கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பெருந்தொற்று மற்றும் அதிலிருந்து பெறும் பாடங்கள், படிப்பினைகள்

அல்லாஹ் முஃமின்களில் அவனது அறிவைக் கொண்டு ஜொளிக்க வைத்துள்ளவர்களைத் தவிர யாரும் கவனித்திராத பல பாடங்கள், படிப்பினைகள் நோய்கள் பெருந்தொற்றுகள் ஏற்படுவதில் உள்ளன.முஃமின்களின் ஈமானை மென்மேலும் அதிகரிக்கும் இது போன்ற சில படிப்பினைகளை இப்பாடத்தில் கற்போம்.

பெருந்தொற்றிலுள்ள அல்லாஹ்வுடன் தொடர்பு படுத்தி வைக்கும் பாடங்கள், படிப்பினைகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

பெருந்தொற்றால் ஏற்படும் சோதனை முஸ்லிம், காபிர் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் ஏற்படக்கூடிய அல்லாஹ்வின் விதியாகும். இருப்பினும் இச்சோதனையில் முஸ்லிமுடைய நிலையும், ஏனையோரின் நிலையும் ஒன்றல்ல. ஏனெனில் முஸ்லிம் பொறுமையாக இருத்தல், வருமுன் காப்பதற்கான மார்க்க சட்டபூர்வமான காரணிகளை மேற்கொள்ளல், வந்த பின் அதலிருந்து ஆரோக்கியத்தை வேண்டுதல் போன்ற அல்லாஹ் ஏவிய விடயங்களை சோதனையின் போது கையாள்கின்றான்.

இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை

நுண்ணோக்கியால் மாத்தரிமே பார்க்க முடியுமான அற்பமான ஒரு படைப்பின் காரணமாக பெருந்தொற்று பரவி, மக்களின் உள்ளங்களில் அது அச்சம், பதற்றத்தைத் தோற்றுவிப்பதன் மூலம் அல்லாஹ்வின் பிரமாண்டமான சக்தியை அறிவதுடன், படைப்பினங்கள் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், என்ன தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தாலும் அவை பலவீனமானவை என்பதையும் அறிய முடியும். பலவீனம், மனித இயலாமை என்ற வட்டத்திலிருந்து அவர்கள் இன்னும் வெளிவர வில்லை, நிச்சயமாக அல்லாஹ் தான் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாத பலம் மிக்கவன்; உறுதியானவன்.

விதியை நம்புதல்

அல்லாஹ் நாடியதுதான் நடக்கும், அவன் நாடாதது நடக்க மாட்டாது. "பூமியிலோ, உங்களிலோ எந்தவொரு துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை".

பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் படைப்பினங்களையும் படைக்க முன்னரே அல்லாஹ் நிர்ணயித்து, எழுதி வைத்துள்ளான் என முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இந்த நம்பிக்கை பதற்றத்தின் போது அவர்களை உறுதியானவர்களாகவும், அமைதியானவர்களாவும் இருக்க வைக்கின்றது. பரந்த உள்ளங்களுடன் அல்லாஹ்வின் விதியை வரவேற்கின்றனர்.

பாடம், படிப்பினை பெறல்

சோதனைகள் வரும் போது அவற்றிலிருந்து படிப்பினை பெறாமல் தகவல் பரிமாற்றத்திலேயே மக்கள் கவனம் செலுத்துவது துரதிஷ்டமாகும். பொருந்தொற்று பரவும் போதும், சேதனை நிகழும் போதும் அதிலிருந்து படிப்பினை பெறுவதானது மிகப்பெரிய வணக்கமாக இருக்கும் அதே வேளை ஓரங்கட்டப்பட்ட நபிவழியாகவும் மாறிவிட்டது. ஒரு மணி நேரம் சிந்திப்பது ஓர் இரவு முழுதும் நின்று வணங்குவதை விட சிறந்ததென அபுத்தர்தாஃ (ரலி) அவர்கள் கூறியதாக ஹில்யதுல் அவ்லியா எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

முஸ்லிமுக்கு ஏற்படும் துன்பங்கள் சோதனைகளில் பல நிலைகள் உள்ளன :

١
பாவமன்னிப்பு : அதனுடன் நம்பிக்கை, மன உறுதி, பொறுமை, ஸ்திரத்தன்மை போன்றன அடியானுக்குத் தேவைப்படுகின்றன.
٢
நினைவூட்டல்: அதனுடன் அலட்சியம், ஊதாரித்தனம், அல்லாஹ்வை விட்டு தூரமாகுதல் ஆகியவற்றை விட்டும் விழித்துக் கொள்ளும் தேவை உள்ளது.
٣
தண்டனை : அதனுடன் பச்சாதாபப்பட்டு, இரைஞ்சி, நற்செயல்களை அதிகப்படுத்தும் தேவை உள்ளது.

