தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஸகாத்தின் இலக்குகள்
ஸகாத் என்பது ஒரு பொருளாதாரக் கடமையாகும். வசதியற்றவர்கள், தேவையுடையவர்களின் சிரமங்களை நீக்கும் விதத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டுமென செல்வந்தர்கள்மீது அல்லாஹ் இதனைக் கடமையாக்கியுள்ளான். இதனால் செல்வந்தருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட மாட்டாது.
1. பணத்தை நேசிப்பது மனித உள்ளுணர்வாகும். அதனைப் பாதுகாக்கவும், பற்றிப் பிடித்துக்கொள்ளவும் இந்த உணர்வு அவனைத் தூண்டிக் கொண்டிருக்கும். எனவே உலோபித்தனம், கஞ்சத்தனத்திலிருந்து உள்ளத்தைத் தூய்மைப்படுத்தவும், உலகையும், அதன் அற்பப் பொருட்களையும் பேராசை கொள்வதைக் கட்டுப்படுத்தவும் ஸகாத் வழங்குவதை மார்க்கம் விதியாக்கியுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்களைத் தூய்மைப்படுத்தும் (ஸகாத் எனும் கடமையான) தர்மத்தை அவர்களின் செல்வங்களிலிருந்து (நபியே!) நீர் எடுத்து அதன் மூலம் நீர் அவர்களைப் பரிசுத்தப்படுத்துவீராக". (தவ்பா : 103).
2. ஸகாத் வழங்குவதன் மூலம் ஒத்திசைவு, பரிச்சியத்தின் அடிப்படை அடையப்படுகின்றது. ஏனெனில் இயற்கையாகவே மனித உள்ளம் அதற்கு நலவு செய்தவர்களை நேசிக்கின்றது. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினர் நேசமுடையவர்களாகவும், ஒரே கட்டிடத்தைப் போன்று ஒருவரையொருவர் பலப்படுத்தக் கூடியவர்களாகவும் வாழ்வார்கள். திருட்டு, கொள்ளை, மோசடி சம்பவங்கள் குறைந்து விடும்.
ஸகாத் விநியோகிக்கப்பட வேண்டிய வழிகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இப்பிரிவினர்களில் ஒரு சாராருக்கு மாத்திரமோ ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு இதனை வழங்க முடியும். முஸ்லிம்களில் இதனைப் பெறத் தகுதியானோருக்கு விநியோகிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள், நலன்புரி அமைப்புக்களுக்கும் இதனை ஒப்படைக்கலாம். வழங்குனரின் ஊர் எல்லைக்குள் விநியோகிப்பதே மிக ஏற்றமாகும்.