கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஸுன்னா நூலுருப்படுத்தப்படல் மற்றும் பிரதான ஹதீஸ் நூல்கள்

இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்கள். அவற்றைப் பாதுகாப்பதிலும், பலமான, பலவீனமான ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதிலும், அதன் அறிவிப்பாளர்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதிலும் மனித வரலாற்றிலேயே ஒப்பற்ற அளவு தமது வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.

  • பிரதான ஹதீஸ் நூல்களை அறிந்து கொள்ளுதல்.
  • ஹதீஸில் பலமானது, பலவீனமானதை அறிய முடியுமாயிருத்தல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஸுன்னா நூலுருப்படுத்தப்படல்

இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸ்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்கள். அவற்றைப் பாதுகாப்பதிலும், பலமான, பலவீனமான ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதிலும், அதன் அறிவிப்பாளர்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதிலும் மனித வரலாற்றிலேயே ஒப்பற்ற அளவு தமது வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.

ஸுன்னா நூலுருப்படுத்தப்படல் என்பதன் அர்த்தம்

இது நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் வந்துள்ள சொல், செயல், அங்கிகாரங்களை எழுதிப் பதிந்து, புத்தகங்களில் ஒன்றுசேர்ப்பதைக் குறிக்கின்றது.

ஸுன்னாவை எழுதி, நூலுருப்படுத்தும் நடவடிக்கை பின்வருமாறு பல கட்டங்களைக் கடந்தது:

١
முதல் கட்டம் : நபி (ஸல்) அவர்களது காலத்திலும், தோழர்கள் காலத்திலும் எழுதப்படல்.
٢
இரண்டாம் கட்டம் : தாபிஈன்களின் இறுக்காலத்தில் ஹதீஸ் தொகுக்கப்படல்.
٣
மூன்றாம் கட்டம் : வாசிக்க முடியுமான நூல்கள் அமைப்பில் ஸுன்னாவைத் தொகுத்தல்.
٤
நான்காம் கட்டம் : நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைப் பிற அறிஞர்களுடன் கூற்றுக்களுடன் கலக்காது தனியாகத் தொகுத்து, நூலுருப்படுத்தல்.

முதல் கட்டம் :

நபி (ஸல்) அவர்களது காலத்திலும், தோழர்கள் காலத்திலும் எழுதப்படல். இது முதலாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. அல்குர்ஆனுடன் ஸுன்னா கலந்து விடக் கூடாதென்பதால் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதுவதைத் தடுத்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "என்னைத் தொட்டும் எதனையும் எழுத வேண்டாம், அல்குர்ஆனைத் தவிர என்னைத் தொட்டும் யாராவது எழுதினால் அதனை அழித்து விடட்டும், என்னைத் தொட்டும் அறிவியுங்கள். அதில் குற்றமேதுமில்லை". (முஸ்லிம் 3004).

எனவே நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்கள் மனனமிடுவதன் மூலமே பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வாய்வழியாகவே அது அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களுக்கு எழுத அனுமதித்தார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறினார்கள் : நான் மனனமிடுவதற்காக நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவிமடுக்கும் அனைத்தையும் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது நபியவர்களிடமிருந்து செவியேற்கும் அனைத்தையும் நீர் எழுதுகிறீரா, அன்னாரோ ஒரு மனிதர், கோபத்திலும், நல்ல நிலையிலும் பேசுவாரே எனக் கூறி குரைஷியர் என்னைத் தடுத்தனர். நானும் எழுதுவதை நிறுத்தி விட்டு நபி (ஸல்) அவர்களிடம் இதனைக் கூறினேன். அப்போது நபியவர்கள் தமது விரலினால் வாயை சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினார்கள் "நீர் எழுது, என் உயிர் எவன் கைவசமுள்ளதோ அந்த இறைவனின் மீது சத்தியமாக இதிலிருந்து சத்தியத்தைத் தவிர வேறேதும் வெளிப்பட மாட்டாது". (அபூதாவூத் 3646).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் அவ்ஸாஈயைத் தொட்டும் வலீத் பின் முஸ்லிம் அறிவிக்கின்றார் : அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு... பின்னர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அந்த உரையை முழுமையாகக் கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள்.(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் இப்னு முஸ்லிம்(ரஹ்) கூறினார்:) நான் அவ்ஸாயீ(ரஹ்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு எழுதிக் கொடுங்கள்' என்னும் அபூ ஷாஹ்(ரலி) அவர்களின் சொல் எதைக் குறிக்கிறது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத்தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்)'' என்று பதிலளித்தார்கள். (புஹாரி 2434, முஸ்லிம் 1355).

