கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் சூதாட்டம்

இந்தப் பாடம் சூதாட்டம், அதன் சட்டங்கள், தீங்குகள் பற்றிய விடயங்களை முன்வைக்கின்றது.

  • சூதாட்டத்தின் கருத்தை அறிதல்.
  • இஸ்லாமிய சட்டத்தில் சூதாட்டத்தின் சட்டத்தை அறிதல்.
  • சூதாட்டத்தின் வகைகள், தீங்குகளைத் தெளிவுபடுத்துதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

சூதாட்டம் என்றால் என்ன ?

சூதாட்டம் என்பது , ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தரப்பினர் இலாபமீட்ட ஏனையோர் நட்டமடையும் ஒவ்வொரு விளையாட்டையும் குறிக்கும் சொல்லாகும். எனவே ஒவ்வொரு பங்கேற்பாளரும் மற்றவரிடமிருந்து பணம் அல்லது ஏதாவதொன்றைப் பெறுவது அல்லது வேறொருவர் வெல்வதற்காக தனது பணத்தை இழப்பது என்ற அடிப்படையில் நடக்கக் கூடியதாகும்.

சூதாட்டத்தின் சட்டம்

அல்குர்ஆன், ஸுன்னா மற்றும் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின் பிரகாரம் சூதாட்டம் ஹராமான ஒன்றாகும்.

சூதாட்டத்தில் வென்றவருக்கு ஏதோ பயன் கிடைக்கின்றது என்றாலும் அதன் மூலம் கிடைக்கும் பலன், பயன்பாடுகளை விட அதன் தீங்கையும், பாவத்தையுமே அல்லாஹ் மிகைப்படுத்தியுள்ளான் : "(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”. (பகரா : 219).

அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் வெற்றியடைவதற்காக இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்". (மாஇதா : 90).

சூதாட்டத்தினால் ஏற்படும் தனிநபர், சமூகப் பாதிப்புக்கள் :

١
மக்களுக்கு மத்தியில் இது பகைமை, வெறுப்புக்களை உருவாக்குகின்றது. ஏனெனில் வீரர் அல்லது போட்டியாளர்களில் ஒருவர் மாத்திரம் இவ்விளையாட்டின் மூலம் ஏனையோரின் பணத்தை எடுப்பதானது ஏனையோரின் உள்ளங்களை வெறுப்பு, குரோதத்தால் நிரப்பி விடுகின்றது.மேலும் அவருக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புக்காக அவர்களை காத்திருக்க வைக்கிறது. இது அனைவரும் அறிந்த கண்கூடாகப் பார்க்கும் நிகழ்வாகும். இது "நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணத்தான்" எனும் வசனத்தை உண்மைப்படுத்துகின்றது. (மாஇதா : 91).
٢
மேலும் இது இறைத்தியானங்கள், மற்றும் தொழுகைகளை விட்டும் பராக்காக்கி விடுகின்றது. இது ஷைதானின் பாரிய இலக்குகளில் ஒன்றாகும். முன்னைய வசனத்தின் தொடர்ச்சியில் : "அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்" என இடம்பெற்றுள்ளது.
٣
பணத்தை வீணாக்குவது மற்றும் செல்வத்தை வீணடிப்பது. எத்தனை செல்வந்தர்கள் சூதாட்டத்தின் விளைவாக அனைத்தையும் இழந்த வறியவர்களாக மாறியுள்ளனர்.
٤
சூதாட்டத்தில் ஈடுபடுபவன் அதற்கே அடிமையாகி விடுகின்றான். அதில் வெற்றி பெற்று பணம் சம்பாதித்தால் மேலும் பேராசை கொண்டு, ஹராமான பொருளீட்டலிலேயே தொடர்ந்து செல்கின்றான். தோல்வியுற்று நட்டமடைந்தால் இழந்ததைப் மீளப் பெறுவதற்காக தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பான்.
٥
குடும்பச் சிதைவு : சூதாட்டத்தில் முழுமையாக அடிமையாகுதல் சூதாட்டக்காரனின் குடும்ப விவகாரங்களைப் பாழாக்க வழிவகுக்கின்றது. இதனால் ஏற்படும் பண இழப்பு நிதி மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது அதிகமான விவாகரத்து மற்றும் குடும்பச் சிதைவில் முடிகின்றது.

சூதாட்டத்தின் வகைகள்

1. வென்றவர் தோற்றவரிடமிருந்து பணம் பெறுவதாக நிபந்தனையிடப்படும் அனைத்து விளையாட்டுக்களும் சூதாட்டமே. உதாரணமாக ஒரு குழுவினர் (பலூட் அல்லது டெக் போன்ற வகையில்) சீட்டாடுவதைப் போன்று. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்து யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் எல்லா பணத்தையும் எடுத்துக்கொள்வார்.

2. குறிப்பிட்ட ஓர் அணி அல்லது வீரர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டுதல். பந்தையக் காரர்கள் குறிப்பிட்ட பணத்தை வைத்து, ஒவ்வொருவரும் தமது அணி, அல்லது வீரர் வெற்றி பெறுவதாகப் பந்தயம் கட்டுவர். தமது அணி வென்றால் முழுப்பணத்தையும் எடுத்துக் கொள்வார். தோற்றால் அனைத்துப் பணத்தையும் இழந்து விடுவார்.

3. லொத்தர் மற்றும் அதிர்ஷ்டச் சீட்டு. உதாரணமாக ஒரு டொலரைக் கொண்டு ஓர் அட்டையை வாங்குவதைப் போன்றாகும்.பல அட்டைகளில் குழுக்கல் செய்யப்பட்டு இவருடைய அட்டை வென்றால் மேலதிக தொகையைப் பெறுகின்றார். அத்தொகை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

4. வழக்கமான செலவை விட அதிக பணம் செலுத்தி தொலைபேசி அல்லது கைபேசி குறுந்தகவல்கள் மூலம் போட்டிகளில் பங்கேற்பது. அதேபோன்றுதான் மின்சார, மின்னணு, இணையத்தளம் மூலமாக விளையாடப்படும் அனைத்து வித சூதாட்ட விளையாட்டுக்களும் இதில் அடங்கும். இதில் விறையாடுபவர் பணத்தை வெல்தல் அல்லது இழத்தல் என்ற உறுதியற்ற இரண்டில் ஒரு நிலையை அடைந்தே தீர்வார்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்