கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் பெருந்தொற்றுடன் தொடர்பான சில சட்டங்கள்

பெருந்தொற்று நோய்களுடன் தொடர்புடைய மார்க்க சட்டக்கலை விதிகள், சட்டங்களில் சிலதை இப்பாடம் முன்வைக்கின்றது.

பெருந்தொற்று, நோய்கள் தொடர்பான சில சட்டங்கள், முக்கிய உபதேசங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

1. சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஏற்றல் :

நோய் வருமுன்னே பாதுகாப்பிற்காக தடுப்பூசி ஏற்றிக் கொள்வது ஆகுமானதாகும். இது அல்லாஹ்விடம் தவக்குல் வைப்பதற்கு முரணாக மாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மதீனா பேரீத்தம்பழத்திலிருந்து விடியற்காலையில் ஏழு பேரீத்தங்கள் உண்டால் சூனியமோ விஷமோ தாக்க மாட்டாது". (புஹாரி 5445, முஸ்லிம் 2047) இரு வருமுன் காக்கும் முறைகளிலுள்ளதாகும்.

2. பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் :

நோயாளிகளுடன் சுகதேகிகள் கலந்தருப்பதைத் தவிர்ப்பதை இம்மார்க்கம் அனுமதித்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வியாதிபிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்தைக் கொண்டு செல்லவேண்டாம்". (புஹாரி 5770).

இதனால் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவரிடம் செல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இருப்பினும் அவரது குடும்பத்தினரை சந்தித்து, அவருடைய நிலமையை கேட்டறிதல், அவருக்காக பிரார்த்தித்தல், முடியுமானளவு பணம், செல்வாக்கின் மூலம் சிகிச்சைக்காக உதவுதல் போன்றன ஆகுமானதாகும். நோய் பரவலைத் தடுக்கும் காரணிகளை மேற்கொள்வதுடன் சேர்த்தே மேற்கண்டவற்றை செய்ய வேண்டும்.

3. தொற்றுள்ள ஊரிலிருந்து அது வெளியில் பரப்புவதைத் தடுத்தல்.

தொற்றுள்ள ஊரிற்குள் பிரவேசிப்பதோ, அங்குள்ளவர் வெளியில் செல்வதோ கூடாது. அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் ரலி அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்'' (புஹாரி 5729).

4. கூட்டுத் தொழுகையை விடுதல் :

கூட்டுத் தொழுகை கடமையாகும். இருப்பினும் மார்க்க சட்டபூர்வமான காரணங்களுக்காக அது தளர்ந்து விடும் என்பதை அறிஞர்கள் கூறியுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது கூட்டுத் தொழுகைக்கு சமூகந்தராமல் "மக்களுக்கு தொழுகை நடத்தும்படி அபூ பக்ருக்கு ஏவுங்கள்" எனக் கூறியதாக அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 664). எனவே நோய், வெளிப்படையான சிரமம் போன்ற காரணிகள் ஒரு முஸ்லிமிடம் இருந்தால் பள்ளியில் கூட்டாகத் தொழுவதைத் தவிர்த்து, வீட்டில் தனியாகத் தொழுவதற்கு அனுமதியுள்ளது என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது.

5. வீட்டிலேயே மஸ்ஜிதொன்றை உருவாக்கிக் கொள்ளல் :

தகுந்த காரணத்திற்காக கூட்டுத் தொழுகை தவறினாலும், மற்றும் ஸுன்னத்தான தொழுகைகளுக்கும் என வீட்டில் பிரத்தியேகமான ஓரிடத்தை மஸ்ஜிதாக ஆக்கிக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

அதே போன்றுதான் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டிலும், அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களின் வீட்டிலும் பிரத்தியேகமான ஓரிடம் மஸ்ஜிதாக இருந்திருக்கின்றது. எனவே நீமும் இது போன்ற நிகழ்வுகளிலிருந்து பயன் பெற்று எமது வீடுகளிலும் தொழுவதற்கென பிரத்தியேகமான ஓரிடத்தை ஒதுக்கிக் கொள்வது சிறந்தது.

6. வீட்டிலே கூட்டாக தொழுகையை நிறைவேற்றுதல் :

பள்ளியில் கூட்டுத் தொழுகை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் வீடுகளில் கூட்டாக நிறைவேற்றுவது மார்க்கத்தில் உள்ள ஒன்றாகும். அதன் மூலம் கூட்டுத் தொழுகைக்குரிய நன்மை கிடைக்கின்றது. பள்ளியில் கூட்டுத் தொழுகை தவறிய சந்தர்ப்பங்களில் வீட்டில் கூட்டாகத் தொழுததாக இப்னு மஸ்ஊத் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்களைப் பற்றிய செய்திகள் ஆதாரபூர்வமாக வந்துள்ளன.

7. தொழுகை நடத்தத் (இமாமத்) தகுதியானவர் யார்?