இரண்டாம் கட்டம்

தாபிஈன்களின் இறுக்காலத்தில் ஹதீஸ் தொகுக்கப்படல். ஹதீஸ்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டது இக்கட்டத்தின் தனித்துவமாகும். இருப்பினும் இதற்கென குறிப்பிட்ட ஒழுங்கு வரிசை ஒன்று இருக்கவில்லை. இப்பணிக்கு முதலில் முக்கியத்துவமளித்தவர் இமாம் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களாகும். அவர் இமாம்களான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ, அபூ பக்ர் பின் ஹஸ்ம் ஆகியோருக்கு ஹதீஸ்களை ஒன்று சேர்த்துமாறு பணித்தார்கள். "இறைத்தூதர் அவர்களின் ஹதீஸ்களைத் தேடி ஒன்று சேர்த்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அறிவு மங்கிப்போவதையும், அறிஞர்கள் மரணிப்பதையும் நான் அஞ்சுகின்றேன்" என எல்லாப் பகுதிகளுக்கும் எழுதியனுப்பினார்கள்.

இவர்களின் பணிப்புரைக்கேற்ப முதலில் ஹதீஸ்களைத் தொகுத்தவர் இமாம் இப்னு ஷஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களாகும். இதுதான் பொதுவாக ஸுன்னா மற்றும் ஹதீஸ்களைத் தொகுப்பதன் தொடக்கமாகும்.

மூன்றாம் கட்டம் :

வாசிக்க முடியுமான நூல்கள் அமைப்பில் ஸுன்னாவைத் தொகுத்தல். இது ஒன்றோ இறைநம்பிக்கை, அறிவு, சுத்தம், தொழுகை என தலைப்பு வாரியாகவோ, அல்லது, அறிவிப்பாளர்கள் அடிப்படையிலோ தொகுக்கப்பட்டிருக்கும். இரண்டாவது வகையில் அபூபக்ர் (ரலி) அறிவித்த ஹதீஸ்கள், பின் உமர் (ரலி) அறிவித்த ஹதீஸ்கள் என வரிசையாகத் தொகுக்கப்பட்டிருக்கும்.

இக்கட்டத்தில்தான் இமாம் மாலிக் (ரஹ்) "முவத்தா" எனும் ஹதீஸ் நூலை இயற்றினார்கள். இக்கட்டத்தில் தலைப்புகள் வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டது சிறப்பம்சமாகும். அத்துடன் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளுடன் ஸஹாபாக்கள், தாபிஈன்களுடைய வார்த்தைகள், மார்க்கத் தீர்ப்புகளும் கலந்தே தொகுக்கப்பட்டன.

நான்காம் கட்டம் :

இது தேவைக்கேற்ப சிறிதளவைத் தவிர நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களைப் பிற ஸஹாபாக்கள், தாபிஈன்களின் கூற்றுக்களுடன் கலக்காது தனியாகத் தொகுத்து, நூலுருப்படுத்தப்பட்ட காலமாகும். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு ஆரம்பமாகியதுடன் இக்கட்டம் ஆரம்பமாகியது. முஸ்னத் அஹ்மத், முஸ்னத் ஹுமைதி போன்றன இக்காலத்தில் தொகுக்கப்பட்ட பிரபலமான ஹதீஸ் தொகுப்புக்களாகும்.

பின்னர் ஹதீஸ் நூலுருப்படுத்தல் ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதன் உச்சத்தையே தொட்டது. இமாம் புஹாரி ஸஹீஹுல் புஹாரியைத் தொகுத்தார்கள், இமாம் முஸ்லிம் ஸஹீஹ் முஸ்லிமைத் தொகுத்தார்கள். ஸுனன் அபீதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜாஃ, ஸுனன் தாரிமீ போன்ற ஸுனன்களும், மற்றும் பல பிரபலமான ஹதீஸ் நூல்களும் இக்காலத்திலேயே தொகுக்கப்பட்டன.

முக்கியமான ஹதீஸ் தொகுப்புகள்

அதிகமான ஹதீஸ் தொகுப்புகளில் ஆறு நூல்கள் மிகவும் பிரபலமடைந்தன. அவை : ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபீ தாவூத், ஸுனன் திர்மிதி, ஸுனன் நஸாஈ, ஸுனன் இப்னுமாஜா ஆகியனவாகும்.

அத்துடன் ஸுனன் தாரிமீ, முஸ்னத் அஹ்மத், முவத்தா மாலிக் ஆகிய நூல்களும் ஹதீஸ் தொகுப்புகளில் பிரபலமடைந்தன.