பிரார்த்தனை மூலம் அல்லாஹ்விடம் இரைஞ்சி, பணிதல் :

துன்பங்கள் வரும் போது இரைஞ்சி, அல்லாஹ்வுக்காகப் பணிந்து அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்விடம் மாத்திரமே பாதுகாப்புத் தேடி, துக்கம், சோதனைகளை நீக்க வேண்டுவதன் மூலம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவதும் மகத்தான வணக்கங்களாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்". (அன்ஆம் : 43).

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகின்றார்கள் : "நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா?" அதாவது : அவர்களை நாம் அதன் மூலம் சோதித்தால் அவர்கள் எம்மிடம் பணிந்து வந்து, அமைதியை நாடி வந்திருக்கக் கூடாதா?, "அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன", அதாவது : உள்ளங்கள் இலகவுமில்லை, அஞ்சவுமில்லை. "அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்" அதாவது : இணைவைப்பு, பாவங்கள் என்பவாகும்.

உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால்

அந்த துன்பங்கள், சோதனைகளிலிருந்து நாம் வெகுதொலைவில் இருக்கின்றோன் என நாம் எண்ணிக் கொண்டிருப்பதுதான் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அச்சமுற்றிருப்பதுடன் மிகப் பெரிய ஏமாற்றமாகவும் உள்ளது. சோதனைக்கும் பாவத்திற்குமிடையில் ஏதோ தொடர்பிருப்பதாக நாம் இறுதியாகத்தான் சிந்திக்கின்றோம், அதேவேளை இவ்விடயம் அல்குர்ஆனில் பல வசனங்களில் வலியுறுத்திக் கூறப்பட்டதாகும்.

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்

பேரிடர்கள், நெருக்கடிகள் தொடர்ச்சியாக வரும் போது அவற்றை இலகுபடுத்தி, அத்தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல், பிறருக்கு நேரும் துன்பத்திலிருந்து இவர்களைத் தூரப்படுத்தல், துன்ங்களின் போது பொறுமை காத்து, அல்லாஹ்வின் ஏற்பாட்டைப் பொருந்திக் கொள்ளப் பாக்கியமளித்தல் போன்றவற்றின் மூலம் விசுவாசிகள் மீது அல்லாஹ்வின் அன்பு வெளிப்படுகின்றது. அல்லாஹ்வின் அன்பு இல்லாவிடின் தனிமை, பதற்றம், அச்சத்தால் உள்ளங்கள் நிரம்பியிருக்கும்.

"நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன்" எனும் வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது அஷ்ஷேக் ஸஃதீ (ரஹ்) கூறுகின்றார்கள் : அடியான் உணராத விதத்திலேயே அவனது நலவு, உபகாரங்களை அவனுக்கு சேர்த்துகின்றான், அவன் வெறுக்கக் கூடிய பல விடயங்களிலிருந்து வெகு தொலைதூரத்திற்குக் கொண்டு செல்கின்றான்.

அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுதல்

அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து, அவனிடமே அழகான முறையில் பொறுப்புச் சாட்டுதல்தான் சோதனைகளைக் கடந்து செல்வதற்கான பிரதான வழியாகும். விடிவு வெகு அண்மையில் என்பதில் உறுதியாக இருந்து கொள்ளட்டும், உம்மைச் சூழவுள்ளோர்க்கு மத்தியில் நல்ல எதிர்பாப்பை ஏற்படுத்தி, பொறுமையிழத்தல், விரக்தியான எண்ணங்களைத் தவிர்ந்து கொள்ளவும். இரு இன்பங்களை ஒரு துன்பம் ஒரு போதும் மிகைக்காது. "ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது".

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்

சாத்தியமான, சட்டபூர்வமான லௌகீகக் காரணிகளை மேற்கொள்வது தீங்குகளைத் தடுப்பதற்கான காரணிகளில் உள்ளவை என்பது அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் விதித்துள்ள நியதியாகும். அதனை இறைத்தூதர்கள், நல்லடியார்களும் மேற்கொண்டுள்ளார்கள், இது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி, அவனிடம் அடிமைத்தனத்தை உறுதிப்படுத்துவதன் முழு வடிவமாகும்.

