தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் இரவல்
இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:
இரவல் என்றால் என்ன
இரவலின் சட்டம்
இரவல் சட்டபூர்வமானதற்கான காரணம்
இதனால் இரவல் பெறுபவரின் தேவையை நிவர்த்தி செய்வதற்காக இரவலை அல்லாஹ் சட்டபூர்வமாக்கியதுடன், பொருள் தனக்கு சொந்தமாக இருப்பதுடனேயே அதன் பயன்பாட்டை தனது சகோதரனுக்கு அடையக் கொடுத்ததனால் இரவல் கொடுத்தவருக்கு நன்மையும் வழங்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்". (மாஇதா : 2)
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிருந்து 'மன்தூப்' என்று அழைக்கப்பட்ட குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்தபோது, '(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இதனைக் கண்டோம்" என்று கூறினார்கள். (புஹாரி 2627, முஸ்லிம் 2307).
இரவல் செல்லுபடியாவதற்கான நிபந்தனைகள்
இரவலின் பிரதான அடிப்படைகள்
இரவல் பொருளைப் பாதுகாப்பது, அதில் கவனமெடுப்பது, அழகிய முறையில் பயன்படுத்துவது, அதன் சொந்தக்காரருக்கு குறைகளற்று முழுமையாக ஒப்படைத்தல் என்பன இரவல் பெற்றவருக்குக் கடமையாகும். அவருடைய கையிலிருக்கும் போது பொருள் பயன்படுத்தமாலேயே தவறினால் அது அவருடைய அலட்சியத்தினாலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்பொருளுக்குப் பொறுப்பாக வேண்டும். அனுமதிக்கப்பட்ட பயன்படுத்தலின் போது தவறினால் அதில் இரவல் பெற்றவர் அத்துமீறினாலோ, அலட்சியமாக நடந்தாலோ தவிர பொறுப்பாக மாட்டார்.
தேவை முடிந்ததும் தான் பெற்ற பொருளை எவ்விதக் குறைகளுமின்றி எடுத்தது போன்றே திருப்பி ஒப்படைப்பது இரவல் எடுத்தவருக்குக் கடமையாகும். அதனைத் தடுத்து வைத்துக் கொள்வதோ, மறுப்பதோ கூடாது, அவ்வாறு செய்தால் அவர் துரோகியாகவும் பாவியாகவும் ஆகி விடுகின்றார்.
இரவல் பெற்றவருக்குப் பாதிப்பு இல்லாவிடில் அப்பொருளை தான் விரும்பிய நேரத்தில் திரும்பப் பெறும் உரிமை இரவல் வழங்குனருக்கு உண்டு. அவ்வாறு பெறுவதில் பயனாளருக்குப் பாதிப்புக்கள் ஏதுமிருந்தால் அது தீரும் வரை தாமதப்படுத்த வேண்டும். உதாரணமாக இரவல் பெற்ற நிலத்தில் பயனாளர் வேளான்மை செய்தால் அதனை அருவடை செய்யும் வரை வழங்குனருக்கு அதனைத் திரும்பப் பெற முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான் : "நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்". (நிஸா : 58)