தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் அல்குர்ஆனை ஆராய்ந்து விளக்குதல்
அல்குர்ஆனை விளக்குதல் மற்றும் ஆராய்தல்
ஈருலக வெற்றிகளையும் அடைந்து கொள்வதற்காக அல்குர்ஆனை பிழையின்றி சரியாக ஓதுதல், அதனை ஆராய்தல், அதன் கருத்துக்கள், ஏவல், விலக்கல்களைப் பற்றி சிந்தித்தல், அதன் விளக்கம், சட்டங்களை அறிதல், பின் அதன்படி செயல்படுவது போன்றன அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.
ஆராய்தல் என்பதன் அர்த்தம்
ஆராய்தல் என்பது : இறைவசனங்களை அறிந்து, அதனை ஆராய்ந்து, பயனடைந்து, பின்பற்றுவதற்காக அதனுடன் தொடர்பிலிருத்தலாகும்.
தனது ஆய்வு, விளங்கும் விளக்கம் சரியானதாக இருக்க இறைவசனங்களின் பொதுப்படையான கருத்தை அறிந்து வைத்திருப்பது அதனை ஆராயும் அனைவருடையவும் கடமையாகும்.
அல்குர்ஆனை ஆராய்வது அவசியமாகும்.
இப்புனித குர்ஆனை ஆராய்ந்து, அதன் வசனங்கள், கருத்துக்களை விளங்கி, அதனுடனேயே வாழ்வது அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்". (ஸாத் : 29). மேலும் கூறுகின்றான் : “மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?". (முஹம்மத் : 24).
தப்ஸீர் என்பது : அல்குர்ஆன் வசனங்களின் அர்த்தங்களைத் தெளிவுபடுத்துவதாகும்.
தப்ஸீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியப்பாடு
தப்ஸீர் கலை மிகவும் பயனுள்ள, கண்ணியமான கலைகளுள் ஒன்றாகும். அது அல்லாஹ்வின் வேதத்துடன் தொடர்புபடுகின்றது, அவனது வார்த்தைகளை விளங்கவும், அவனது நோக்கங்களை அறியவும் உதவுகின்றது. ஒரு முஸ்லிம் நேர்வழி பெற்று, நற்கருமங்கள் புரிந்து அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, சுவனத்தை அடையத் துணைபுரியக் கூடிய அல்குர்ஆன் வசனங்களின் அர்த்தங்கள் தப்ஸீர்கலையின் மூலமே அறியப்படுகின்றன. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அவனது கட்டளைகளை எடுத்து நடப்பது, விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளல், அதன் சம்பவங்களிலிருந்து படிப்பினை பெறல், அதன் தகவல்களை உண்மைப் படுத்துதல் ஆகியன மூலமே இவை சாத்தியமாகும். தப்ஸீர்கலையின் மூலமே அசத்தியத்தை விட்டும் சத்தியம் தெளிவாகின்றது, வசனங்களின் அர்த்தங்கள் மற்றும் அவற்றின் உண்மையான விளக்கங்களை அறிந்துகொள்வதில் ஏற்படும் குழப்பம் நீங்குகின்றது.
அல்குர்ஆனின் அர்த்தங்கள் மற்றும் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிந்து கொள்வதில் தோழர்களது அக்கறை
நபித் தோழர்கள் அல்குர்ஆனை விளங்குவதில் தமக்கு ஏற்படும் சிக்கல்களை நபி (ஸல்) அவர்களிடமே கேட்பார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார் : "''யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு'' எனும் (அன்ஆம் : 82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் 'எங்களில் யார் தாம் தமக்குத்தாமே அநீதியிழைக்காதவர்?' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கிற அர்த்தமில்லை. லுக்மான் அவர்கள் தம் புதல்வருக்குக் கூறியதைப் போன்றே இங்கு பொருள்கொள்ளவேண்டும். 'என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! நிச்சயமாக! இணை கற்பிப்பதே மிகப்பெரும் அநீதியாகும்'' என்று கூறினார். (லுக்மான் :13)". (புஹாரி 6937).
அல்குர்ஆனை விளக்குவதிலும், அதன் அர்த்தங்களை அறிவதிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் :
முதலாவது : அல்குர்ஆனை அதே குர்ஆன் மூலம் விளக்குதல்
ஏனெனில் அல்லாஹ்தான் அதனை இறக்கினான், அவனே அதன் மூலம் நாடியதை மிக அறிந்தவன்.
