கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் அன்பளிப்பு

இஸ்லாமிய ஷரீஆவில் அன்பளிப்பு என்பதன் அர்த்தம், அது தொடர்பான சட்டங்கள் என்பவற்றை இப்பாடத்தில் அறிவோம்.

  • அன்பளிப்பு என்பதன் அர்த்தம், அதன் காரணம் என்பவற்றை அறிதல்.
  • அன்பளிப்புடன் தொடர்பான சட்டங்களை அறிதல்.
  • அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்து அன்பளிப்புச் செய்வதன்பால் தூண்டுதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

நிச்சயமாக அல்லாஹ் தயாளன், கொடை, தயாள குணத்தை நேசிப்பவன், நபி (ஸல்) அவர்களும் மக்களில் அதிக கொடையாளியாக இருந்தார்கள், அன்னார் ரமழான் மாதத்திலேயே அதிகமாக கொடை வழங்குவார்கள்.மேலும் அன்பளிப்பை ஏற்பார்கள், அதற்குப் பிரதியும் செய்வார்கள், அதனை ஏற்க மக்களையும் அழைத்து, தூண்டுவார்கள். கொடை அவர்களுக்கு மிக விருப்பமான ஒன்றாகவே இருந்தது.

அன்பளிப்பு என்பதன் அர்த்தம்

இது குறித்த ஒரு பொருளை பிரதியீடின்றி இன்னொருவருக்கு வாழ்வு முழுதும் உரித்தாக்குதலைக் குறிக்கின்றது.

இங்கு வரைவிலக்கணத்தில் உரித்தாக்குதல் தொடர்பான வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதில் அன்பளிப்பு என்பது உரிமம் வழங்கும் ஒபந்தங்களில் ஒன்று என்பதற்கான ஒரு சுட்டிக்காதல் உள்ளது.

பொருள் என்பது பணம் மாத்திரமின்றி அனைத்து விதமானவற்றையும் உள்ளடக்கும் பரந்த ஒரு சொல்லாகும்.

இரு காரணங்களுக்காக "ஒரு பொருளை உரித்தாக்குவது" என்பதில் பயன்பாடுகளை அன்பளிப்புச் செய்வது அடங்க மாட்டாது :

١
சில சட்டக்கலை அறிஞர்களிடம் பயன்பாடுகள் சொத்தாகக் கருதப்படமாட்டாது.
٢
சட்டக்கலை அறிஞர்களிடம் பயன்பாடுகளை அன்பளிப்புச் செய்வதற்கு இரவல் என வேறு சொற்பிரயோகம் உண்டு.

உரித்தாக்குதல் என்பதில் கடனைத் தள்ளுபடி செய்வது அடங்கமாட்டாது, அது அன்பளிப்பு என்ற வார்த்தையில் இருந்தாலும் சரியே, ஏனெனில் கடனைத் தள்ளுபடி செய்வதானது தளர்த்தல், விட்டுக்கொடுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

அன்பளிப்பு என்ற வார்த்தை வெகுமதி, நன்கொடை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. அனைத்துமே நன்மை, உபகாரம், சேர்ந்து நடத்தல், நலவு செய்தல் என்ற தலைப்பினுள் அடங்குகின்றன.

அன்பளிப்பின் சட்டம்

உள்ளங்களைப் பிணைத்தல், நன்மை கூலிகளைப் பெற்றுக்கொள்ளல், அன்பு நேசம் ஏற்படல் போன்ற பல நலவுகள் அன்பளிப்பில் உள்ளதால் அது விரும்பத்தக்க ஒரு விடயமாகும். இது ஸுன்னத்தான விடயம் என்பதை அல்குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ அனைத்தும் அறிவிக்கின்றன.

கஞ்சத்தனம், உலோபித்தனம், பேராசை போன்றவற்றை விட்டும் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவதாலும், மக்களிடையே, குறிப்பாக உறவுக்காரர், அயலவர், எதிரிகளுடையே உள்ளங்களைப் பிணைத்து, நேசத்தைப் பலப்படுத்துவதால் அல்லாஹ் அன்பளிப்பை ஊக்கப்படுத்தியுள்ளான், சிலவேளை பிணக்குகள் ஏற்பட்டு, பிரிவுகள், துண்டிப்புக்கள் தோன்றி, உறவினர்களுடைய தொடர்பும் முறிந்து விடுகின்றது. எனவே உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் அனைத்தையும் நீக்குவதாக அன்பளிப்பு உள்ளது, அல்லாஹ்வுக்காக ஒரு பொருளை அன்பளிப்புச் செய்தால் அவர் அதற்குரிய நன்மை, கூலியை அடைந்து கொள்வார்.

ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று, அதற்குப் பிரதியும் செய்வார்கள். (புஹாரி 2585).

'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகின்றார்கள் . (புஹாரி 6, முஸ்லிம் 2308).