வீட்டினுள் கூட்டாகத் தொழும் போது வீட்டின் உரிமையாளரே இமாமத் செய்யத் தகுதியானவராகும், அவர் முன்வரவில்லையெனின் அல்குர்ஆனைத் திறன்பட ஓதுபவரும், அதில் அனைவரும் சமனென்றால் தொழுகையின் சட்ட திட்டங்களை மிக அறிந்தவரும், அதிலும் சமமானவர்களாக இருந்தால் வயதில் மூத்தவரும் தொழுகை நடத்த தகுதியானவர்களாகும்.

8. பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) நிற்க வேண்டிய இடம் :

வீட்டில் தொழும் போது மஃமூம் ஆடவராகவும், தனியொருவராகவும் இருந்தால் இமாமின் வலது புறத்தில் நிற்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்டோர் இருந்தால் இமாமிற்குப் பின்னால் இருக்க வேண்டும். மஃமூம் பெண்ணாக இருந்தால் இமாமிற்குப் பின்னால் நிற்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் இருந்தால் ஆண்கள் இமாமிற்குப் பின்னாலும், பெண்கள் அதற்கும் பின்னாலும் நிற்க வேண்டும்.

இது ஒரு வாய்ப்பு :

தொழுகை முறை, அதன் நிபந்தனைகள், சுத்தம் பற்றிய சட்ட திட்டங்களை குடும்பத்தினருக்குக் கற்பிக்க இது போன்ற சந்தர்ப்பங்கள் மகத்தான ஒரு வாய்ப்பாகும். அதனை சரியாகப் பயன்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும்.

9. பெண்கள் கூட்டாகத் தொழுதல்

வீட்டிலே ஆடவர்களின்றி தனியாக இருக்கும் போது பெண்களும் கூட்டாகத் தொழுது ஸுன்னத்தாகும். உம்மு வரகா (ரலி), ஆஇஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) போன்றோர் இவ்வாறு தொழுததாக ஆதாரபூர்வமான தகவல்கள் உள்ளன. அவர்களுடைக கூட்டுத் தொழுகைகளுக்கும் பாரிய கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவர்களில் தொழுகை நடத்துபவர் வரிசையின் மத்தியில்தான் நிற்க வேண்டும்.

10. தொற்றுக்குள்ளானவர் கூட்டுத் தொழுகை மற்றும் பொது நிகழ்வுகளுக்கு சமூகமளித்தல் :

மக்களுக்குப் பாதிப்பு உள்ளதால் தொற்று நோய்க்குள்ளானவர் மக்கள் ஒன்றுகூடல்களுக்கு சமூகமளிப்பது ஹராமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்". (அஹ்ஸாப் : 58).

"பிறருக்குத் தீங்கிழைப்பதுமில்லை, தீங்கிற்குப்பழி வாங்கலுமில்லை" என்பது இஸ்லாத்தில் நிறுவப்பட்ட சட்டவிதிகளுள் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள் : "சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு" (புஹாரி 5707).

11. தொழுகையின் போது முகக் கவசம் (Mask) அணிதல் :

தொழுகையின் போது வாயை மூடிக் கொள்வது நபி (ஸல்) அவர்கள் தடுத்த வெறுக்கத் தக்க செயலாகும். இருப்பினும் தேவை நிமித்தம், அல்லது தொற்றுப் பரவும் அச்சமுள்ள போது இது போன்ற முகக் கவசங்களை அணிந்து கொள்ளலாம்.

12. வெள்ளிக்கிழமையின் சட்ட திட்டங்கள் :

கூட்டுத் தொழுகை நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும் வெள்ளிக்கிழமையின் சட்டங்கள் தொடர்ந்திருக்கும். எனவே அத்தினம் பஜ்ர் தொழுகையில் ஸூரா ஸஜ்தா, ஸூரா தஹ்ர் ஆகிய அத்தியாயங்களை ஓதுதல், அஸருக்குப் பின்னரான இறுதி நேரத்தில் பிரார்த்தனை ஏற்கப்பட வாய்ப்புள்ளதால் அந்நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளல், நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறுதல், ஸூரா கஹ்ஃப் ஓதுதல் ஆகியன அந்நாளில் வழமை போன்று செய்தல் வேண்டும். ஏனெனில் ஜும்ஆத் தொழுகைக்கும் இவற்றுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இல்லை என்பதே அடிப்படையாகும்.

13. கை குலுக்குவதைத் தவிர்த்தல் :

ஸலாம் கூறும் போது கை குலுக்குவது ஸுன்னாவாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரு முஸ்லிம்கள் சந்தித்துக் கொண்டு, கைகுலுக்கிக் கொண்டால் அவர்கள் பிரிந்து செல்லுமுன்னே அவ்விருவருடைய பாவங்களும் மன்னிக்கப்படாமல் இல்லை". (அபூதாவூத் 5212). கை குலுக்கலின் மூலம் நோய் தொற்றுவதை ஒருவர் அஞ்சினால் வாயினால் ஸலாம் கூறுவதுடன் நிறுத்திக் கொள்ளலாம், கை குலுக்கலுக்குரிய கூலியை அல்லாஹவிடம் எதிர்பார்க்கலாம்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்