காரணிகளை எடுத்து நடப்பதுடன் உள்ளத்தால் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதே உண்மையான தவக்குலாகும். பொறுப்புச் சாட்டல். காரணிகளைப் புறந்தள்ளிவிட்டு அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதானது மார்க்கத்தைக் குறை கூறுவதும், அறிவில் குறைபாடுமாகும். உள்ளத்தால் அல்லாஹ்வைச் சார்ந்திருக்காமல் காரணிகளை மாத்திரம் மேற்கொள்வது ஓரிறைக் கொள்கையை முறித்து, காரணிகளை அவனுக்கு இணையாக ஆக்குவதாகும்.

இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்

மறைவான ஒரு படைப்பினம் இவ்வுலக மக்களின் அருட்கொடை, பேரின்பம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, வாழ்வாதாரம் அனைத்தையும் வேட்டையாடிவிட்டது. இவ்வாறான உலகத்தை மனநிம்மதிக்கான நிரந்தரத் தங்குமிடமாக எடுத்து, அதற்காக சண்டையிட்டு, அதன் கூளத்திற்காக போட்டி போட்டுக் கொள்வது ஒரு முஃமின் ஒரு புறமிருக்க ஓர் அறிவாளிக்குத் தகுமா?

நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் என்னையே அஞ்சுங்கள்

நிச்சயமாக இந்த வைரஸ் தொற்றுக்களெல்லாம் தனது அடியார்களை அச்சுறுத்துவதற்காக அல்லாஹ் அனுப்பும் அவனது இவ்வுலக அத்தாட்சிகளில் ஒன்றுதான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அவை மக்களை பாடம் படித்து, படிப்பினை பெறவும், அல்லாஹ்வுக்கு அஞ்சுதல் எனும் வணக்கமுறையை உயிர்ப்பக்கவும் தூண்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை". (பனூ இஸ்ராஈல் : 59).

அல்லாஹ்வின் அத்தாட்டசிகளைப் பார்த்து அவனை அஞ்சுதல் எனும் வணக்கமுறையை உயிர்ப்பத்தல்.

அல்லாஹ்வின் அத்தாட்டசிகளைப் பார்த்து அவனை அஞ்சுதல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும், அனஸ் (ரலி) கூறுகின்றார் காற்று கடுமையாக வீசினால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் அதன் தாக்கம் தெரிந்து விடும். (புஹாரி)

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

இவ்வுலகில் நேரம்தான் ஒரு முஸ்லிமின் பிரதான மூலதனமாகும். இது பணத்தை விடப் பெறுமதியானது, வேறெந்தக் கிரயத்தை விடவும் உயர்வானது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரு அருட்கொடைகள் உள்ளன, அவ்விரண்டிலும் அதிகமான மக்கள் ஏமாந்து விடுகின்றனர். ஆரோக்கியம், ஓய்வு ஆகியனவாகும்". (புஹாரி.)

எனவே புத்திசாலி எப்போதும் தனது நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வான், சோதனைகள், நெருக்கடிகளின் போது இன்னும் உறுதியாக செயற்பட்டு, அல்லாஹ்விடம் தன்னை நெருக்கிவைக்கும் அனைத்துக் காரியங்களிலும் தனது நேரத்தை செலவிடுவான். இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள் : "நேரத்தை வீணடிப்பது மரணத்தை விடக் கொடியதாகும். ஏனெனில் நேரத்தை வீணடிப்பது உன்னை அல்லாஹ்வை விட்டும், மறுமையை விட்டும் துண்டித்து விடுகின்றது, ஆனால் மரணம் உன்னை இவ்வுலகு, அதிலுள்ளவர்களை விட்டும்தான் துண்டிக்கின்றது".

ஷன்கீதீ (ரஹ்) கூறுகின்றார்கள் :

""எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக" எனும் வசனத்தில் உலகையே பராக்காக்கிய ஓய்வு எனும் பிரச்சினைக்குத் தீர்வுள்ளது, இவ்வசனம் முஸ்லிமுக்கு அவனது நேரத்தில் ஓய்வேதும் வைக்கவில்லை, ஏனெனில் ஒன்றோ அவன் இவ்வுலக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான், அல்லது மறுமைக்குத் தயாராகுவதில் ஈடுபட்டிருப்பான்"

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்