உதாரணமாக, "(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்" (யூனுஸ் : 62, 63) என்ற வசனத்திலுள்ள இறைநேசர்கள் யார் என்பதை "அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்" என்ற வசனத்தின் மூலம் விளக்கியுள்ளான்.
இரண்டாவது : அல்குர்ஆனை ஸுன்னா மூலம் விளக்குதல்
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்தான் அல்லாஹ்விடமிருந்து தகவல்களை எத்திவைப்பவர், எனவே அவனது வார்த்தையின் நாட்டத்தை அவனுக்கு அடுத்து அன்னாரே அதிகமாக அறிந்தவர்கள்.
உதாரணமாக, இறைவசனமொன்றில் கூறப்பட்டுள்ள "பலம்" என்பதை அம்பெறிதல் என நபியவர்கள் விளக்கியுள்ளார்கள். உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "நீங்கள் அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தைத் தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்" (அன்பால் : 60) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, "அறிந்து கொள்க: பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும்" என்று கூறினார்கள்". (முஸ்லிம் 1917).
மூன்றாவது : நபித்தோழர்களின் அல்குர்ஆனுக்கான விளக்கவுரை.
இறைவசனம் இறங்கிய சந்தர்ப்ப, சூழ்நிலைகளை நேரடியாகக் கண்டிருப்பதாலும், பூரண விளக்கம், முறையான கல்வி, நற்செயல்கள் போன்றவற்றில் சிறந்து விளங்குவதாலும் இவர்களே அவ்வசனங்களைப் பற்றி அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் அடுத்து மிக அறிந்தவர்களாவர்.
உதாரணமாக, "நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலசலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்தால்" (நிஸா : 43) என்ற வசனத்திலுள்ள தீண்டினால் என்பதை "உடலுறவு கொள்வது" என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கியுள்ளதாக ஆதாரபூர்வமான அறிவிப்புக்கள் உள்ளன. (தப்ஸீர் தபரீ 8/ 389).
நான்காவது : தாபிஈன்களின் அல்குர்ஆனுக்கான விளக்கவுரை.
இவர்கள் அல்குர்ஆன் விளக்கவுரைகளை நபித்தோழர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றவர்கள். நபித்தோழர்களுக்கு அடுத்து இவர்கள்தான் சிறந்தவர்கள். பிற்காலத்தில் வந்தவர்களை விட மனோஇச்சையைப் பின்பற்றுவதில் மிகத்தூரமானவர்களாவர். இவர்களது காலத்தில் அரபு மொழியில் அதிகளவு மாற்றங்கள் இடம்பெறவுமில்லை. எனவே அல்குர்ஆனை விளங்குவதில் பிந்தியவர்களை விட இவர்களே சரியான கருத்திற்கு மிக நெருங்கியவர்கள்.
அல்குர்ஆனை விளக்கும் போது ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டியவை
அல்குர்ஆனை விளங்குவதிலும், அதன் அர்த்தங்களை அறிவதிலும் சிக்கல் ஏற்பட்டால் தப்ஸீர் நூல்கள் மற்றும் அல்குர்ஆன் வசனங்களின் அர்த்தங்களை தெளிவுபடுத்தி விளக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தப்ஸீர்கலை அறிஞர்களின் கருத்துக்களில் சென்று தேடிப்பார்ப்பது அவசியமாகும்.
ஒரு முஸ்லிம் அல்குர்ஆனிற்கு விளக்கமளிக்கும் போது தான் அல்லாஹ்விற்குப் பதிலாக மொழிபெயர்க்கின்றேன், அவன் நாடிய கருத்திற்காக அவனுக்கு சாட்சியாக இருக்கின்றேன் என்பதைத் தனது உள்ளத்திற்கு உணர்த்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த சாட்சியத்தை மகத்தானதாகக் கருதி, அறிவின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை அஞ்சி நடப்பான். அவ்வாறில்லையெனில் அல்லாஹ் ஹராமாக்கியதில் வீழ்ந்து அதற்காக மறுமையில் தண்டிக்கவும்படுவான். அல்லாஹ் கூறுகின்றான்: "“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக". (அஃராப் : 33).
தப்ஸீர் கலையில் பல நூல்கள் உள்ளன. ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் அவை அனைத்து ஒரே தரத்தில் இல்லாததால் இக்கலையில் வரையறைகளை முறையாகக் கடைபிடித்த தப்ஸீர் கலை அறிஞர்களின் நம்பகமான தப்ஸீர் நூல்களைச் சார்ந்திருப்பது அவசியமாகும். இவ்வாறான நூல்களில் சில :