அன்பளிப்பின் பிரதான அடிப்படைகள்

அன்பளிப்புச் செய்பவரின் திருப்தியைத் தெரிவிக்கு வார்த்தை ஈஜாப் அதன் பிரதான அடிப்படைகளுள் ஒன்றென்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்துள்ளனர். ஏனைய அடிப்படைகளில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். எனவே ஈஜாபின் மூலம் அன்பளிப்பு நிறைவேறிவிடும், எனினும் ஏற்றுக் கொண்டதைத் தெரிவிக்கும் வார்த்தையை கபூல் பெறுனர் கூறி கையகப்படுத்தாத வரை அது அவருக்கு சொந்தமாகமாட்டாது. இந்த கபூலும், கையகப்படுத்தலும் ஒப்பந்தம் செய்வதற்காக அல்ல, மாறாக உரிமம் கைமாறுவதற்காகவே.

அன்பளிப்பின் நிபந்தனைகள்

١
அன்பளிப்புச் செய்பவர் கொடை கொடுக்கும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
٢
அன்பளிப்புச் செய்பவர் உரிமையாளராகவோ, அனுமதி வழங்கப்பட்டவராகவோ இருத்தல் வேண்டும்.
٣
அன்பளிப்புச் செய்பவர் அதில் திருப்தியுடன் இருத்தல் வேண்டும். நிர்ப்பந்திக்கப்பட்டவருடைய எந்தவொரு ஒப்பந்தமும் நிறைவேற மாட்டாது.
٤
ஒன்றை உரித்தாக்கும் தகுதியுள்ளவராக அன்பளிப்புப் பெறுபவர் இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாதோருக்கு அன்பளிப்புச் செய்ய முடியாது. அத்தகுதி மார்க்க சட்டம் கடமையாகும் நிலையை அடைவதன் மூலமே சாத்தியமாகும், அந்நிலையை அடையாதவருக்குப் பதிலாக அவருடைய பொறுப்பாளர் பெற்றுக் கொள்ள முடியும்.
٥
அன்பளிப்புப் பெறுபவர் உயிருடன் இருத்தல் வேண்டும். அன்பளிப்பு என்பது உரித்தாக்குவதாகும். இல்லாத ஒருவருக்கு ஒன்றை உரித்தாக்குவது சாத்தியமற்றதாகும்.
٦
அன்பளிப்புப் பெறுபவர் குறிப்பாக்கப்பட்ட ஒருவராக இருத்தல் வேண்டும். எனது வீட்டை இன்னாருக்கு அல்லது அவரது சகோதரருக்கு அன்பளிப்புச் செய்து விட்டேன் என்று கூறுவது போன்று குறிப்பாக்கப்படாதவராக இருந்தால் அந்த அன்பளிப்பு முறையானதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுள்ளது.
٧
அன்பளிப்பு பயன்பெற அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அது விற்க முடியாததாக இருந்தாலும் சரியே, ஏனெனில் அன்பளிப்புகள் நிதிப் பரிவர்த்தனைகள்களை விட பரந்துபட்டதாகும்.
٨
அன்பளிப்புப் பொருள் கைவசம் இருக்க வேண்டும். இல்லாத ஒன்றில் பரிவர்த்தனை செய்வது அது உருவாகுவதுடன் தொடர்புபட்டதாகும். அவ்வாறு உருவாகுமென எதிர்பார்ப்பிருந்தால் அறியப்படாத, இல்லாத ஒரு பொருளை அன்பளிப்புச் செய்யலாம்.

அன்பளிப்புப் பொருள் அறியப்பட்டதாக இருக்க வேண்டுமெனவோ, பங்கு வைக்க முடியுமானதாக இருக்க வேண்டுமெனவோ நிபந்தனையிடுவதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

நலவை எதிர்பார்த்து அன்பளிப்பு, வெகுமதி வழங்குவதின் சட்டம்

பொறுப்பிலுள்ள ஒருவருக்கு, அல்லது உத்தியோகத்தருக்கு அனுமதியில்லாத ஒன்றை செய்வதற்காக வெகுமதி வழங்குவதும், அதனைப் பெறுவதும் இருவருக்கும் ஹராமாகும். ஏனெனில் இது எடுப்பதும் கொடுப்பதும் இரண்டுமே சபிக்கப்பட்ட இலஞ்சத்திலுள்ளதாகும்.

அவருடைய அநீதியைத் தன்னை விட்டும் தடுப்பதற்காகவோ, தனக்கு வர வேண்டிய உரிமையைப் பெறுவதற்காகவோ வெகுமதி வழங்கினால் அதனைப் பெறுபவருக்கு அது ஹராமாகும். அவருடைய தீங்கைத் தடுப்பதற்காகவும், கொடுப்பவரின் உரிமையைப் பாதுகாக்கவும் அவ்வாறு வெகுமதி வழங்கலாம்.

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் பனூஸஃத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது, 'இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது'' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், 'நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பி) வந்து, 'இது உமக்குரியது; இது எனக்குரியது' என்று கூறுகிறாரே! அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே! அவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர் கொண்டுவரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமைநாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும்; அது மாடாயிருந்தால் அல்லது ஆடாயிருந்தால் கத்திக்கொண்டிருக்கும்'' என்றார்கள். பிறகு, அவர்களின் அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, 'நான் எடுத்துரைத்துவிட்டேனா?' என்று மும்முறை கூறினார்கள். (புஹாரி 7174).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்