தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் பெருந்தொற்றை முஸ்லிம் கையாளும் முறை
நல்லது, தீயது அனைத்து விதியையும் நாம் நம்ப வேண்டும், அது இறைநம்பிக்கையின் தூண்களில் ஒன்றாகும். பெருந்தொற்றுக்கள், நோய்கள், பேரழிவுகள், சோதனைகள் போன்ற அடியார்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடு விதியின் படியே நடக்கின்றன. எனவே அல்லாஹ்வின் விதியை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும், கோபப்படவோ, அடியார்களிடம் முறைப்படவோ, பொறுமையிழந்து பேசவோ கூடாது.
நோய்கள் தமது பலத்தால் பிறரைத் தொற்ற மாட்டாது, மாறாக அல்லாஹ்வின் விதி, கட்டளைப் பிரகாரம்தான் தொற்றும் என விசுவாசி உறுதி கொள்ள வேண்டும். இருப்பினும்கூட, உடல் ஆரோக்கியம் மற்றும் நோய்த்தடுப்புக் காரணங்களைக் கடைப்பிடிக்கவும், நோய்கள் மற்றும் தொற்றுநோய்க்கான காரணங்களிலிருந்து விலகி இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், நோயாளிகளுடன் கலக்காமல் கவனமாக இருக்கவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
தொற்று நோய்கள் காபிர்கள், பாவிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு அல்லாஹ்விடமிருந்து வரும் இவ்வுலக தண்டனையாகவும், கட்டுப்படும் விசுவாசிகளுக்கு அவர்களது பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பதவியுயர்வுக்காகவும் இவை அருளாகவும் இருக்கின்றது.
இந்நிலைகளில் உத்தியோகபூர்வ துறைகளின் ஆலோசனைகளுக்கு பதிலளித்தல், சுயலநனை விட பொது நலனை முற்படுத்துவதன் மூலம் பொறுப்புணர்வுடன் செயல்படுதல், மற்றும் ஸ்திரத்தன்மை, இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் ஆகியன முஸ்லிமுடைய கடமையாகும்.
பெருந்தொற்றுக் காலத்தில் செய்யக்கூடாதவை
வதந்திகளைப் பரப்புவது ஹராமான பொய்யில் அடங்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் இது மக்கள் மத்தியில் பீதி ஏற்படவும் காரணமாகின்றது. எனவே ஊர்ஜிதமற்ற எந்தத் தகவலையும் மக்கள் மத்தியில் பரத்தாமலிருப்பதில் அதிக அக்கறை எடுப்பது அவசியமாகும்.
பதுக்கல், மோசடி, விலையற்றல், மக்களின் ஆகாரத்தில் விளையாடுதல் போன்றவற்றை -குறிப்பாக நெருக்கடி காலத்தில்- இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. இது முறையற்ற பொருளீட்டல், துரோகம், அமானித மோசடி, இழிச் செயலாகும்.
எந்த வழியிலும் சரி நோயாளி ஒருவரிடமிருந்து ஆரோக்கியமான ஒருவருக்கு தொற்றை வேண்டுமென்றே பரப்புவது ஹராமான செயலுடன் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதற்காக அவனுக்கு இவ்உலகிலும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அச்செயலின் பருமன் ஈர்ப்பு, தனிநபர்கள், மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தண்டனை மாறுபடும்.
பிறருக்கு வேண்டுமென்றே தொற்று நோயைப் பரவச் செய்தவனுக்குரிய தண்டனை
4. நோயைத் தூற்றுதல் :
காய்ச்சலைத் திட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அன்னார் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நீர் காய்ச்சலுக்கு ஏசாதீர், ஏனெனில் இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் அது பாவங்களை நீக்கிவிடும்". (முஸ்லிம் 2575).