குர்ஆனின் அத்தியாயங்களுடைய பெயர்கள், மற்றும் பாகங்களின் எண்ணிக்கையை அறிதல்).
  • அல்குர்ஆனின் அற்புதத்தை உணர்தல்.
  • அல்குர்ஆனின் அடிப்படை விடயங்களை அறிதல்.
  • அல்குர்ஆனின் எந்தக் கலைச் சொல்லுடையவும் பொருளை அறிய முடியுமாயிருத்தல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

புனித அல்குர்ஆன்

மக்களுக்கு நேர்வழி காட்டவும், வழிகேடு எனும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றவும் தனது படைப்பினங்களில் சிறந்தவர், இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்". (மாஇதா : 15, 16).

புனித அல்குர்ஆனின் வரைவிலக்கணம்

அல்குர்ஆன் என்பது ஓதுவதை வணக்கமாகக் கொண்ட, முஹம்மத் ஸல் அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்லாஹ்வின் பேச்சாகும்.

அல்குர்ஆனின் மேன்மை ,சிறப்பைப் பறைசாற்றும் பல பெயர்கள் அதற்குண்டு. அவற்றுள் சில :

١
அல்குர்ஆன் : அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது". (இஸ்ரா : 9).
٢
அல்கிதாப் (வேதம்) : அல்லாஹ் கூறுகின்றான் : "இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை". (பகரா : 2).
٣
அல்புர்கான் (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப் பிரித்தறிவிக்கக் கூடியது) : அல்லாஹ் கூறுகின்றான் : "(சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்". (புர்கான் : 1).
٤
அஸ்ஸிக்ர் (நினைவூட்டல்) : அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்". (ஹிஜ்ர் : 9).

அல்குர்ஆன் அருளப்படல்

ரமழான் மாதத்தின் புனித லைலதுல் கத்ர் இரவிலேயே நபி ஸல் அவர்களுக்கு முதலில் அல்குர்ஆன் இறங்க ஆரம்பித்தது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்". (கத்ர் : 1). மேலும் கூறுகின்றான் : "ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது". (பகரா : 185).

அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆனை அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளில் ஒருவரான ஜிப்ரீல் (அலை) அவர்களே. அல்லாஹ் இக்குர்ஆனைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான் : "மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார். (நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது தெளிவான அரபி மொழியில் (இவ்வேதத்தை இறக்கினார்)". (ஷுஅரா : 192 - 195).

ஸூரா அலகின் (96ம் அத்தியாயம்) முதல் ஐந்து வசனங்களுமே அல்குர்ஆனில் முதன் முதலில் இறக்கப்பட்டது. அவ்வசனங்கள் பின்வருமாறு : "1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். 5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்".

பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்கா மற்றும் மதீனாவில் 23 வருட காலப்பகுதியில் பலவேறுபட்ட நேரங்களில் சிறிது சிறிதாக இறங்கியது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆன் புனித லைலதுல் கத்ர் இரவில் கீழ்வானிற்கு ஒரே தடவையில் இறக்கப்பட்டது, பின்பு 20 வருட காலப்பகுதியில் இறக்கப்பட்டது". (பைஹகீ 2/ 415).

அல்குர்ஆனின் அத்தியாயங்கள்

அல்குர்ஆன் பிரதியில் உள்ளவாறு அதன் ஸூராக்களின் (அத்தியாயம்) எண்ணிக்கை (114) நூற்று பதினான்காகும். முதலாம் ஸூரா பாதிஹா, இறுதி ஸூரா அந்நாஸ் ஆகும்.

மக்கீ மற்றும் மதனீ ஸூராக்கள்

١
மக்கீ ஸூராக்களின் எண்ணிக்கை 86 ஆகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்ல முன் இறங்கிய ஸூராக்களே மக்கீ எனப்படுகின்றது.
٢
மதனீ ஸூராக்களின் எண்ணிக்கை 28 ஆகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின் இறங்கிய ஸூராக்களே மதனீ எனப்படுகின்றது.

அதன் பாகங்கள் முப்பதாகும். ஹிஸ்புகள் அறுபதாகும்.

அல்குர்ஆன் எழுதித் தொகுக்கப்படல்.

அல்குர்ஆன் எழுதித் தொகுக்கப்படல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது :

முதல் கட்டம் : நபி (ஸல்) அவர்களின் காலம்

பலமான நினைவாற்றல், வேகமான மனன சக்தி ஆகியன காணப்பட்டதாலும், எழுதத் தெரிந்தவர்கள், மற்றும் எழுத்து சாதனங்களின் பற்றாக்குறை காரணமாகவும் இக்கட்டம் எழுதுவதை விட மனனம் செய்வதையே அதிகம் சார்ந்திருந்தது. இதனால்தான் ஒரே பிரதியில் அல்குர்ஆன் முழுதும் தொகுக்கப்படவில்லை. ஒரு வசனத்தை செவிமடுத்தால் அதனை மனனமிட்டுக் கொள்வார்கள். அல்லது ஈத்தம் ஓலை, விலங்குகளின் பதனிடப்பட்ட தோல்கள், அகலமான கற்கள், விலங்குகளின் எழும்புத் துண்டுகள் போன்ற தமக்கு வசதியான ஒன்றில் எழுதிக் கொள்வார்கள். அல்குர்ஆனைத் திறன்பட ஓதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது.

இரண்டாம் கட்டம் : அபூபக்ர் (ரலி) அவர்களின் காலம்

ஹிஜ்ரி 12ம் ஆண்டு நடைபெற்ற யமாமா போரில் அதிகமான காரீக்கள் அல்குர்ஆனைத் திறன்பட ஓதுவோர் கொல்லப்பட்ட போது குர்ஆன் காணாமல் போகாமலிருக்க அல்குர்ஆனை நூல் வடிவில் தொகுக்கப் பணித்தார்கள்.

ஸைத் இப்னு ஸாபித் (ரலி) கூறினார்கள் : யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான் கருதுகிறேன், 'நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்'' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொருத்தமானதாகக்) கண்டேன்.

மூன்றாம் கட்டம் : உஸ்மான் (ரலி) அவர்களின் காலம்

இது ஹிஜ்ரி 25ம் ஆண்டு நிகழ்ந்தது. நபித்தோழர்களின் கரங்களில் இருந்த அல்குர்ஆன் பிரதிகளில் காணப்பட்ட கிராஅத் முறைகளில் உள்ள வேறுபாட்டின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தத் தொகுப்பிற்குக் காரணமாகும். அதனால் குழப்ப நிலை தோன்றும் அச்சம் நிலவியது, அதனையடுத்து மக்கள் கருத்து வேறுபடாதிருக்க அந்தப் பிரதிகளை ஒரே பிரதியில் தொகுக்குமாறு உஸ்மான் (ரலி) அவர்கள் பணித்தார்கள். அவ்வாறில்லையெனில் அல்லாஹ்வின் வேதத்தில் அவர்கள் பிரச்சினைப் பட்டு, பிரிந்து சென்றுவிடுவார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறுகின்றார் : ஹுதைஃபா பின் யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொண்டிருந்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!'' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்'' என்று தெரிவித்தார்கள். எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸஈத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். (புஹாரி 4987).

அப்போது தொகுக்கப்பட்ட பிரகாரமே அல்குர்ஆன் இன்று வரை முஸ்லிம்களில் அதிகமானோரால் அறிவிக்கப்பட்டு, ஏகோபிக்கப்பட்டதாக இருந்து வருகின்றது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்