தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் வாடகைக்கு விடுதல் (இஜாரா)
குறிப்பிட்ட அல்லது உறுதியுரையில் வர்ணிக்கப்பட்ட ஒரு சொத்திலிருந்து கிடைக்கப்பெறும் பயனை அறியப்பட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட முறையில் பயனடைவதற்காக, அல்லது குறிப்பிட்ட ஒரு தொகைக்காக ஒருவரைக் கூலிக்கமர்த்தும் போது செய்யப்படும் ஒப்பந்தமே இஜாரா எனும் வாடகைக்கு விடலாகும்.
இஸ்லாமிய ஷரீஅத்தில் இஜாராவின் சட்டம்
வாடகைக்கு விடல் (இஜாரா) அனுமதிக்கப்பட்ட ஆகுமான ஒரு முறையாகும். அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ ஆகியன இஜாரா முறையை சட்டபூர்வமாக்கியுள்ளன. இரு தரப்பினருக்கிடையில் நடந்து முடிந்ததும் முறிக்க முடியாத ஒப்பந்தமாகவே இது இருக்கும். உனக்கு வாடகைக்கு விட்டேன், குத்தகைக்கு விட்டேன், கூலிக்கு வழங்கினேன் போன்ற சமூகத்தில் அறியப்பட்ட வார்த்தைகள் மூலம் இவ் ஒப்பந்தம் நிறைவேறும்.
வாடகைக்கு விடுவது அனுமதி என்பதற்கான ஆதாரங்கள் சில :
அல்லாஹ் கூறுகின்றான் : "எனது தந்தையே! (மூஸாவாகிய) இவரை கூலிக்கு வேலைக்கமர்த்துங்கள், நீங்கள் வேலைக்கமர்த்தும் இவர் வலிமையானவர் நம்பிக்கையானவர்" என்று அவர்கள் இருவரில் ஒரு பெண் கூறினாள். (கஸஸ் : 26).
ஆஇஷா(ரலி) கூறுகின்றார்கள் : நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ தீல் குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் தம் ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து 'மூன்று இரவுகள் கழித்து எங்கள் ஒட்டகங்களுடன் ஸவ்ர் குகையில் எங்களைச் சந்திக்க வேண்டும்' என்று அவரிடம் கூறினார்கள். அவர், (அவ்வாறே) மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஒட்டகங்களுடன் அவர்களைச் சந்தித்தார். (புஹாரி 2264).
இஸ்லாமிய ஷரீஅத்தில் இஜாரா முறை சட்டபூர்வமானதற்கான காரணம்
வாடகை என்பது மக்களுக்கு தமது வாழ்வில் அதிக பயன்களைக் கொடுக்கின்றது. அதில் ஒருவருக்கொருவர் பயன்பாடுகளை பரிமாறிக்கொள்வது உள்ளது. மனிதர்களுக்கு வேலைக்காக பணியாட்கள் தேவைப்படுகின்றார்கள், வசிக்க வீடு தேவைப்படுகிறது, பிரயாணத்திற்காகவோ, பொருட்களை சுமக்கவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ வாகனங்கள் தேவைப்படுகின்றன. அதிக மக்களுக்கு இவற்றைக் கொள்வனவு செய்யும் வசதியில்லை. இதனால் மக்களுக்கு இலகுபடுத்துவதற்காகவும், சிறு தொகைப் பணத்தின் மூலம் இரு தரப்பினரும் பயனடைவதுடன் அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அல்லாஹ் வாடகை முறையை அனுமதித்துள்ளான். அவனுக்கே அனைத்துப் புகழும்.