ஆறு நூல்களைப் பற்றிய அறிமுகம்

இச்சமூகத்தினர் ஏற்றுக் கொண்ட ஹதீஸ் நூல்களில் மிகவும் பிரபலமானவை ஆறு நூல்களாகும். அவை :

1. ஸஹீஹுல் புஹாரி

இது அடிப்படைக் கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பரிவர்த்தனைகள், போர்கள், குர்ஆன் விளக்கவுரை, சிறப்புக்கள் போன்ற அனைத்து வித தலைப்புகளிலும் நூலாசிரியருக்குக் கிடைத்த நபி (ஸல்) அவர்களின் அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று திரட்டிய ஹதீஸ் நூல்களில் ஒன்றாகும். இதில் ஸஹீஹான (ஆதாரபூர்வமான) ஹதீஸ்களை மாத்திரமே உள்ளடக்குவேன் என்ற கட்டுப்பாட்டுனே நூலாசிரியர் இதனைத் தொகுத்துள்ளார்கள். அல்குர்ஆனுக்கு அடுத்து இதுவே மிக ஆதாரபூர்வமான நூலாகும்.

2. ஸஹீஹ் முஸ்லிம்

இதுவும் அனைத்துத் தலைப்புகளையும் ஒருங்கிணைத்த நூல்களில் ஒன்றாகும். இதன் நூலாசிரியரும் ஸஹீஹான (ஆதாரபூர்வமான) ஹதீஸ்களை மாத்திரமே உள்ளடக்குவேன் என்ற கட்டுப்பாட்டுன் இதனைத் தொகுத்துள்ளார்கள். இருப்பினும் ஹதீஸை ஸஹீஹாக்குவதற்கு இமாம் புஹாரி இட்ட நிபந்தனைகளை விட இமாம் முஸ்லிமின் நிபந்தனைகள் சற்று தளர்வுப் போக்குடையதாகும். ஸஹீஹுல் புஹாரிக்கடுத்து இதுவே இரண்டாவது நூலாகும்.

3. அபூ தாவூத் ஸுலைமான் பின் அஷ்அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ (மரணம் 275ஹி)யின் ஸுனன்

இது பிக்ஹு (மார்க்க சட்டக்கலை) தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட ஸுனன் வகையைச் சேர்ந்த நூலாகும். இதில் ஸஹீஹ், ஹஸன் ஆகிய இரு தரங்களையும் கொண்ட ஹதீஸ்களைத் திரட்டியுள்ளார்கள். பலவீனமான ஹதீஸ்களை அரிதாகவே கூறியுள்ளார்கள்.

4. ஸுனன் திர்மிதி

இதுவும் அடிப்படைக் கொள்கைகள், வணக்க வழிபாடுகள், பரிவர்த்தனைகள், போர்கள், குர்ஆன் விளக்கவுரை, சிறப்புக்கள் போன்ற அனைத்து வித தலைப்புகளிலும் நூலாசிரியருக்குக் கிடைத்த நபி (ஸல்) அவர்களின் அனைத்து ஹதீஸ்களையும் ஒன்று திரட்டிய ஹதீஸ் நூல்களில் ஒன்றாகும். இருப்பினும் ஸஹீஹான (ஆதாரபூர்வமான) ஹதீஸ்களை மாத்திரமே உள்ளடக்குவேன் என்ற கட்டுப்பாடின்றி ஸஹீஹ், ஹஸன், ழஈப் (பலவீனமானவை) என மூன்று வகை ஹதீஸ்களையும் உள்ளடக்கியுள்ளார்கள்.

5. அபூ அபூ அப்திர் ரஹ்மான் அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாஈ (மரணம் 305ஹி)யின் ஸுனன் :

இதுவும் பிக்ஹ் தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும். இதில் ஸஹீஹ், ஹஸன், ழஈப் (பலவீனமானவை) என மூன்று வகை ஹதீஸ்களும் உள்ளன.

6. முஹம்மத் பின் யஸீத் பின் மாஜா (மரணம் 273ஹி)வின் ஸுனன் :

இதுவும் பிக்ஹ் தலைப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும். இதில் ஸஹீஹ், ஹஸன், ழஈப் (பலவீனமானவை), மிகவும் பலவீனமானவை என நான்கு வகை ஹதீஸ்களும் உள்ளன.