இஜாராவின் வகைகள்
கூலிக்காரர்களின் வகைகள்
தனியார் கூலிக்காரர்
இவர் ஒரு நபரால் தனக்கு வேலை செய்ய குறிப்பிட்ட காலத்திற்கு பணியமர்த்தப்பட்ட ஒருவர். இவர் வேறொருவரிடம் பணியாற்ற முடியாது, குறிப்பிட்ட அக்காலத்தினுள் அவ்வாறு பணியாற்றினால் அதற்கேற்ப அவரது ஊதியத்திலிருந்து குறைக்கப்படும். தான் முன்வந்து பணியை மேற்கொண்டால் அதற்குரிய கூலிக்குத் தகுதியாகின்றார். குறிப்பிட்ட காலம் முடியு முன் கூலிக்கமர்த்தியவர் நோய், இயலாமை போன்ற தகுந்த காரணமின்றி ஒப்பந்தத்தை ரத்துச் செய்தால் பணியாளுக்கு முழுமையான கூலி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தகுந்த காரணத்திற்காக ரத்துச் செய்தால் பணியாற்றிய காலத்திற்குரிய கூலி மாத்திரம் வழங்கப்பட வேண்டும்.
இவர் குறிப்பிட்டவருக்கு அல்லாமல் செயற்பாட்டின் மூலம் பலர் பயனடையக்கூடிய ஒருவர். உதாரணமாக கொல்லன், குழாய்ப்பணியாளர், வர்ணம் பூசாளர், தையல் காரர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர் தனக்காக உழைத்து, அவரிடம் கேட்பவர்களிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்பவராக இருந்தால் அவரை வேலைக்கு அமர்த்தியவர் மற்றவர்களுக்காக வேலை செய்வதைத் தடுக்க முடியாது. வேலை முடியும் வரை கூலி பெறத் தகுதயடையமாட்டார்.
வாடகை ஒப்பந்தத்தின் பிரதான அடிப்படைகள்
ஒப்பந்தம் செய்வோர்
ஈஜாப் - கபூலுக்குத் உரித்துடைய கூலிக்கமர்த்துபவர், கூலியாள் ஆகிய இரு தரப்பினரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்.
இது ஈஜாப் - கபூலைக் குறிக்கின்றது. அதாவது ஒப்பந்தத்தின் வடிவத்தை சட்டப்பூர்வமாக அல்லது வழக்கமாக நிரூபிக்கும் எந்தவொரு செயலும் இதில் செல்லுபடியாகும்.
பயன்பாடு :
இஜாரா ஒப்பந்தத்தின் நோக்கமே இதுதான். இப்பயன்பாடு மனிதனாகவோ, பிராணியாகவோ, ஒரு பொருளாகவோ இருக்கலாம். அதனடிப்படையிலே ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.
இது ஒரு பொருளிலிருந்தோ, மனிதனிடமிருந்தோ பெறப்பட்ட பயனுக்குப் பிரதியீடாக வழங்கப்படும் தொகையாகும். இது வியாபாரத்தில் கிரயத்திற்கு ஈடானதாகும்.
இஜாரா நிறைவேறுவதற்கான நிபந்தனைகள்
கூலி கட்டாயமாகும் நேரம்
ஒப்பந்தத்தின் மூலம் கூலி கட்டாயமாகி விடுகின்றது. வாடகைக் காலம் முடிந்தவுடன் கூலியை ஒப்படைப்பது அவசியமாகும்.
இரு தரப்பினரும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூலியை நேரகாலத்துடனோ, தாமதமாகவோ, தவணைமுறையிலோ பெற்றுக் கொள்ளலாம். கூலிக்காரர் தனது பணியை முறையாக நிறைவேற்றியதும் கூலி பெறத் தகுதியடைந்து விடுகின்றார்.
வாடகை ஒரு பொருளின் பயன்பாட்டில் இருந்தால் முழுப்பயனையும் அடைந்தவுடன் கூலி கொடுக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!'' (புஹாரி 2227).
வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலைகள்
இரு தரப்பில் ஒருவர் மரணிப்பதன் மூலம் இஜாரா ரத்தாக மாட்டாது. வாடகைப் பொருளை விற்கவும் முடியாது. தனியார் வேலைக்காகக் கூலிக்கமர்த்தப்பட்ட ஒருவர் இடையில் மரணித்தால் ஒப்பந்தம் ரத்தாகி விடும். வடாகைக் காலம் முடிவுற்றவுடன் வாடகைக்கு எடுத்தவர் அதன் பயன்பாட்டை நிறுத்தி விட்டு, அது அசையும் பொருளாக இருந்தால் கொடுத்தவரிடம் ஒப்படைத்து விட வேண்டும்.