இமாம் அபுல் ஹஜ்ஜாஜ் அல்மிஸ்ஸீ (மரணம் 742ஹி) கூறினார்கள் :

ஸுன்னாவைப் பொறுத்தவரை, அதற்கென அல்லாஹ் அறிவார்ந்த பாதுகாவலர்களையும், பாண்டித்தியம் பெற்ற நிபுணர்களையும், நுணுக்கமாக செயல்படக்கூடிய விமர்சகர்களையும் ஏற்பாடு செய்துள்ளான். அவர்கள் அதை விட்டும் வழிகேடர்களின் திரிபுகள், செல்லாதவர்களின் கருத்துத் திருட்டு, அறிவீனர்கள் மாற்றுக்கருத்து போன்றவற்றை அப்புறப்படுத்துகின்றார்கள். அவர்கள் அவற்றைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றை இழக்க நேரிடும் என்ற அச்சத்தாலும் அவற்றைத் தொகுப்பதில் பல முறைகளைக் கையாண்டார்கள். நூலுருப்படுத்துவதில் பல வழிகளையும், விதங்களையும் பயன்படுத்தினார்கள். அவற்றில் மிக அழகிய தொகுப்பு, திறம்வாய்ந்த கோர்வை, மிகச் சரியானது, தவறுகள் மிகக் குறைந்தது, மிகப் பரந்த பலனுள்ளது, நல்ல பயன்களைத் தரக்கூடியது, செலவு குறைந்த அதேவேளை பரகத் மிக்கது, உடன்பட்டோர், முரண்பட்டோர் அனைவராலும் அழகிய முறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது, பொதுமக்கள், அறிஞர்கள் அனைவராலும் மதிக்கப்படுவது என பல பண்புகளையும் கொண்ட சிறந்த தொகுப்பு அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாஈல் அல்புஹாரீ அவர்களின் "ஸஹீஹுல் புஹாரி"யாகும். அதற்கடுத்து அபுல் ஹுஸைன் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் அந்நைய்ஸாபூரீ அவர்களின் "ஸஹீஹ் முஸ்லிம்" ஆகும். இவ்விரண்டிற்கும் அடுத்து அபூ தாவூத் ஸுலைமான் பின் அஷ்அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ அவர்களின் "ஸுனன்" ஆகும். பின்னர் அபூ ஈஸா முஹம்மத் பின் ஈஸா அத்திர்மிதீ அவர்களின் "ஜாமிஃ" ஆகும். அதற்கடுத்து அபூ அப்திர்ரஹ்மான் அஹ்மத் பின் ஷஐப் அந்நஸாஈ அவர்களின் "ஸுனன்" ஆகும். இறுதியாக மேற்கண்டவர்களின் தரத்தை அடையாவிட்டாலும் இப்னு மாஜா அல்கஸ்வீனீ என அறியப்படும் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அவர்களின் "ஸுனன்" ஆகும்.

மேற்கண்ட ஆறு நூல்களில் ஒவ்வொன்றிற்கும் தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றைத் துறைசார்ந்தவர்கள் அறிகின்றனர். மக்கள் மத்தியில் இந்நூல்கள் பிரபலமடைந்தன, இஸ்லாமிய நாடுகளில் பரவின. அதன் மூலம் பாரியளவில் பயன்பெறப்பட்டது. இவற்றைக் கற்பதில் மாணவர்கள் ஆவல் கொண்டனர். (பார்க்க : தஹ்தீபுல் கமால் 1/ 147).

ஸஹீஹான மற்றும் ழஈபான (பலவீனமான) ஹதீஸ்களுக்கு இடையில் வேறு பிரித்தல்

ஹதீஸ் கலையைத் துறை போகக் கற்ற, துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்வதன் மூலம் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஸஹீஹானதா? அல்லது தட்டப்பட வேண்டிய ழஈபானதா( பலவீனமானது) என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் ஹதீஸ்களை அவற்றில் அறிவிப்பாளர் வரிசை, கருப்பொருள் என்பவற்றை, ஏற்பதா மறுப்பதா எனும் கோணத்தில் ஆராய்ந்துள்ளார்கள்.

இது பற்றி எழுதப்பட்ட பல நூல்கள், தொகுப்புகள் உள்ளன. அதேபோன்று பலவீனமான ஹதீஸ்களிலிருந்து ஆதரபூர்வமான ஹதீஸ்களை வேறுபிரித்தறியத் துணைபுரியும் பல நம்பகமான மின்னனு செயலிகள் மற்றும் தளங்கள் உள்ளன.

ஹதீஸ்களின் தரங்களை அறியத் துணைபுரியும் சில மின்னனு செயலிகள் மற்றும் தளங்கள்.

"துரர் ஸனிய்யா" எனும் இணையத்தளத்தில் உள்ள "அல்மவ்ஸூஅதுல் ஹதீஸிய்யா" எனும் ஹதீஸ் களஞ்சியம். இதில் இலட்சக் கணக்கிலான ஹதீஸ்களும் அவற்றினுடைய தரங்களும் (முன்னைய, பிந்திய, சமகாலத்து அறஞர்கள் வழங்கிய தீர்ப்புகள்) உள்ளன. பின்வரும் முகவரியினூடாக அதற்குச் செல்லலாம் : https://dorar.net/hadith

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்